ராகு கேது பெயர்ச்சி 2026: துலாம், விருச்சிகம், தனுசு ராசிக்கு காத்திருக்கும் யோகம்
ராகு கேது பெயர்ச்சி பலன் 2026: நிழல் கிரகங்கள், சர்ப்ப கிரகங்கள் என்று அழைக்கப்படும் ராகு கேதுவின் பெயர்ச்சியானது நவம்பர் 13 ஆம் தேதி (ஐப்பசி 27) மாலை 5.14 மணியளவில் நடைபெறவுள்ளது. இந்த ராகு கேது பெயர்ச்சியால் துலாம், விருச்சிகம், தனுசு ஆகிய 3 ராசியினருக்கு கிடைக்கும் நற்பலன்கள், கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள் வழிபாடுகள் குறித்து விரிவாகத் தெரிந்து கொள்ளலாம்.
சர்ப்ப கிரகங்களில் ராகுவும் கேதுவும் சமசப்தம கிரகங்களாகும். 210 டிகிரிக்குள் இந்த கிரகங்களின் பார்வை இருக்கும். நிழல் கிரகங்கள் என்று அழைக்கப்படும் ராகு கேது கிரகங்கள் 18 மாதங்களுக்கு ஒருமுறை பெயர்ச்சியாவது வழக்கம். வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி ஐப்பசி 27, நவம்பர் 13 ஆம் தேதி மாலை 5.14 மணியளவில் ராகு பகவான் அவிட்டம் மூன்றாம் பாதம், கும்பத்தில் இருந்து அவிட்டம் 2 பதமான மகரத்திற்கு பெயர்ச்சியாகிறார்.

கேது பகவான் மகம் 1 ஆம் பாதம் சிம்ம ராசியில் இருந்து, ஆயில்யம் 4 பாதமான கடக ராசிக்குப் பெயர்ச்சியாகிறார். இந்த சமயத்தில் கடகத்தில் குரு, மீனத்தில் சனி உள்ளனர். அந்த வகையில், இந்த ராகு கேது பெயர்ச்சியால் துலாம், விருச்சிகம், தனுசு ஆகிய 3 ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள் குறித்துப் பார்க்கலாம்.
துலாம்
துலாம் ராசியினருக்கு ராகவேந்திரர், சாய்பாபா, ரமண மகரிஷி போன்ற மகான்களை வழிபாடு செய்வது ஏற்றத்தைத் தரும். வியாழக்கிழமை தோறும் தெய்வ வழிபாடுகளைச் செய்வது சகலவித நன்மைகளைத் தரும். ராகு கேதுவால் நிறைய கெடுதல்கள் ஏற்படும் என்ற அச்சம் தேவையில்லை. சனி பகவான் அடுத்த ஒன்றரை ஆண்டுக்கு 6 ஆம் இடத்தில் இருந்து பலத்தைக் கொடுப்பார்கள்.
அதிர்ஷ்டங்கள் கிடைக்கும் காலகட்டமாக இருக்கும். ஏற்றம் நிறைந்த காலகட்டமாக இருக்கும். குரு பகவான் 10 இல் இருந்து 11 ஆம் இடத்துக்குப் பெயர்ச்சியாகிறார். தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு சம்பந்தப்பட்ட விஷயங்களில் கோபத்தை தவிர்ப்பது நல்லது. நிதானம், பொறுமையைக் கடைப்பிடிப்பது ஏற்றத்தைத் தரும். திருமணத்தில் இருந்து வந்த தடைகள் பரிபூரணமாக நிவர்த்தியாகும். வேலையில் இருப்பவர்கள் பேப்பர் போடுவதைத் தவிர்ப்பது நல்லது. திருமண யோகம் ஏற்படும்.
குடும்பத்தில் அந்நியோன்யம் அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்து மன வருத்தத்தால் பிரிந்து விவாகரத்து வரை சென்றவர்கள் மீண்டும் சேரக்கூடிய அமைப்பு உள்ளது. பிரிந்த தம்பதிகள் மீண்டும் இணையும் யோகம் ஏற்படும். பிள்ளைகள் உங்களை அரவணைத்துக் கொள்வது, நீங்கள் பிள்ளைகளை அரவணைத்துக் கொள்வது போன்ற யோகம் ஏற்படும். உறவுகள் தொடர்பான விஷயங்களில் அவர்களுடைய ஆரோக்கியத்தில் அதிகமான கவனத்தோடு பார்த்துக் கொள்ள வேண்டும்.
