ராகு கேது பெயர்ச்சி 2026: ஜாக்பாட் அடிக்கும் விருச்சிக ராசி.. புது வீடு புது கார் செட்டிலாகும் யோகம்

Subscribe to Oneindia Tamil

ராகு கேது பெயர்ச்சி 2026: வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி ராகு மகர ராசிக்குள்ளும், கேது பகவான் கடக ராசிக்குள்ளும் பெயர்ச்சியாகியுள்ளனர். நிழல் கிரகங்கள் என்று அழைக்கப்படும் இந்த ராகு கேது பெயர்ச்சியால் விருச்சிக ராசிக்கு கிடைக்கும் பலன்கள், பரிகாரங்கள் குறித்து இந்த ஜோதிடக் கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.

வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி ராகு, கேது நேற்று மாலை 5.14 மணியளவில் பெயர்ச்சியடைந்துள்ளனர். 9 கிரகங்களில் ராகு கேது ஆகிய 2 பாம்பு கிரகங்களுக்கு கூடுதலான சக்தி, வலிமை உள்ளது. திருக்கணிதப் பஞ்சாங்கத்தின்படி டிசம்பர் 5 ஆம் தேதி ராகு கேது பெயர்ச்சி நிகழ்கிறது.

rahu-ketu-peyarchi-2026-viruchigam-rasi-palan-career-growth-new-business-opportunities-and-remed

குரு பகவான், சுக்கிரனாக இருந்தாலும், ராஜ கிரகமாக இருந்தாலும் சரி, எந்த கிரகத்துடன் ராகு கேது சேர்கிறதோ அந்த கிரகத்தின் செயல்பாடுகளை இந்தப் பாம்பு கிரகங்களுக்கு முடக்கும் சக்தி உள்ளது. பெரிய கிரகங்களைக் கூட மடைமாற்றம் செய்யக்கூடிய வலிமை கொண்டது ராகு கேது. இன்று முதல் ஒன்றரை வருடங்களுக்கு ராகுவும் கேதுவும் பலனைத் தரப்போகின்றனர்.

கடந்த ஒன்றரை வருடமாக கும்ப ராசியில் ராகு பகவான் இருந்தார். கும்ப ராசியை விட்டு மகர ராசிக்குள் ராகு பகவான் அமர்ந்துள்ளார். அங்கு அமர்ந்து ஒன்றரை ஆண்டுகளுக்குப் பலன்களைத் தரப்போகிறார். சிம்மத்தில் அமர்ந்திருந்த கேது பகவான் கடக ராசிக்குள் நுழைந்துள்ளார். கடகத்தில் கேது அமர்ந்து அடுத்த ஒன்றரை ஆண்டுகளுக்கு பலன்களைத் தரப்போகிறார். அந்த வகையில், இந்த ராகு கேது பெயர்ச்சியில் விருச்சிக ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து இந்தப் பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.

விருச்சிக ராசி பலன்

விருச்சிக ராசியினருக்கு கடந்த ஒன்றரை வருடமாக பல்வேறு சிக்கல்களைத் தந்து கொண்டிருந்த ராகுவும், கேதுவும் நல்ல பலன்களைத் தரப் போகின்றனர். ராகு பகவான் 3 ஆம் வீட்டில் வந்து அமருகிறார். இதுவரை இருந்து வந்த கஷ்டங்கள் எல்லாம் விலகும். வேலை வேலை, விழாக்களில் பங்கேற்பது என பெரும் அலைச்சல்களை சந்தித்து வந்திருப்பீர்கள்.

புது வீடு, கார்

புதிய வண்டியாக இருந்தாலும் நிறைய செலவுகள், பழுதுகள் ஆகிறதே என்ற நிலைமை மாறும். புதிய வண்டிகள் மாறுவதற்கான வாய்ப்புள்ளது. வீடு மாறுவது, புதிய வீடுகள் வாங்குவதற்கான யோகம் உண்டாகும். சொத்துபத்துக்கள் சேருவது மட்டுமல்லாமல், இனி சேமிப்புகள் அதிகரிக்கும். கையில் பணம் தங்க ஆரம்பிக்கும். நகைகளை வாங்குவதற்கான அமைப்பு உள்ளது.

புதிய பதவி, பொறுப்பு

உத்தியோகத்தில் மறைமுக, நேரடி எதிரிகளைக் கொடுத்துக் கொண்டிருந்த கேது இப்போது 9 ஆவது வீட்டுக்குள் வந்து அமருவதால் உத்தியோகத்தில் உங்கள் கை ஓங்கும். எல்லா வகையிலும் செல்வாக்கு ஏற்படும். பெரிய பொறுப்புகள், பதவிகள் வந்து சேரும். அப்பாவின் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது நன்மை பயக்கும். பெரிய நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்கான வாய்ப்பு ஏற்படும்.

பணவரவு

போட்டிகள், தேர்வுகள் என எல்லாவற்றிலும் வெற்றிகள் ஏற்படும். தேர்தலில் நின்றால் கூட ஜெயித்துக் காட்டும் அமைப்பு ஏற்படும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பண வரவு நன்றாக இருக்கும். எடுத்த காரியங்களில் ஜெயம் ஏற்படும். பரமக்குடியில் இருந்து 12 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள நயினார் கோயிலில் உள்ள செளந்தர நாயகி சமேதரராக ஸ்ரீ நாகராஜ சுவாமிகளாக சிவபெருமான் காட்சியளிக்கிறார்.

பரிகாரம்

அந்தக் கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்வது சகலவித நன்மைகளையும் அள்ளித் தரும். வாழைப்பழம் தானமாகக் கொடுப்பது ஏற்றத்தைத் தரும். குடும்பத்தில் மகிழ்ச்சி தரக்கூடிய காலகட்டமாக இந்த ராகு கேது பெயர்ச்சி காலகட்டம் உங்களுக்கு அமையும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+