சிம்ம ராசிக்கு இனி ராஜயோகம் தான்.. பயம், அவமானம் நீங்கி வெற்றிகள் தேடி வரும்

Subscribe to Oneindia Tamil

ராகு கேது பெயர்ச்சி 2026: வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி ராகு மகர ராசிக்குள்ளும், கேது பகவான் கடக ராசிக்குள்ளும் பெயர்ச்சியாகியுள்ளனர். நிழல் கிரகங்கள் என்று அழைக்கப்படும் இந்த ராகு கேது பெயர்ச்சியால் சிம்ம ராசிக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள் குறித்து இந்த ஜோதிடக் கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி ராகு, கேது மாலை 5.14 மணியளவில் பெயர்ச்சியடைந்துள்ளனர். 9 கிரகங்களில் ராகு கேது ஆகிய 2 பாம்பு கிரகங்களுக்கு கூடுதலான சக்தி, வலிமை உள்ளது. திருக்கணிதப் பஞ்சாங்கத்தின்படி டிசம்பர் 5 ஆம் தேதி ராகு கேது பெயர்ச்சி நிகழ்கிறது.

rahu-ketu-peyarchi-2026-simmam-rasi-palan-career-growth-new-business-opportunities-and-remedies

குரு பகவான், சுக்கிரனாக இருந்தாலும், ராஜ கிரகமாக இருந்தாலும் சரி, எந்த கிரகத்துடன் ராகு கேது சேர்கிறதோ அந்த கிரகத்தின் செயல்பாடுகளை இந்தப் பாம்பு கிரகங்களுக்கு முடக்கும் சக்தி உள்ளது. பெரிய கிரகங்களைக் கூட மடைமாற்றம் செய்யக்கூடிய வலிமை கொண்டது ராகு கேது. இன்று முதல் ஒன்றரை வருடங்களுக்கு ராகுவும் கேதுவும் பலனைத் தரப்போகின்றனர்.

கடந்த ஒன்றரை வருடமாக கும்ப ராசியில் ராகு பகவான் இருந்தார். கும்ப ராசியை விட்டு மகர ராசிக்குள் ராகு பகவான் அமர்ந்துள்ளார். அங்கு அமர்ந்து ஒன்றரை ஆண்டுகளுக்குப் பலன்களைத் தரப்போகிறார். சிம்மத்தில் அமர்ந்திருந்த கேது பகவான் கடக ராசிக்குள் நுழைந்துள்ளார். கடகத்தில் கேது அமர்ந்து அடுத்த ஒன்றரை ஆண்டுகளுக்கு பலன்களைத் தரப்போகிறார். அந்த வகையில், இந்த ராகு கேது பெயர்ச்சியில் சிம்ம ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து இந்தப் பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

சிம்ம ராசி பலன்

சிம்ம ராசியினருக்கு மிகப்பெரிய யோகம் வரக்கூடிய காலகட்டம். கடந்த மூன்றரை ஆண்டுகளாக ராகு, கேதுவால் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வந்திருப்பீர்கள். குடும்பத்தில், வெளியிடத்தில் பிரச்சனை, அவமானம், அசிங்கம், நம்பிக்கை துரோகத்தை சந்தித்திருப்பீர்கள். அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் காலகட்டமாக இருக்கும். ராசியை விட்டு கேது விலகுவதால் இதுவரை இருந்து வந்த பயம், நடுக்கம், தைரியமின்மை விலகும்.

தைரியம் பிறக்கும்

புதிய தைரியம் பிறக்கும். முடிவுகளை சரியாக எடுப்பீர்கள். எல்லா காரியங்களிலும் வெற்றி பெறும் வாய்ப்பு ஏற்படும். இழுபறியாக இருந்து வந்த வேலைகள் முடியும். கோபம், சிடுசிடுப்புத் தன்மை போன்றவை குறையும். புன்சிரிப்புடன் காணப்படுவீர்கள். எங்கு சென்றாலும் வெற்றி பெறக்கூடிய காலகட்டமாக இருக்கும். உடம்பில் சூடாக இருந்த தன்மை நீங்கும். ராகு இதுவரை 7 ஆம் இடத்தில் இருந்து கணவன், மனைவிக்குள் பிரச்சனைகளைத் தந்திருப்பார்.

குடும்பத்தில் மகிழ்ச்சி

இனிமேல் கணவன், மனைவிக்குள் அந்நியோன்யம், நெருக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி பிறக்கும். ராகு நல்ல இடத்தில் வந்து அமர்வதால் எல்லா வகையிலும் நன்மைகளைத் தருவார். கடன் பிரச்சனைகள் தீரும். நோய் நொடிகள் விலகி நன்மை அடைவீர்கள். பெரிய பொறுப்புகள், பதவிகள் வந்து சேரும். எல்லா வகையிலும் ஜெயித்துக் காட்டுவீர்கள்.

வழிபாடு

பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். ராகு கேது பெயர்ச்சி மிகப்பெரிய நன்மையையும், ராஜயோகத்தையும் தரும். சென்னை அருகில் உள்ள குன்றத்தூரில் ஸ்ரீ காமாட்சி சமேதரராக அருள்பாலிக்கும் ஸ்ரீ நாகேஸ்வரரை வழிபாடு செய்வது சகலவித நன்மைகளைத் தரும். கோதுமை அல்லது கோதுமை மாவு தானமாகக் கொடுப்பது மேன்மையைத் தரும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+