ராகு சூப்பர்.. கேது கவனம்.. மேஷ ராசிக்கு ராகு கேது பெயர்ச்சி எப்படி உள்ளது
ராகு கேது பெயர்ச்சி: ராகு கேது பெயர்ச்சி உலகம் முழுவதும் உற்று கவனிக்கப்படுகிறது. அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ராகு கேது பெயர்ச்சி நாளை நடைபெறவுள்ளது. ராகு கேது பெயர்ச்சி உலகளவில் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும், இது மேஷம் ராசியில் ஏற்படுத்தவுள்ள பலன்கள் ஆகியவற்றை இந்தக் கட்டுரையில் காணலாம்.
ராகு - கேது என்பதை சர்ப்ப கிரகங்கள். இதை நிழல் கிரகங்கள் என்றும் சொல்வார்கள். வாக்கிய பஞ்சாங்கப்படி 26.4.2025 தேதியும், திருக்கணிதப்படி நாளை (18.5.2025) ராகு கேது பெயர்ச்சி நடைபெறவுள்ளது. அதன்படி ராகு பகவான் மீனம் ராசியில் இருந்து கும்பம் ராசிக்கும், கேது பகவான் கன்னி ராசியில் இருந்து சிம்மம் ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார்கள்.

தாக்கம்
மற்ற கிரகங்கள் முன்னோக்கி நகரும். ராகு - கேது மட்டும் பின்னோக்கி நகரும். பொதுவாக ராகு -கேதுவுக்கு ஸ்தான பலம் இல்லை. கும்பம் என்பது சனி வீடு. தன்னுடைய சதய நட்சத்திர வீட்டில் ராகு பெயர்ச்சி ஆகிறார். அதனால் அங்கு ராகுவின் தாக்கம் அதிகமாக இருக்கும். அதேபோல கேது பகவான் தன்னுடைய மகம் நட்சத்திரம் உள்ள சிம்மம் வீட்டுக்கு பெயர்ச்சி ஆகிறார். இதுவும் முக்கியத்துவம் வாய்ந்தது.
போர்
போர் பதற்றம், இயற்கை சீற்றங்கள், பங்குச்சந்தை பின்னடைவு, தங்கம் விலை உயர்வு, அனைத்து வகையான வரிகளும் உயர்வு, ஆளும் அரசியல் தலைவர்களின் நிர்வாக சொதப்பல், கடன் சுமை என்று ராகு கேது கிரகங்களால் உலகில் நிறைய மாற்றங்கள் ஏற்படும். அதேபோல திடீர் பணக்கார யோகமும் ஏற்படும். இந்த ராகு கேது பெயர்ச்சி மேஷம் ராசிக்கு கொடுக்கவுள்ள பலன்களை இந்தக் கட்டுரையில் காணலாம்.
மேஷம்
மேஷம் ராசிக்காரர்களுக்கு ராகு பகவான் 11 ஆம் இடத்துக்கும், கேது பகவான் ஐந்தாம் இடத்துக்கும் பெயர்ச்சி ஆகிறார். உத்யோகம், தொழிலில் லாபம் நன்றாக இருக்கும். மனதில் இருந்த கவலைகள் நீங்கி நிம்மதி பிறக்கும். முதலீடு சிறப்பாக இருக்கும். மனதில் தன்னம்பிக்கை, தைரியம் அதிகரிக்கும்.
குடும்பம்
தொலைதூரத்தில் இருந்து நல்ல தகவல்கள் கிடைக்கும். வாழ்க்கை துணை சம்பந்தப்பட்ட கவலைகள் நீங்கும். குடும்பத்தில் அன்யோன்யம் அதிகரிக்கும். குடும்பத்தினருடன் உள்ளூர் மற்றும் வெளியூர் பயணங்கள் மேற்கொள்வீர்கள். அடுத்தடுத்து உறவினர்கள் மற்றும் நண்பர்களின் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும்.
உத்யோகம்
ராகு லாப ஸ்தானத்தில் அமர்ந்து, அங்கு குரு பார்வையும் விழப்போகிறது. இது நல்ல அதிர்ஷ்டம், அசுர வளர்ச்சி ஆகியவற்றை கொடுக்கும். இறங்கிய காரியங்களில் பிரம்மாண்ட வெற்றி கிடைக்கும். உத்யோகத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு, இட மாற்றம் கிடைக்கும். பழைய பாக்கி வசூலாகும். ஆரோக்கியத்தில் நீண்ட காலமாக இருந்த பிரச்னைகள் நீங்கும்.
வெற்றி
இதுநாள் வரை இருந்த சங்கடங்கள், தடைகள் உடையும். பகை நீங்கும். வேற்று மொழி மனிதர்களால் அதிகம் ஆதாயம் அடைவீர்கள். தொழிலில் புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். கடல் கடந்து ஏற்றுமதி, இறக்குமதி சம்பந்தப்பட்ட தொழில் கைக்கொடுக்கும். வெளியூர், வெளிநாட்டு பணிகளில் இருப்போர் மனக்குறை நீங்கும். உயர் கல்வி சம்பந்தப்பட்ட முயற்சிகள் வெற்றியடையும்.
சுப காரியம்
வெளிநாடுகளில் இருக்கும் சிலர் சொந்த ஊர் திரும்பும் வாய்ப்புள்ளது. தடைபட்ட சுப காரியங்கள் நிறைவேறும். குழந்தை பாக்கியம் இல்லாமல் அவதிப்பட்டவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்க வாய்ப்புள்ளது. தடைபட்ட பல காரியங்கள் நிறைவேறும். நண்பர்களால் ஆதாயம் உள்ளது.
கவனம்
ஆரோக்கியத்தில் ஹார்மோன் மற்றும் வயிறு சம்பந்தப்பட்ட பிரச்னைகள் வந்து செல்லும். பஞ்சம ஸ்தானத்தில் கேது இருப்பதால் குழந்தைகளின் விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வம்பு வழக்குகளில் சிக்குவதற்கு வாய்ப்புள்ளது. குழந்தைகளின் ஆரோக்கியத்திலும் அதிக கவனம் தேவை.
பரிகாரம்
அபிராம அந்தாதி பாடல்களை முழுவதுமாக கேட்கலாம். அதிகளவு தியானம் செய்வது வெற்றியை கொடுக்கும். மேலும் பிள்ளையார் பட்டி சென்று அபிஷேகம், வழிபாடு செய்து வருவது நல்லதை தரும்.
-
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
தமிழ் புத்தாண்டு ராசி பலன்: அஷ்டமசனியில் அதிர்ஷ்டத்தை அள்ளும் சிம்ம ராசி.. காதலில் வெற்றி கன்ஃபார்ம் -
சென்னையில் ரூ.36 கோடி கோடிக்கு வீடு வாங்கிய நகை கடைக்காரர்.. அதுவும் இந்த ஏரியாவில்..!! -
33 கேள்விகளுடன் ஒவ்வொரு வீட்டிற்கும்.. நேரடியாகவே வரும் அதிகாரிகள்.. நாம் என்ன செய்ய வேண்டும்? -
திமுக சிங்கிள் மெஜாரிட்டி! அதிமுகவிற்கு எதிர்க்கட்சி அந்தஸ்தே கிடைக்காது? சர்வேவில் கவனிச்சீங்களா -
எதிர்நீச்சல் சீரியல் ராணா யார் தெரியுமா? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா? இனி தான் சம்பவமே இருக்கு -
சென்னை சென்ட்ரல் -கோவை வந்தே பாரத்... தங்க முட்டை போடும் வாத்து.. ஒப்புக்கொண்ட ரயில்வே?












Click it and Unblock the Notifications