ராகு கேது பெயர்ச்சி: 18 வருடங்களுக்கு பிறகு கும்ப ராசிக்கு சூப்பர் மாற்றம்

Subscribe to Oneindia Tamil

ராகு கேது பெயர்ச்சி: தமிழ் புத்தாண்டு புதிய நம்பிக்கைகளுடன் பிறந்துள்ளது. புத்தாண்டு பிறந்த சில நாட்களிலேயே ராகு கேது பெயர்ச்சி நிகழவுள்ளது. இந்த பெயர்ச்சியில் கும்பம் ராசியினருக்கு எப்படி இருக்கும் என்பது குறித்து இந்தக் கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

பொதுவாக ஒன்றரை வருடத்துக்கு ஒருமுறை ராகு கேது கிரகங்களின் பெயர்ச்சி இருக்கும். ராகு கேது என்பது சர்ப்ப கிரகங்கள். திருக்கணிதத்தின்படி மே 18 ஆம் தேதியும் மற்றும் வாக்கிய பஞ்சாங்கத்தின்படி ஏப்ரல் 26 ஆம் தேதியும் ராகு கேது பெயர்ச்சி நிகழ்கிறது. மற்ற கிரகங்கள் முன்னோக்கி நகரும். ஆனால் ராகு கேது பின்னோக்கி நகரும்.

rahu-ketu-peyarchi-kumbam-rasi-people-will-get-good-benefits

18 வருடங்கள்

அதன்படி ராகு பகவான் மீனம் ராசியில் இருந்து கும்பம் ராசிக்கும், கேது பகவான் கன்னி ராசியில் இருந்து சிம்மம் ராசிக்கும் பெயர்ச்சி ஆகிறார்கள். ராகு பகவான் 18 வருடங்களுக்கு பிறகு கும்ப ராசிக்கு பெயர்ச்சி ஆகவுள்ளார். திருவாதரை, ஸ்வாதி, சதயம் ஆகியவை ராகுவின் நட்சத்திரங்களாகும்.

அரிய நிகழ்வு

இந்நிலையில் ராகு தன்னுடைய சொந்த நட்சத்திரமான சதய நட்சத்திரத்தை தொடவுள்ளது. அதனால் தான் இதை 18 வருடங்களுக்கு பிறகு நடைபெறும் அரிய நிகழ்வு என்கிறோம். இது 12 ராசிகளிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் ராகு கேது பெயர்ச்சியால் கும்ப ராசி பெறப்போகும் பலன்களை இந்தக் கட்டுரையில் காணலாம்.

கும்பம்

கும்பம் ராசி அடுத்த ஒன்றரை வருடங்களில் மிகப்பெரிய ஏற்றத்தை காண்பார்கள். இதுநாள் வரை ராசிக்கு இரண்டாம் இடத்தில் உள்ள ராகு பல்வேறு பிரச்னைகளை கொடுத்திருப்பார். தற்போது அவர் உங்களது ராசியில் பயணிக்க போகிறார். ஜென்ம சனியும் விலகிவிட்டது. உங்களை சூழ்ந்த தடைகள் விலகும். உங்களின் புகழ் உயரும். இறங்கிய அனைத்து காரியங்களில் வெற்றி கிடைக்கும்.

மாற்றம்

வாழ்க்கையில் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு மாற்றங்கள் இருக்கும். அரசு, அரசியல் சம்பந்தப்பட்டவர்களுக்கு புகழ், கௌரவம் அதிகரிக்கும். அரசியல்வாதிகளுக்கு மிகப்பெரிய அங்கீகாரம் கிடைக்கும். குரு நான்காம் இடத்தில் இருந்து அர்த்தாஷ்ட குருவாக சிக்கல்களை கொடுத்திருப்பார். குருவும் பெயர்ச்சி ஆகவுள்ளார். இது நன்மைகளை தான் கொடுக்கும்.

முன்னேற்றம்

எளிய பின்னணியில் இருப்பவர்களுக்கு கூட பிரம்மாண்ட வளர்ச்சி கிடைக்கும்.உத்யோகம், தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். பண வரவு சிறப்பாக இருக்கும். பொருளாதாரத்தில் அடுத்த கட்டத்துக்கு செல்வார்கள். வசதி வாய்ப்பு தேடி வரும். சொந்த வீடு, நிலம், வாகனம், நகை உள்ளிட்டவை வாங்குவீர்கள். வழக்குகளில் உங்களுக்கு சாதகமான தீர்ப்புகள் கிடைக்கும். எதிரிகள் அமைதியாவார்கள்.

சொத்து

தைரியம், தன்னம்பிக்கை அதிகரிக்கும். நீண்ட காலமாக திட்டமிட்ட விஷயங்களை நிறைவேற்றுவீர்கள். கணவன் - மனைவி இடையே பிரச்னைகள் சரியாகி அன்யோன்யம் அதிகரிக்கும். பூர்விக சொத்துகளில் இருந்த பிரச்னைகள் நீங்கும். பெரிய மனிதர்களின் தொடர்பு கிடைக்கும். கல்வியில் நல்ல முன்னேற்றம் காணப்படும். முதலீட்டில் நல்ல லாபம் வரும்.

தொழில்

கேது பகவான் எட்டாம் இடத்தில் இருந்து பாதிப்புகளை ஏற்படுத்தியிருக்கும். தற்போது கேதுவின் அமைப்பும் சிறப்பாக உள்ளது. தொழிலில் இருந்த தடைகள் நீங்கும். கலை, ஊடகத்துறையினருக்கு இந்த காலம் சிறப்பாக இருக்கும். ராகு கேது பெயர்ச்சியில் 12 ராசிகளில் அதிகளவு பலன்களை பெறப்போவது கும்பம் ராசி தான். கிடைக்கும் வாய்ப்பை சரியாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

கவனம்

ஆரோக்கியத்தில் நரம்பு சார்ந்த விஷயங்களில் மட்டும் சற்று கவனமாக இருக்க வேண்டும். மனக்குழப்பங்கள் வந்து செல்லும். குழந்தைகள் விஷயத்தில் கூடுதல் அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். கோபத்தை குறைத்து நிதானமாக செயல்பட்டால் எல்லாவற்றிலும் பிரம்மாண்ட வெற்றியை பெறுவார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+