ராகு கேது பெயர்ச்சி 2022: கனவுகள் நனவாகும் காலம்... யாருக்கு கை கூடி வரப்போகிறது தெரியுமா?
கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு ராகு கேது பெயர்ச்சியால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.
சென்னை: தியாக சிந்தனையும் திடமான மனதும் கொண்ட கன்னி ராசிக்காரர்களே,
செயல்வீரரான உங்களுக்கு இந்த ராகு கேது பெயர்ச்சி உங்களுக்கு அற்புதமான மாற்றங்களையும் முன்னேற்றத்தையும் தரப்போகிறது. குடும்ப ஸ்தானத்தில் அமர்ந்துள்ள கேதுவும் எட்டாம் வீட்டில் அமர்ந்துள்ள ராகுவும் என்னென்ன பலன்களைத் தரப்போகிறது என்றும் பரிகாரம் என்ன செய்ய வேண்டும் என்றும் பார்க்கலாம்.
ராகு கேது பெயர்ச்சி வாக்கியப்பஞ்சாங்கப்படி நிகழ்ந்துள்ளது. ரிஷப ராசியில் இருந்து ராகு மேஷ ராசிக்கும் விருச்சிக ராசியில் இருந்து கேது துலாம் ராசிக்கும் இடப்பெயர்ச்சி அடைந்துள்ளனர். இரண்டு கிரகங்களும் நிழல் கிரகங்கள் என்பதால் எதிர்திசையில் சுழலும். இந்த கிரகங்களுக்கு சொந்த வீடு இல்லை செவ்வாயைப் போல ராகுவும், சுக்கிரனைப் போல கேதுவும் பலன் தரப்போகின்றனர்.
18 மாதங்கள் ராகுவும் கேதுவும் மேஷம் மற்றும் துலாம் ராசிகளில் பயணம் செய்கின்றனர். 18 மாதங்களில் ராகுவும், கேதுவும் இணைந்து கன்னி ராசியில் பிறந்தவர்களுக்கு எப்படிப்பட்ட பலன்களைத் தரப்போகின்றனர் என்று பார்க்கலாம்.

மன நிம்மதி அதிகரிக்கும்
கன்னி ராசிக்காரர்களுக்கு கவலைகள் மறைந்து மன நிம்மதி கிடைக்கப்போகிறது. வருமானம் அதிகரிக்கும். எதிர்பார்த்த உதவி கிடைக்கும். தடைபட்ட காரியங்கள் நிறைவேறும். தள்ளிப்போன சுபகாரியங்கள் இனி மளமளவென நடைபெறும். குடும்ப பிரச்சினைகள் எதுவென்றாலும் அதை வெளியில் சொல்ல வேண்டாம் அதுவே சிக்கலாகிவிடும்.

உடல் நலம் சீராகும்
மே மாதம் வரைக்கும் காரியங்களில் கவனம் தேவைப்படும் பண விசயங்களில் கவனமாக இருங்கள். அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் அக்களை தேவை மருத்துவ சிகிச்சைகள் தேவைப்படும். திடீர் மருத்துவ செலவுகள் வரலாம். மே மாதத்திற்கு மேல் அம்மாவின் உடல் நலம் சீரடையும். எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். பிள்ளைகளுக்கு திருமண சுபகாரியம் கை கூடும். 2023 ஜனவரி முதல் அக்டோபர் வரை அலுவலகத்தில் சின்னச் சின்ன பிரச்சினைகள் வரலாம்.
உயரதிகாரிகளிடம் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது.

செய் தொழில் லாபம்
தொழிலில் திறமை பளிச்சிடும். நிர்வாகத்திறமை அதிகரிக்கும். கூட்டுத்தொழிலில் லாபம் அதிகரிக்கும். புதிய வாய்ப்புகள் தேடி வரும். பேச்சில் சாதுர்யம் அதிகரிக்கும். உங்களின் பேச்சுக்கு மதிப்பு மரியாதை அதிகரிக்கும். எதையும் வெளிப்படையாகப் பேசுவீர்கள். தூக்கமின்மை பிரச்சினை நீங்கும். வேலையில் கவனம் தேவை. அக்கம் பக்கத்தினர் உங்களைப் பற்றி குறை சொல்ல தயாராகவே இருப்பார்கள்.

பணவரவு
வெளியிடங்களில் முடிந்தவரை வெளிப்படையாகப் பேசுவதைத் தவிர்த்துவிடுங்கள். சிலருக்கு பண வரவு அதிகமாக வந்தாலும் கூடவே சுப விரைய செலவுகளும் வரும். பிள்ளைகளுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். வண்டி வாகன வசதி சேரும். விஐபிக்களின் அறிமுகம் கிடைக்கும். பலரும் பாராட்டும் படி சாதிப்பீர்கள். உங்களின் உடல் நலனில் அதிக அக்கறை தேவை. தொழிலில் அகலக்கால் வைத்து அவதிப்பட வேண்டாம்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications