ராகு கேது பெயர்ச்சி 2026: கவனமாக இருக்க வேண்டிய 8 ராசியினர்.. செய்ய வேண்டிய பரிகாரங்கள் என்னென்ன?
ராகு கேது பெயர்ச்சி 2026: வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி சற்று நேரத்தில் ராகு மகர ராசிக்குள்ளும், கேது பகவான் கடக ராசிக்குள்ளும் பெயர்ச்சியாகின்றனர். நிழல் கிரகங்கள் என்று அழைக்கப்படும் இந்த ராகு கேது பெயர்ச்சியால் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள் எவை, செய்ய வேண்டிய பரிகாரங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகப் பார்க்கலாம்.
வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி ராகு, கேது இன்று மாலை 5.14 மணியளவில் பெயர்ச்சியடைகின்றனர். 9 கிரகங்களில் ராகு கேது ஆகிய 2 பாம்பு கிரகங்களுக்கு கூடுதலான சக்தி, வலிமை உள்ளது. பரவலாக கோயில்களில் வாக்கியப் பஞ்சாங்கமே பயன்படுத்தப்படுகிறது. அந்த வகையில், வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி இன்று கோயில்களில் ராகு கேது பெயர்ச்சி விழா அனுசரிக்கப்படும். திருக்கணிதப் பஞ்சாங்கத்தின்படி டிசம்பர் 5 ஆம் தேதி ராகு கேது பெயர்சி நிகழ்கிறது.

ராகு கேதுவின் வலிமை
குரு பகவான், சுக்கிரனாக இருந்தாலும், ராஜ கிரக இருந்தாலும் சரி எந்த கிரகத்துடன் ராகு கேது சேர்கிறதோ அந்த கிரகத்தின் செயல்பாடுகளை இந்தப் பாம்பு கிரங்களுக்கு முடக்கும் சக்தி உள்ளது. பெரிய கிரகங்களைக் கூட மடைமாற்றம் செய்யக்கூடிய வலிமை கொண்டது ராகு கேது. இன்று முதல் ஒன்றரை வருடங்களுக்கு ராகுவும் கேதுவும் பலனைத் தரப்போகின்றனர்.
ராகு கேது பெயர்ச்சி
கடந்த ஒன்றரை வருடமாக கும்ப ராசியில் ராகு பகவான் இருந்தார். இன்று மாலை கும்ப ராசியை விட்டு மகர ராசிக்குள் ராகு பகவான் அமர்கிறார். அங்கு அமர்ந்து ஒன்றரை ஆண்டுகளுக்குப் பலன்களைத் தரப்போகிறார். சிம்மத்தில் அமர்ந்திருந்த கேது பகவான் இன்று மாலையில் இருந்து கடக ராசிக்குள் நுழைகிறார். கடகத்தில் கேது அமர்ந்து அடுத்த ஒன்றரை ஆண்டுகளுக்கு பலன்களைத் தரப்போகின்றனர். அந்த வகையில், இந்த ராகு கேது பெயர்ச்சியில் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள் குறித்து இந்தப் பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
மிதுனம்
மிதுனம் ராசியினருக்கு திடீர் அதிர்ஷ்ம் ஏற்படும். எல்லா விதத்திலும் ஏற்றங்கள் காணப்பட்டாலும் வேறு ஊருக்கு செல்வதற்கான வாய்ப்பு கிடைத்தால் உடனடியாக செல்வது நன்மை பயக்கும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். அரசு தொடர்பான விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். சட்டத்திற்குப் புறம்பானவர்களின் தொடர்பில்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
வேற்று மொழி மனிதர்களால் ஆதாயம் ஏற்படும். வார்த்தைகளில் இனிமையைக் கடைப்பிடிப்பது நல்லது. எதிரிகளை நினைத்து கவலைப்படுவதைத் தவிர்ப்பது நல்லது. ரத்த அழுத்தம், கொழுப்பு, சர்க்கரை தொடர்பான பாதிப்புகளில் மிகுந்த கவனம் தேவை. முழு உடல் பரிசோதனை செய்து கொள்வது ஏற்றத்தைத் தரும். உடல் ரீதியாக மிகுந்த கவனமாக இருக்க வேண்டும்.
