கோடீஸ்வர யோகம் பெறும் தனுசு ராசி.. பண மழை கொட்டும்.. சகோதரர்களிடம் மட்டும் விட்டுக் கொடுப்பது நல்லது
ராகு கேது பெயர்ச்சி: 2025 ஆம் ஆண்டில் திருக்கணிதத்தின்படி மே 18 ஆம் தேதி ராகு கேது பெயர்ச்சி நடந்துள்ளது. ராகு கேது பெயர்ச்சியில் தனுசு ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகத் தெரிந்து கொள்ளலாம்.
2025 ஆம் ஆண்டில் வருடாந்திர கிரகங்கள் என்று சொல்லக்கூடிய சனி, குரு, ராகு கேது ஆகிய 3 பெயர்ச்சிகள் நடைபெற்றுள்ளன. பொதுவாக ராகு கேது பெயர்ச்சிக்கு முக்கியத்துவம் அதிகம். காலபுருஷ ராசி 12 ஆம் வீடு மீனத்தில் இருந்து 11 ஆம் வீடான கும்பத்துக்கு லாப ஸ்தானத்துக்கு ராகு வரப் போகிறார். ராகுவைப் போல கொடுப்பானில்லை. கேதுவைப் போல கெடுப்பானில்லை எனும் வாக்கு உண்டு.

ஒவ்வொரு கிரகங்களுடனும் ராகு சேரும்போது ஒவ்வொரு விதமான பலனைத் தருவார். தனுசு ராசியைப் பொருத்தவரை பொதுவாகவே நல்ல பலன்களைத் தருவார். ராகு உங்களுக்கு மூன்றாம் இடத்திலும், கேது 9 ஆம் இடத்திலும் வருகிறார். ராகு மூன்றாம் இடத்தில் வரும்போது தைரியம் அதிகரிக்கும். மூன்றாம் இடத்தில் ராகு வருவதால் அச்சப்படத் தேவையில்லை.
ஒன்றரை வருடம் ராகு மூன்றாம் இடத்தில் இருப்பதால் ஏதாவதொரு காரியத்தை சகோதரர்கள் கூறினால் அதனைக் கேட்டுக் கொள்வது நல்லது. சகோதரர்களிடம் பிரச்சனை வருவதற்கான வாய்ப்புள்ளது. எடுக்கும் அத்தனை முயற்சிகளிலும் வெற்றி பெறுவீர்கள். ராகுவை குரு பார்ப்பதால் குரு சண்டாளம் ஏற்படுவதால் மிகப்பெரிய முயற்சிகளைச் செய்வீர்கள்.
9 ஆம் இடத்தில் பாக்கியத்தில் கேது பகவான் வருவதால் திடீர் அதிர்ஷ்டம் உண்டாகும். ரேஸ், லாட்டரி சீட்டு போன்றவற்றில் லாபம் வருவதற்கான வாய்ப்புள்ளது. உங்களுடைய நேரம் அருமையாக உள்ளதால், அதிர்ஷ்டங்கள் தானாக கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. தொட்டதெல்லாம் பொன்னாக மாறும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள்.
லாபமும், அதிர்ஷ்டமும் கைகூடி வரும். கடல் தாண்டிய, நதி தாண்டிய பயணங்களை மேற்கொள்ளும் யோகம் உண்டாகும். திடீர் திடீரென பயணங்களை மேற்கொண்டு மகிழ்வீர்கள். வாழ்க்கையை ரசிக்கத் தொடங்குவீர்கள். ஒன்றரை வருடம் அற்புதமான வாழ்க்கையை வாழ்வீர்கள். ராகு கேதுவைப் பொருத்தவரை 3, 6, 8, 12 இல் மறைந்தால் நல்ல பலன்களைப் பெறுவீர்கள்.
எடுத்த காரியங்களில் மாபெரும் வெற்றியையும், கோடீஸ்வர யோகத்தையும் பெறுவீர்கள். சகோதரர்களிடம் பிரச்சனை ஏற்படும் என்பதால் கோபப்படாமல் விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. வெற்றி ஸ்தானத்தில் ராகு பகவான் குரு பார்வையில் வந்து அமருவதால் பெரிய ஜாக்பாட் உண்டாகும். இந்த காலகட்டத்தை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்வது நல்லது.
பாக்கிய ஸ்தானத்தில் கேது வந்து அமருவதால் தந்தையின் உடல்நிலை, பூர்வீகம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. தந்தை வழி சொந்தக்காரர்களிடம் வாக்குவாதத்தை, பிரச்சனைகளைத் தவிர்ப்பது நல்லது. நீண்ட நாட்களுக்குப் பிறகு நல்ல வாய்ப்புகள், வெற்றி, வெளிநாட்டு யோகம், புதிதாக வியாபாரம் ஆரம்பிப்பது போன்றவற்றுக்கு அருமையான காலகட்டமாக இருக்கும்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications