ராகு கேது பெயர்ச்சி 2026: ரிஷப ராசிக்கு இனி தொட்டதெல்லாம் வெற்றி.. வேலையில் வரும் அதிரடி மாற்றம்

Subscribe to Oneindia Tamil

ராகு கேது பெயர்ச்சி 2026: வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி ராகு மகர ராசிக்குள்ளும், கேது பகவான் கடக ராசிக்குள்ளும் பெயர்ச்சியாகியுள்ளனர். நிழல் கிரகங்கள் என்று அழைக்கப்படும் இந்த ராகு கேது பெயர்ச்சியால் ரிஷப ராசிக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி ராகு, கேது மாலை 5.14 மணியளவில் பெயர்ச்சியடைந்துள்ளனர். 9 கிரகங்களில் ராகு கேது ஆகிய 2 பாம்பு கிரகங்களுக்கு கூடுதலான சக்தி, வலிமை உள்ளது. திருக்கணிதப் பஞ்சாங்கத்தின்படி டிசம்பர் 5 ஆம் தேதி ராகு கேது பெயர்சி நிகழ்கிறது.

rahu-ketu-peyarchi-2026-rishabam-rasi-palan-career-growth-new-business-opportunities-and-remedie

குரு பகவான், சுக்கிரனாக இருந்தாலும், ராஜ கிரக இருந்தாலும் சரி எந்த கிரகத்துடன் ராகு கேது சேர்கிறதோ அந்த கிரகத்தின் செயல்பாடுகளை இந்தப் பாம்பு கிரங்களுக்கு முடக்கும் சக்தி உள்ளது. பெரிய கிரகங்களைக் கூட மடைமாற்றம் செய்யக்கூடிய வலிமை கொண்டது ராகு கேது. இன்று முதல் ஒன்றரை வருடங்களுக்கு ராகுவும் கேதுவும் பலனைத் தரப்போகின்றனர்.

கடந்த ஒன்றரை வருடமாக கும்ப ராசியில் ராகு பகவான் இருந்தார். கும்ப ராசியை விட்டு மகர ராசிக்குள் ராகு பகவான் அமர்ந்துள்ளார். அங்கு அமர்ந்து ஒன்றரை ஆண்டுகளுக்குப் பலன்களைத் தரப்போகிறார். சிம்மத்தில் அமர்ந்திருந்த கேது பகவான் கடக ராசிக்குள் நுழைந்துள்ளார். கடகத்தில் கேது அமர்ந்து அடுத்த ஒன்றரை ஆண்டுகளுக்கு பலன்களைத் தரப்போகின்றனர். அந்த வகையில், இந்த ராகு கேது பெயர்ச்சியில் ரிஷப ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து இந்தப் பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

ரிஷப ராசி பலன்

ரிஷப ராசியினருக்கு கடந்த ஒன்றரை வருடமாக 4 ஆம் இடத்தில் கேதுவும், 10 ஆம் இடத்தில் ராகுவும் இருந்து பெரிய பாதிப்புகளைச் சந்தித்திருப்பீர்கள். எப்போதும் ஒரு பதட்டம், பயத்துடன் இருந்திருப்பீர்கள். அந்த நிலைமைகள் பரிபூரணமாக நீங்கும். 4 ஆம் இடத்தில் இருந்த கேது 3 ஆம் வீட்டுக்குள் வருகிறார். 3 என்பது தைரியம், வீரியம், வைராக்கியம், பெரிய பொறுப்புகள், பதவிகள் கிடைக்கும்.

விலை உயர்ந்த பொருள்கள்

அரைகுறையாக பாதியில் நின்று போன வேலைகள் எல்லாம் எளிதில் முடிப்பீர்கள். இளைய சகோதரர்களுடன் கருத்து மோதல் வருவதற்கான வாய்ப்புள்ளதால் தம்பி, தங்கைகளுடன் நிதானமாகப் பேசுவது நன்மை பயக்கும். விலையுயர்ந்த பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். அம்மாவுக்கு இருந்து வந்த உடல்நல பாதிப்புகள் நீங்கும். தாயாரின் உடல்நிலைமை சீராகும்.

வழக்குகளில் வெற்றி

வீடு, சொத்து சம்பந்தப்பட்ட வழக்குகள் ஒன்றன்பின் ஒன்றாக முடியும். வழக்குகளில் ஜெயிப்பதற்கான வாய்ப்பு ஏற்படும். வருமானம் படிப்படியாக அதிகரிக்கும். ராகு இதுவரை 10 ஆம் வீட்டில் அமர்ந்திருந்தார். அதனால், ஒழுங்காக வேலைக்குச் செல்ல முடியாத நிலை, சம்பளம் ஒழுங்காக கிடைக்காத நிலை, அவமானம் போன்றவற்றை சந்தித்து வந்திருப்பீர்கள். அந்த நிலைமைகள் மாறி உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நல்ல பெயர் கிடைக்கும்.

பரிகாரம்

புதிய வேலை அமையும் வாய்ப்பு ஏற்படும். சம்பள பாக்கித் தொகைக்கு கைக்கு வரும். சின்ன சின்ன சலுகைகள் கிடைக்கும். பதவி உயர்வுகள் கிடைக்கும். 9 ஆம் வீட்டில் ராகு இருப்பதால் அப்பாவின் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது நல்லது. தந்தை வழி சொத்துக்கள், பாகப் பிரிவினைகள் அவை எல்லாம் சுமூகமாக முடியும். எல்லா வகையிலும் வெற்றிகள் வந்து சேரும். திருக்களஞ்சேரி நாகநாத சுவாமிகளை வழிபாடு செய்வது ஏற்றத்தைத் தரும். துவரம்பருப்பு தானமாகக் கொடுப்பது நன்மையை ஏற்படுத்தும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+