Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ராகு கேது பெயர்ச்சி பலன் 2022: இந்த 6 ராசிக்காரர்களில் ராகு கேதுவால் யாருக்கு யோகம் வரும்

ராகு கேது பெயர்ச்சி வாக்கியப்பஞ்சாங்கப்படி மார்ச் மாத இறுதியிலும் திருக்கணித பஞ்சாங்கப்படி ஏப்ரல் மாதம் 12ஆம் தேதியும் நிகழப்போகிறது. இந்த கிரகப்பெயர்ச்சியால் துலாம் முதல் மீனம் வரை 6 ராசிகளில் பிறந்தவர்களுக்கு என்னென்ன

Subscribe to Oneindia Tamil

சென்னை: ராகு கேது பெயர்ச்சி வாக்கியப்பஞ்சாங்கப்படி மார்ச் 21ஆம் தேதி பங்குனி மாதம் 7ஆம் தேதி நிகழப்போகிறது. திருக்கணிதப்பஞ்சாங்கப்படி ஏப்ரல் 12ஆம் தேதி நிகழப்போகிறது. இந்த கிரகப்பெயர்ச்சியால் சிலருக்கு திடீர் அதிர்ஷ்டம் தேடி வரும். மேஷம் முதல் கன்னி வரை 6 ராசிகளில் பிறந்தவர்களுக்கு என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கும் என்ன பரிகாரம் செய்யலாம் என்று பார்க்கலாம்.

நவ கிரகங்களில் ராகுவும் கேதுவும் சாயா கிரகங்கள் என்றாலும் மனிதர்களின் நல்லது கெட்டதுகளில் முக்கிய பங்கு வகிக்கின்றன. எந்த ஒரு நல்ல காரியம் செய்வதற்கு முன்பாக ராகு காலம் எமகண்டம் பார்த்துதான் செய்கின்றனர். ராகு அள்ளிக்கொடுப்பார். கேது ஞானத்தை கொடுப்பார்.

ராகு கேது பெயர்ச்சி வாக்கியப்பஞ்சாங்கப்படி மார்ச் 21ஆம் தேதி பங்குனி மாதம் 7ஆம் தேதி நிகழப்போகிறது. திருக்கணிதப்பஞ்சாங்கப்படி ஏப்ரல் 12ஆம் தேதி நிகழப்போகிறது. இந்த கிரகப்பெயர்ச்சியால் சிலருக்கு திடீர் அதிர்ஷ்டம் தேடி வரும். துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம் மீனம் வரை 6 ராசிகளில் பிறந்தவர்களுக்கு என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கும் என்ன பரிகாரம் செய்யலாம் என்று பார்க்கலாம்.

துலாம்

துலாம்


சுக்கிரனை ராசி அதிபதியாகக் கொண்ட துலாம் ராசிக்காரர்களே, உங்கள் ராசியில் கேதுவும் 7 ஆம் இடத்தில் ராகுவும் பெயர்ச்சியாகிறார்கள். உங்களால் எல்லோருக்கும் நல்லது நடக்கும். ஆனால் உங்களுக்கு எந்த பயனும் இல்லை என்ற நிலை மாறும். ராசியில் கேது சஞ்சரிப்பதால் கௌரவம் புகழ் கீர்த்தி அந்தஸ்து தரும். வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும் உத்யோகத்தில் முன்னேற்றம் வரும்.வருமானம் திருப்தி தரும்.தேவைகள் பூர்த்தியாகும்.குடும்பத்தில் பிள்ளைகள் படிப்புக்கு செலவு செய்வீர்கள். களத்திரம் கூட்டு தொழில் ஸ்தானம் நண்பர்கள் ஸ்தானத்தில் ராகு அமர்வதால் கணவன் மனைவி இடையே இருந்த பிரச்சினைகள் நீங்கி ஓன்று சேரலாம். வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் துர்க்கைக்கு விளக்கேற்றி வழிபடுங்கள். நன்மைகள் நடைபெறும்.

 விருச்சிகம்

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களே, இதுவரை உங்கள் ராசியில் கேது 7 ஆம் பாவத்தில் ராகு இருந்த நிலை மாறி இனி விரைய ஸ்தானமான 12 ஆம் பாவத்தில் கேது 6ஆம் பாவத்தில் ராகு வருகிறது. உங்களை வாட்டி வதைத்த பிரச்சினைகள் நீங்கும். இனி பிரச்சினைகள் தீரப்போகிறது. எதிரி போட்டி பொறாமை கடன் வைத்தியசெலவு,ஆகிய ஸ்தானத்தில் ராகு வருவதால் கடன்கள் அடைப்படும் தீராத நோய் தீரும். தொழில் முயற்சிகள் கை கூடும்.படித்து முடித்து வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை அமையும். திருமணம் கை கூடி வரும் திருமணமானவர்களுக்கு புத்திர பாக்கியம் கை கூடி வரும். செவ்வாய்கிழமை ராகு காலத்தில் விளக்கேற்றி வழிபடுங்கள். நீண்ட நாள் பட்ட கடன்களும் அடைபடும்.