அதிர்ஷ்டமும், பெரும் வெற்றியும், புகழும் கிடைக்கக்கூடிய நல்ல அமைப்பு உள்ளது. ரியல் எஸ்டேட், ஏற்றுமதி, இறக்குமதி, டிரேடிங், வாங்கி விற்பது போன்றவற்றால் பெரும் அதிர்ஷ்டம் ஏற்படும். கஷ்டங்கள் பரிபூரணமாக நீங்கும். உத்தியோகத்திலும், தொழிலிலும் எதிர்பார்க்காத பலவித நன்மைகள் ஏற்படும். திருமணத் தடைகள் பரிபூரணமாக நீங்கும். நீண்ட நாட்களாக இருந்து வந்த பாதிப்புகள் தீரும். திருமணத்தில் பாதிப்பு இருந்து மறுமணத்திற்கு காத்திருப்பவர்களுக்கு மறுமணம் நடக்கும் அமைப்பு உள்ளது.
உத்தியோகத்தில் பிரச்சனை இருப்பவர்கள் அவசரப்பட்டு வேலையை விடுவதை தவிர்ப்பது நல்லது.வண்டிகளில் செல்லும்போது விதிமுறைகளை கடைப்பிடிப்பது நல்லது. பாம்பு, பூரான் போன்ற விஷ ஜந்துகள், வளர்ப்புப் பிராணிகளிடம் கவனமாக இருப்பது நன்மை பயக்கும். பைரவர் வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும். பைரவர் காயத்ரியை தினந்தோறும் படிப்பது, கேட்பது நன்மை பயக்கும். தெருநாய்களுக்கு உணவளிப்பது நல்லது.
கடகம்
கடக ராசிக்கு ராகு பெயர்ச்சியாகிறார் என்பதால் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். பட்டீஸ்வரம் சென்று வருவது ஏற்றத்தைத் தரும். குடும்ப விஷயத்தில் அதீத கவனமாக இருப்பது நன்மை பயக்கும். மற்றவர்கள் குடும்ப விஷயத்தில் நீங்கள் தலையிடுவது, உங்கள் குடும்ப விஷயத்தில் மற்றவர்கள் தலையிடுவதைத் தவிர்ப்பது நல்லது.
ஆண்களாக இருந்தால் பெண்கள் விஷயத்திலும், பெண்களாக இருந்தால் ஆண்கள் விஷயத்திலும் மிகுந்த கவனம் தேவை. நரம்பு சம்பந்தப்பட்ட பாதிப்புகள் இருப்பவர்கள், ரத்த அழுத்தம் இருப்பவர்கள் மாத்திரைகளை தவறாமல் சாப்பிடுவது நல்லது. இல்லையெனில் பாதிப்புகளைச் சந்திக்க நேரிடும். ரத்த அழுத்தம், சர்க்கரை, கொழுப்பு, வெர்டிகோ போன்ற நரம்பு சம்பந்தப்பட்ட பாதிப்புகள் இருப்பவர்கள் கவனத்துடன் செயல்படுவது நல்லது.
வண்டிகளில் செல்லும்போது சீட் பெட் கொள்வது நல்லது. ஹெல்மெட் போடுவது, குறைந்த வேகத்தில் வாகனங்களை இயக்குவது நன்மை பயக்கும். வாகனங்களில் உரிய விதிமுறைகளை கடைப்பிடிப்பது நல்லது. திருமண உறவில் பிரச்சனைகள் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். குலதெய்வ வழிபாடு ஏற்றத்தைக் கொடுக்கும். பட்டீஸ்வரம சென்று துர்க்கை அம்மனை வழிபாடு செய்வது ஏற்றத்தைத் தரும். 38 எலுமிச்சம்பழங்களை கொடுத்து வழிபாடு செய்து, அதில் 5ஐ மட்டும் வாங்கி வந்து பழச்சாறு செய்து அருந்துவது நல்லது.
சிம்மம்
சிம்ம ராசியினருக்கு அற்புதமும், ஆனந்தத்தையும் தரும் காலகட்டம். பஞ்சபூத ஸ்தலங்களான காளகஸ்தி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், சிதம்பரம், திருச்சியில் இருக்கும் திருவாணைக்காவலில் உள்ள கோயில்களுக்குச் சென்று வருவது மேன்மையைத் தரும். யோக பலத்தை அதிகமாகப் பெறக்கூடிய காலகட்டம். ராகு கேது மாறினாலும், 12 இல் கேது வருவதால் விலையுயர்ந்த பொருள்கள், வேலை விஷயத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். ஆரோக்கியத்தில் அதீத கவனம் தேவை.
