ராகு கேது பெயர்ச்சி: மிதுனத்துக்கு பிரச்சனைகள் முடிஞ்சுது.. இனி குஷியான காலகட்டம்.. தங்கமழை பெய்யும்
ராகு கேது பெயர்ச்சி: 2025 ஆம் ஆண்டு ராகு கேது பெயர்ச்சி வாக்கிய பஞ்சாங்கத்தின்படி ஏப்ரல் 26 ஆம் தேதியும், திருக்கணிதத்தின்படி மே 18 ஆம் தேதியும் நடைபெறவுள்ளது. இந்த ராகு கேது பெயர்ச்சியில் மிதுன ராசியினருக்கு கிடைக்கும் நல்ல பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகத் தெரிந்து கொள்ளலாம்.
கிரகப் பெயர்ச்சி
2025 ஆம் ஆண்டில் வருடாந்திர கிரகங்கள் என்று சொல்லக்கூடிய சனி, குரு, ராகு கேது ஆகிய 3 பெயர்ச்சிகள் நடைபெறுகின்றன. இந்த மூன்று கிரகங்களின் மாற்றங்களுமே உலக மக்கள் அனைவராலும் ஆர்வத்துடன் கவனிக்கப்படுகிறது. பொதுவாக ராகு கேது பெயர்ச்சிக்கு முக்கியத்துவம் அதிகம். காலபுருஷ ராசி 12 ஆம் வீடு மீனத்தில் இருந்து 11 ஆம் வீடான கும்பத்துக்கு லாப ஸ்தானத்துக்கு ராகு வரப் போகிறார். ராகுவைப் போல கொடுப்பானில்லை. கேதுவைப் போல கெடுப்பானில்லை எனும் வாக்கு உண்டு.

ராகு கேது பெயர்ச்சி
ராகு கிரகம் போக காரகன், கேது கிரகம் ஞானக்காரகன் என்று அழைக்கப்படுகிறது. ராகு பகவான இந்த ஆண்டு குருவின் விசேஷ பார்வையில் வந்து அமரப் போகிறார். 12 ஆண்டுகளுக்கு 3 முறை மட்டுமே இதுபோன்று நிகழும். ராகு சுப, அசுப இரு பலன்களையும் கொடுப்பார். தற்போது குரு பார்வை இருப்பதால் நற்பலன்கள் அதிக அளவில் கிடைப்பதற்கான காலகட்டமாக இருக்கும்.
ராகு கேது பெயர்ச்சி என்பது ஒவ்வொரு ஜாதகரின் வாழ்க்கையையும் திருப்பிக் கொடுக்கக்கூடிய வலிமையான கிரகங்களாகும். 2025 ஆம் ஆண்டு மே 18 ஆம் தேதி ராகு கேது பெயர்ச்சி நடக்கிறது. மீனம் ராசியில் இருந்து ராகு கும்பத்துக்கும், கன்னியில் இருந்து கேது சிம்மத்துக்குப் போகிறார். பெரிய பிரச்சனைகளை சந்தித்து, மோசமான நிலைகளில் தள்ளப்பட்ட மீனம் ராசி மற்றும் கன்னி ராசியினருக்கு அதிர்ஷ்ட பலன்கள் கிடைக்கும். மிகப்பெரிய சந்தோஷம் கிடைக்கும்.
அந்த வகையில், இந்த ராகு கேது பெயர்ச்சியில் மிதுன ராசியினருக்கு கிடைக்கப் போகும் பலன்கள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்களுக்கு கோச்சாரத்தில் சனி பகவான் 9 ஆம் இடத்தில் இருந்து 10 ஆம் இடத்துக்குப் பயணிக்கிறார். 10 ஆம் இடம் என்பது சனி பகவானுக்கு உகந்த இடம்தான். 12 ஆம் வீட்டில் குரு பகவான் அமர்ந்திருப்பதால் கடந்த 10 மாதங்களாக நீங்கள் போட்ட கணக்கெல்லாம் தப்பாகவே முடிந்திருக்கும். மிதுனத்துக்கு பாதகாதிபதி, களஸ்திர ஸ்தானதிபதி விரையத்தில் இருக்கிறார். இவரே ஜீவானாதிபதியாகவும் இருக்கிறார்.