 தனுசு

தனுசு

குரு பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட தனுசு ராசிக்காரர்களே, இது வரை 6ஆம் வீட்டில் இருந்த ராகு 5ஆம் இடத்திற்கும் 12ஆம் வீட்டில் இருந்த கேது 11ம் இடத்திற்கும் வருகிறார்கள். போதுமான வருமானம் வந்தாலும் நிம்மதி குறைந்த வாழ்க்கை வாழ்ந்த உங்களுக்கு ராகு கேது பெயர்ச்சி நிம்மதியை தரும். கேது லாப ஸ்தானத்தில் வருவதால் தொட்டது துலங்கும். தேவையற்ற செலவுகள் குறையும். அசையா சொத்துகள் வீடு மனை வாங்கும் யோகத்தை கொடுக்கும். 18 வருஷத்துக்கு பிறகு 5ம் இடத்திற்கு ராகு வருவதால் முன்னோர் வகையில் உள்ள தோஷம் நீங்கி சுகம் பெறலாம். வியாழக்கிழமை ராகுகாலத்தில் விளக்கேற்றி வழிபட நன்மைகள் நடைபெறும்.

மகரம்

மகரம்

சனி பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மகர ராசிக்காரர்களே, இதுவரை உங்களைத் திணறடித்த பிரச்சனைகள் கொஞ்சம் கொஞ்சமாக குறையும். நான்காம் பாவம் தாயார்,சுகம்,வாகனம் கல்வி,நிலபுலன்கள் ஆகியவற்றை குறிக்கும் இந்த 4ம் பாவத்திக்கு ராகு வருகிறார். இது வரை தடைப்பட்ட காரியங்களை வெற்றிகரமாக முடிப்பதற்கு உதவுவார்கள். தாயார் வழியில் சில தேவைற்ற செலவுகள் உண்டாகலாம்.பூமி வீடு வாகனம் வாங்கும் யோகத்தை கொடுப்பார். பழைய கடன்கள் அடைப்படும். வரவுகள் அதிகரிக்கும் சேமிப்பும் உயரும். தொழில் நிலை முன்னேற்றத்தை தரும். வேலை வாய்ப்புகள் தேடி வரும் புரமோசன் கிடைக்கும். சனிக்கிழமை ராகு காலத்தில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபட பாதிப்புகள் நீங்கி நன்மைகள் அதிகரிக்கும்.

கும்பம்

கும்பம்

சனி பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட கும்ப ராசிக்காரர்களே, இது வரை 4ஆம் இடத்தில் இருந்த ராகு 3ஆம் இடத்திலும் 10 இடத்தில் இருந்த கேது 9ஆம் இடத்திற்கும் வருகிறார்கள். ராகு இப்பொழுது யோகத்தை வாரி வழங்க போகிறார். இனி தைரியத்துடன் புது தெம்புடன் செழிப்பான வாழ்க்கை அமையும். புது முயற்சிகள் யாவும் வெற்றி பெறும்.தேவைகள் பூர்த்தியாகும்.இது வரை ஏளனம் செய்தவர்கள் எல்லாம் உங்களுடைய முன்னேற்றத்தை பார்த்து வியந்து போவார்கள். குடும்பத்தில் நீண்ட நாட்களாக இருந்த பிரச்சனைகள் தீரும். கும்பிட போன தெய்வம் குறுக்கே வந்த மாதிரி பெரியவர்கள் தானாக நாடி வந்து உதவி செய்வார்கள். உறவுகள் சொந்தங்களால் வீட்டில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வெள்ளிக்கிழமை ராகு காலத்தில் விளக்கேற்றி வழிபடுங்கள் நன்மையும் சந்தோஷமும் அதிகரிக்கும். சனிக்கிழமையன்று ராகு காலத்தில் நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபட நன்மைகள் அதிகரிக்கும்.

மீனம்

மீனம்

குரு பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மீன ராசிக்காரர்களே, ராகு உங்கள் ராசிக்கு குடும்ப ஸ்தானத்திற்கும் கேது உங்க ராசிக்கு ஆயுள் ஸ்தானத்திற்கும் வருவது சிறப்பு. திடீர் பணவருமானம் வரும் திடீர் அதிர்ஷ்டங்கள் தேடி வரும். அதே நேரத்தில் சேமிக்க முடியவில்லையே என்ற வருத்தம் ஏற்படும் அளவிற்கு செலவுகளும் வரும். வேலை செய்யும் இடத்தில் தேவையில்லாத பேச்சுக்களை தவிர்த்து விடுங்கள். தேவையற்ற கோபம், வெறுப்பு உணர்வுகளை கட்டுப்படுத்துங்கள். வீட்டிலும் வெளியிலும் காரசார விவாதங்களை தவிர்த்து விடுங்கள். பண விவகாரங்களில் வாக்கு கொடுத்து மாட்டிக்கொள்ள வேண்டாம். ராகு காலத்தில் ராகு கேதுவிற்கு அர்ச்சனை பண்ணுங்கள் நல்லதே நடக்கும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+