ராகு கேது பெயர்ச்சி 2026: துலாம் ராசிக்கு சொந்த வீடு யோகம்.. வேலையில் மட்டும் கவனம்
ராகு கேது பெயர்ச்சி 2026: வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி ராகு மகர ராசிக்குள்ளும், கேது பகவான் கடக ராசிக்குள்ளும் பெயர்ச்சியாகியுள்ளனர். நிழல் கிரகங்கள் என்று அழைக்கப்படும் இந்த ராகு கேது பெயர்ச்சியால் துலாம் ராசிக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள் குறித்து இந்த ஜோதிடக் கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி ராகு, கேது நேற்று மாலை 5.14 மணியளவில் பெயர்ச்சியடைந்துள்ளனர். 9 கிரகங்களில் ராகு கேது ஆகிய 2 பாம்பு கிரகங்களுக்கு கூடுதலான சக்தி, வலிமை உள்ளது. திருக்கணிதப் பஞ்சாங்கத்தின்படி டிசம்பர் 5 ஆம் தேதி ராகு கேது பெயர்ச்சி நிகழ்கிறது.

குரு பகவான், சுக்கிரனாக இருந்தாலும், ராஜ கிரகமாக இருந்தாலும் சரி, எந்த கிரகத்துடன் ராகு கேது சேர்கிறதோ அந்த கிரகத்தின் செயல்பாடுகளை இந்தப் பாம்பு கிரகங்களுக்கு முடக்கும் சக்தி உள்ளது. பெரிய கிரகங்களைக் கூட மடைமாற்றம் செய்யக்கூடிய வலிமை கொண்டது ராகு கேது. இன்று முதல் ஒன்றரை வருடங்களுக்கு ராகுவும் கேதுவும் பலனைத் தரப்போகின்றனர்.
கடந்த ஒன்றரை வருடமாக கும்ப ராசியில் ராகு பகவான் இருந்தார். கும்ப ராசியை விட்டு மகர ராசிக்குள் ராகு பகவான் அமர்ந்துள்ளார். அங்கு அமர்ந்து ஒன்றரை ஆண்டுகளுக்குப் பலன்களைத் தரப்போகிறார். சிம்மத்தில் அமர்ந்திருந்த கேது பகவான் கடக ராசிக்குள் நுழைந்துள்ளார். கடகத்தில் கேது அமர்ந்து அடுத்த ஒன்றரை ஆண்டுகளுக்கு பலன்களைத் தரப்போகிறார். அந்த வகையில், இந்த ராகு கேது பெயர்ச்சியில் துலாம் ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து இந்தப் பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
துலாம் ராசி பலன்
துலாம் ராசியினருக்கு கடந்த ஒன்றரை வருடமாக 5 ஆம இடத்தில் ராகுவும், 11 ஆம் இடத்தில் கேதுவும் அமர்ந்து நல்ல பலன்களைக் கொடுத்திருப்பார்கள். ஆனால், பிள்ளைகளால் செலவுகள், அலைச்சல்கள் இருந்திருக்கும். பணம் வந்திருந்தாலும் கூட சேர்த்து வைக்க முடியாதபடி செலவுகள் ஒருபக்கம் இருந்து கொண்டே இருந்திருக்கும்.
சொந்த வீடு யோகம்
இப்போது ராகு 4 ஆம் இடத்துக்கும், 10 ஆம் வீட்டில் கேதுவும் அமருகின்றனர். ராகு 4 ஆம் இடத்தில் அமருவதால் நல்ல பலன்களைக் கொடுப்பார். சுக்கிரனுடைய ராசியில் துலாம் ராசியினர் பிறந்துள்ளதால் அசுர கிரகமாகிய ராகு உங்களுக்கு நல்லது செய்வார். சொந்த வீடு வாங்குவதற்கான வாய்ப்பு ஏற்படும். முயற்சி செய்தால் கண்டிப்பாக அமையும். வண்டி, வாகனங்களை வாங்கி மகிழ்வீர்கள்.
பிள்ளைகளுக்கு திருமண யோகம்
பிள்ளைகளுக்குத் திருமணம் செய்வீர்கள். வீடு மாறுவீர்கள். வசதி வாய்ப்புகள் அதிகரிக்கும். அதே நேரத்தில் அம்மாவின் ஆரோக்கியம் சிறிது பாதிப்பு ஏற்படும். உங்களுடைய ஆரோக்கியத்திலும் சிறிது கவனம் செலுத்துவது நல்லது. தேவையில்லாத பழக்கவழக்கங்கள் வர வாய்ப்புள்ளதால் அதனைத் தவிர்ப்பது நல்லது. கேது பகவான் 10 ஆம் இடத்தில் வந்து அமருவதால் உத்தியோகத்தில் இருக்கும் அதிகாரி ஏதாவது சொன்னால் எதிர்த்துப் பேசாமல் கேட்டுக் கொள்வது நன்மை பயக்கும்.
செலவு
சிறிய சிறிய செலவுகள் அதிகரிக்கும். வீண் வாக்குறுதிகள் கொடுப்பதைத் தவிர்ப்பது நல்லது. வீண் செலவுகளை குறைப்பது நன்மை பயக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் இணக்கமாகச் செல்வது நன்மை பயக்கும். பெரிய பாதிப்புகள் எதுவும் ஏற்படும். ஆட்குறைப்பு நடவடிக்கை வரும்போது உங்களை வேலையை விட்டு செல்லச் சொல்வார்களோ என்பது போன்ற பயம் ஏற்படும். சிலர் சொந்தத் தொழில் தொடங்குவதற்கான வாய்ப்பு ஏற்படும்.
வழிபாடு
10 ஆம் இடத்தில் கேது இருப்பதால் வேலையில் மிகுந்த கவனம் தேவை. ஆனால், சொந்த தொழில் பாக்கியமும் உண்டு. குடும்பத்தில் சந்தோஷம் ஏற்படும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகில் உள்ள நாகமுகுந்தன்குடியில் அமைந்துள்ள சிவபெருமான், அம்பாளை சென்று வழிபாடு செய்வது ஏற்றத்தைத் தரும். உளுந்தம்பருப்பு தானமாகக் கொடுப்பது மேன்மையைத் தரும்.


Click it and Unblock the Notifications