மனக் குழப்பங்கள் தீராத நிலைமை இருக்கும். யோசனை, கோபம், வருத்தப்படுவது, அழுவது, உங்களையே வருத்திக் கொண்டிருப்பது போன்ற நிலைமைகள் இருக்கும். குலதெய்வக் கோயிலுக்குச் சென்று வருவது நன்மையைத் தரும். இடமாற்றம், தொழில் மாற்றம், உத்தியோக மாற்றம், வியாபார மாற்றம், படிப்பு மாற்றம் என அனைத்து நல்ல மாற்றங்களும் வரும். மேலதிகாரிகளிடம் வார்த்தையை விடுவதைத் தவிர்ப்பது நல்லது.
கோபத்தை வெளிக்காட்டமால் இருப்பது நன்மையைத் தரும். இதுவரை இருந்து வந்த சிக்கல்கள் எல்லாம் பரிபூரண நிவர்த்தியாகும். கடல் கடந்த வியாபாரம், தொழில், உத்தியோகம், படிப்பு என இருக்கக்கூடியவர்களுக்கு நிறைய நன்மைகள் ஏற்படும். மாணவர்களுக்கு படிப்பிலும், பழக்கவழக்கத்திலும் இருந்து வந்த கஷ்டங்கள் படிப்படியாகக் குறைவதை கண்கூடாகப் பார்க்கலாம். பிள்ளைகள் விஷயத்தில் ஆராய்ச்சி செய்து கொண்டே இருப்பதைத் தவிர்ப்பது நல்லது. பிள்ளைகளை அரவணைத்துக் கொள்ள வேண்டும்.
கன்னி
கன்னி ராசியினருக்கு கோயில் திருப்பணிகளை மேற்கொள்வது, யாத்திரைகள் மேற்கொள்வது போன்ற யோகங்கள் உண்டு. பிள்ளைகள் விஷயத்தில் ஆராய்ச்சி செய்து கொண்டே இருப்பதைத் தவிர்ப்பது நன்மை பயக்கும். கணவன், மனைவி சண்டை, குடும்ப சண்டை விஷயத்தில் எச்சரிக்கை தேவை. நிறைய விரயங்கள் ஏற்படும். விலையுயர்ந்த பொருள்களை அதீத கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும்.
ரங்கநாதப் பெருமாளை மனதாரா வழிபாடு செய்வது ஏற்றத்தைத் தரும். எதிர்பார்க்காத நன்மைகள் பெரும் சந்தோஷத்தையும், ஏற்றத்தையும் ஏற்படுத்தும். இதுவரை இருந்து வந்த பிரச்சனைகள் பரிபூரணமாக நீங்கும். குடும்பத்தில் யாருடைய தலையீடும் இல்லாமல் பார்த்துக் கொள்வது நல்லது. அதேபோல, மற்றவர்கள் குடும்ப விஷயத்தில் உங்களுடைய தலையீடு இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
அலர்ஜி, சளி தொந்தரவு, தோல், கேல்சியம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் அதீத கவனம் தேவை. விஷ்ணு காயத்ரி மந்திரத்தை தினந்தோறும் கேட்பது, படிப்பது நன்மையைத் தரும். வெள்ளிக்கிழமை தோறும் பசு மாடுகளுக்கு உணவளிப்பது ஏற்றத்தைத் தரும். பிள்ளைகள் விஷயத்தில் ஆராய்ச்சி செய்வதைத் தவிர்ப்பது நல்லது. கர்ப்பிணிகள் மருத்துவர்கள், பெரியவர்கள், துணையின் ஆலோசனைக் கேட்டு செயல்படுவது நல்லது. எந்த விஷயத்தையும் மனதிற்குள் போட்டுக் கொண்டு உணர்ச்சிவசப்படுவதைத் தவிர்ப்பது நல்லது.
தனுசு
தனுசு ராசியினருக்கு புற்றுள்ள அம்மன் கோயில்களில் வழிபாடு செய்வது ஏற்றத்தைத் தரும். வீட்டின் அருகில் இருக்கும் புற்றுள்ள அம்மன் கோயில்கள், பண்ணாரி அம்மன், அங்காளம்மன், திருவேற்காடு கருமாரியம்மன், மாங்காடு அம்மன், சமயபுரத்தாள், மேல்மலையனூர் என அம்மன் தாயை வழிபாடு செய்வது பெரும் வெற்றியையும், சந்தோஷத்தையும் தரும்.
கோளார் பதிகத்தை தொடர்ந்து சொல்வது, கேட்பது அற்புதமான அமைப்பை ஏற்படுத்தும். 2 இல் ராகு, 8 இல் கேது இருந்தாலும் திருமணத் தடைகள் பரிபூரணமாக நீங்கும். குடும்பத்தில் அந்நியோன்யங்கள் அதிகரிக்கும். மூட்டு வலி தொடர்பான பாதிப்புகளில் மிகுந்த கவனம் தேவை. சர்க்கரை, ரத்த அழுத்தம் தொடர்பான பாதிப்புகளில் கவனம் தேவை.
உறவுகள் தொடர்பான விஷயங்களில் நல்ல மேன்மை ஏற்படும். உறவினர்களிடம் மனம் விட்டுப் பேசுவது, சிறு தேக ஆரோக்கிய குறைபாடுகள் இருந்தாலும் மருத்துவ ஆலோசனை பெற்றுக் கொள்வது யோக பலன்களைப் பெற்றுத் தரும். கடல் கடந்த பயணங்களை மேற்கொள்வீர்கள். தனிப்பட்ட முறையில் செல்வாக்குகள் கூடும்.
மகரம்
மகரம் ராசியினருக்கு கதிராமங்கலம் பகுதியில் உள்ள வனதுர்க்கா பரமேஸ்வரி அம்மன் கோயிலில் வழிபாடு செய்வது ஏற்றத்தைத் தரும். எதிர்பார்க்காத நன்மைகள் ஏற்படும். இதுவரை இருந்து வந்த சங்கடங்களில் இருந்து நிவர்த்தி ஏற்படும். உங்களுடைய குடும்ப விஷயத்தில் மற்றவர்கள் தலையீடு இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பிறர் குடும்ப விஷயத்தில் நீங்கள் தலையிடுவதைத் தவிர்ப்பது நல்லது. சனி 3 ஆம் இடத்தில் இருப்பதால் தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பில் சுபவிரயம் ஏற்படும். ஆரோக்கியத்தில் இதயம், வயிறு, முழு பரிசோதனை செய்து கொள்வது நன்மை பயக்கும்.
தொட்டது துலங்கக்கூடிய காலகட்டம். எதிர்பார்க்காத நன்மைகள் ஏற்படும். தாய் வழி உறவு, தந்தை உறவு மேன்மை அடையக்கூடிய அமைப்பு. கோளார் பதிகத்தை தினந்தோறும் கேட்பது, படிப்பது ஏற்றத்தைத் தரும். மன நிம்மதியில்லாத தன்மைகள், சிக்கல்கள் எல்லாம் நீங்கி பெரும் வெற்றியையும், சந்தோஷத்தையும் தரும்.
கணவர் மனைவியின் உடல்நலனிலும், மனைவி கணவரின் உடல்நலனிலும் அக்கறை செலுத்துவது நல்லது. பயணங்கள், தொழிலிடத்தில், வெளியிடத்தில் ஆண்களாக இருந்தால் பெண்கள் விஷயத்திலும், பெண்களாக இருந்தால் ஆண்கள் விஷயத்திலும் செல்போன்களில் பேசும்போது கூட அதீத கவனமாக இருப்பது நன்மை பயக்கும்.