பிரச்சனைகள் தீரும்
தொழில் ஸ்தானத்துக்கு அதிபதியான குரு 12 ஆம் வீட்டில் அமர்ந்து தொழிலில் நிறைய விரையத்தைக் கொடுத்திருப்பார். பணம் வர வேண்டிய இடத்தில் இருந்தே வராததால், கொடுக்க வேண்டியவர்களுக்க பணம் கொடுப்பது தடைபடும் சூழல் இருந்திருக்கும். ஒரு செயலைத் திட்டமிட்டு, சாமர்த்தியமாக செயல்படக்கூடிய மிதுன ராசிக்காரர்கள் பல்வேறு பிரச்சனைகளைச் சந்தித்து வந்திருப்பீர்கள்.
அதிர்ஷ்டம்
ராகு கேது பெயர்ச்சியில் மூன்று விஷயங்கள் பல்வேறு நன்மைகளை தரப் போகின்றன. வருடாந்திர கிரகங்களான சனியையும், குருவையும் சேர்த்துதான் ராகு பெயர்ச்சியை பார்க்க வேண்டும். ராசியில் குரு ஜென்ம குரு வரப்போவது பிரச்சனை என்று எண்ண வேண்டும். 9 ஆம் பாவத்தில் இருக்கும் ராகுவை குரு பார்ப்பதால் அனுகூலங்கள் கிட்டும். இதனால், ராகு பூரணமாக சுபத்துவத்துவத்தைப் பெற்று அமோகமான நற்பலன்களைக் கொடுக்கும்.
தொழிலில் முன்னேற்றம்
சனி பகவான் 10 ஆம் இடத்துக்கு வருவது தொழில் ரீதியாக அபரிமிதமான மேன்மை கிடைக்கும். 9 ஆம் பாவத்தில் ராகு குருவின் நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்யும்போதும், குரு பார்வை கிடைப்பதாலும் தொழில் ரீதியாக நிறைய பாக்கியங்கள், மேன்மை உண்டாகும். வெளிநாட்டுப் பயணம், கோயில்களுக்குச் செல்வது, தர்ம காரியங்கள் செய்வது, கார் வாங்குவது போன்றவை உண்டாகும் காலகட்டமாக இருக்கும்.
முன்னேற்றம்
ராகு பகவான் சொந்த நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்யும் போது தொழில் ரீதியாக விரிவாக்கம் செய்வீர்கள். சுபகாரியங்கள், அடுத்த கட்டத்துக்கு முன்னேறிச் செல்லும் காலகட்டமாக இருக்கும். லாப ஸ்தானதிபதியான செவ்வாயில் சஞ்சாரம் செய்யும்போது லாப மேன்மைகள் உண்டாகும். கேது பகவான் 4 ஆம் வீட்டில் இருந்து 3 ஆம் வீட்டுக்கு வருகிறார்.
வெற்றி மேல் வெற்றி
4 ஆம் வீடு என்பது சுக ஸ்தானம். வீடு, வாகனம், வசதி, போக்குவரத்து, மாத்ரு ஸ்தானம் ஆகியவற்றில் இதுநாள் வரை தொடர்ச்சியாக பிரச்சனைகளை சந்தித்திருப்பீர்கள். இனி அந்த நிலைமைகள் எல்லாம் பனிபோல விலகும். கடன்கள் தீரும். கேது விலகி இனி வெற்றி ஸ்தானத்தில் அமருவதால் நற்பலன்களைப் பெறப் போகிறீர்கள். அரசு சார்ந்த விஷயங்களில் இருந்து நன்மையைப் பெறுவீர்கள்.
எச்சரிக்கை
குழந்தைகள் விஷயங்களில் படிப்பு, தொழில், வெளிநாட்டுப் பயணங்கள், வேலைவாய்ப்பு போன்ற விஷயங்களில் முன்னேற்றத்தைக் காண்பீர்கள். காது மூக்கு தொண்டை பிரச்சனைகள் வருவதற்கான வாய்ப்புள்ளது. ஒப்பந்தங்கள் விஷயத்தில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். நண்பர்கள் போன்றவர்களுக்கு ஜாமீன் கையெழுத்து போடுவதை தவிர்ப்பது நல்லது.
பரிகாரம்
ராகு கேது பெயர்ச்சியில் மிதுன ராசிக்காரர்களுக்கு இந்த இரண்டு கிரகங்களுமே நல்ல நிலையில் தான் உள்ளன. ராசியில் குரு அமருவதால் குரு வழிபாடு, மகான்கள் வழிபாடு, ஜீவ சமாதி வழிபாடுகளை வியாழக்கிழமை தோறும் செய்வது அமோகமான பலன்களைத் தரும். உபவாசம் இருப்பது கூடுதல் நன்மை பயக்கும்.












Click it and Unblock the Notifications