விருச்சிகம்
விருச்சிக ராசியினருக்கு பஞ்சவடி அனுமன் சேஷ்திரத்தில் வழிபாடு செய்வது ஏற்றத்தைத் தரும். அனுமனை வழிபாடு செய்வது ஏற்றத்தைத் தரும். யோக பலன்கள் அதிகளவில் கிடைக்கும். தினந்தோறும் அனுமன் சாலிஷா கேட்பது, படிப்பது யோகத்தைத் தரும். பிள்ளைகள் விஷயத்தில் ஆராய்ச்சி செய்து கொண்டே இருப்பதைத் தவிர்ப்பது நல்லது. வயிறு, அசிடிட்டி, எதுக்களிப்பது, தொண்டை வலி போன்றவை அதிகமாக இருக்கும் என்பதால் கவனமாக இருக்க வேண்டும். உடனிருக்கும் வேலை ஆட்கள், பார்ட்னர்களால் பிரச்சனைகள் வரும் வாய்ப்புள்ளது.
அரசியல்வாதிகள் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். திங்கள்கிழமை தோறும் பசு மாடுகளுக்கு உணவளிப்பது மன நிம்மதியைத் தரும். கஷ்டங்களில் இருந்து நிவர்த்தி ஏற்படும். பயணங்களில், அண்டை அயலார் வீட்டு விஷயங்கள், புதிய அறிமுகத்தில் மிகுந்த கவனத்தோடு இருக்க வேண்டும். இடமாற்றம், உத்தியோக மாற்றம், வியாபார மாற்றம், தொழில் மாற்றம் என நல்ல மாற்றங்கள் வரக்கூடிய காலகட்டம்.
வெளியூர், வெளிநாடு, கடல் கடந்து பயணம் செய்யக்கூடிய யோகம் ஏற்படும். குடும்பத்தை விட்டுப் பிரிந்து செல்வது, குடும்பத்தினருடன் செல்வது போன்ற அமைப்பு உள்ளது. புதிய இடத்திற்கு செல்ல வேண்டும் என்றாலும் கண்டிப்பாக செல்லலாம். பெரும் வெற்றியும், சந்தோஷமும் ஏற்படும். அதிர்ஷ்டமான அமைப்பு உள்ளது.
தனுசு
தனுசு ராசியினருக்கு புற்றுள்ள அம்மன் கோயில்களில் வழிபாடு செய்வது ஏற்றத்தைத் தரும். வீட்டின் அருகில் இருக்கும் புற்றுள்ள அம்மன் கோயில்கள், பண்ணாரி அம்மன், அங்காளம்மன், திருவேற்காடு கருமாரியம்மன், மாங்காடு அம்மன், சமயபுரத்தாள், மேல்மலையனூர் என அம்மன் தாயை வழிபாடு செய்வது பெரும் வெற்றியையும், சந்தோஷத்தையும் தரும்.
கோளார் பதிகத்தை தொடர்ந்து சொல்வது, கேட்பது அற்புதமான அமைப்பை ஏற்படுத்தும். 2 இல் ராகு, 8 இல் கேது இருந்தாலும் திருமணத் தடைகள் பரிபூரணமாக நீங்கும். குடும்பத்தில் அந்நியோன்யங்கள் அதிகரிக்கும். மூட்டு வலி தொடர்பான பாதிப்புகளில் மிகுந்த கவனம் தேவை. சர்க்கரை, ரத்த அழுத்தம் தொடர்பான பாதிப்புகளில் கவனம் தேவை.
உறவுகள் தொடர்பான விஷயங்களில் நல்ல மேன்மை ஏற்படும். உறவினர்களிடம் மனம் விட்டுப் பேசுவது, சிறு தேக ஆரோக்கிய குறைபாடுகள் இருந்தாலும் மருத்துவ ஆலோசனை பெற்றுக் கொள்வது யோக பலன்களைப் பெற்றுத் தரும். கடல் கடந்த பயணங்களை மேற்கொள்வீர்கள். தனிப்பட்ட முறையில் செல்வாக்குகள் கூடும்.


Click it and Unblock the Notifications