கும்பம்
கும்ப ராசியினருக்கு திருக்கொள்ளிக்காடு பொங்கு சனீஸ்வரர் சிவன் கோயிலில் உள்ள அக்னீஸ்வரர் தலத்தில் வழிபாடு செய்வது சகலவித நன்மைகளையும் தரும். அந்தக் கோயிலில் பூஜை செய்து, வணங்குவது நன்மையைத் தரும். எதிரிகள் விஷயத்தில் அதீத கவனமாக இருக்க வேண்டும். மன அழுத்தம், குடும்பத்தில் கோபம் இல்லாமல் பார்த்துக் கொள்வது மேன்மையைத் தரும். வெளியூர், வெளிநாடு, விலை உயர்ந்த பொருள்கள் விஷயத்தில் சிறிது கவனமாக இருக்க வேண்டும். அதிகமாக தங்க நகைகளை வாங்கிக் குவிக்கக்கூடிய யோகம் ஏற்படும்.
ஆடை, ஆபரண சேர்க்கை, நிலம் சேர்க்கை ஏற்படக்கூடிய நல்ல காலகட்டமாக இருக்கும். பிறந்த குழந்தை முதல் 72 வயது வரை இருக்கக்கூடிய முதியவர்கள் வரை அற்புதமான, அனுகூலமான காலகட்டமாக இருக்கும். அதற்கு மேலான வயதினர் நடக்கும்போதும், ஆரோக்கியத்திலும், வெளிவட்டாரம், பயணங்கள் போன்றவற்றில் மிகுந்த கவனத்தோடு இருப்பது நன்மை பயக்கும்.
அரசியலில் உள்ள இளம் வயதினர் திடீரென பெரும் பொறுப்புகளுக்கு வரக்கூடிய காலகட்டம். இளம் தொழிலதிபர்கள் உருவாகக்கூடிய அமைப்பு. வார்த்தைகளில் இனிமையைக் கடைப்பிடிப்பது ஏற்றத்தைத் தரும். காலையில் எழுந்தவுடன் நல்லெண்ணையை எடுத்துக் கொள்வது மேன்மையைத் தரும். பிறருக்காக ஜாமீன் கொடுப்பது போன்றவற்றைத் தவிர்ப்பது நல்லது.
மீனம்
மீனம் ராசியினருக்கு ஆலங்குடி குரு பகவான் ஸ்தலத்துக்குச் சென்று வழிபாடு செய்து வருவது விசேஷ பலன்களைத் தரும். ஜென்ம சனி இருப்பதால் ஆரோக்கியத்தில் கழிவுப் பாதை, அடிவயிறு தொடர்பான பாதிப்புகளில் மிகுந்த கவனத்தோடு இருக்க வேண்டும். தெய்வத்தின் அருளால் வியாபாரம், படிப்பு, தொழில், உத்தியோகத்தில் ஏற்றம் ஏற்படும். திடீர் அதிர்ஷ்டம் உண்டாகும். திடீர் லாபம் ஏற்படும். தொழிலில் இருந்து வந்த சங்கடங்கள் நிவர்த்தியாகும். கூட்டுத் தொழிலில் இருந்து தனித்தொழில் தொடங்கக்கூடிய யோகம் ஏற்படும். அரசியலில் இருந்த கஷ்டங்கள் நிவர்த்தியாகும். சத்ருக்களின் பிரச்சனைகளில் இருந்து நிவர்த்தியாகும்.
பிள்ளைகள் விஷயத்தில் அதீத கவனம் தேவை. பிள்ளைகளின் படிப்பு, தொழில், உத்தியோகத்தில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். பிள்ளைகள் விஷயத்தில் ஆராய்ச்சி செய்து கொண்டே இருப்பதை தவிர்ப்பது நல்லது. இதுவரை இருந்து வந்த சங்கடங்களில் இருந்து பரிபூரண நிவர்த்தி ஏற்படும். பெரும் வெற்றிகளும், சந்தோஷங்களும் உண்டாகும்.
உடற்பயிற்சியைத் தவிர்க்கும் மீன ராசியினருக்கு மன அழுத்தம் நிச்சயமாக ஏற்படும். வயிறு சம்பந்தப்பட்ட, பாதம் சம்பந்தப்பட்ட கோளாறுகள் நிச்சயம் ஏற்படும். வலுக்கலான இடங்களில் மிகுந்த கவனம் தேவை. அபிராமி அந்தாதியில் உள்ள 40, 59, 75 ஆவது பாடல்களைக் கேட்பது, படிப்பது மேன்மையைத் தரும். பிள்ளைகள் விஷயத்தில் யோகத்தைத் தரும்.


Click it and Unblock the Notifications
