ராகு கேது பெயர்ச்சி 2023: எதிர்பாராத திருப்பம்..அள்ளித்தரப்போகும் ராகு கேது..யாருக்கு ஜாக்பாட்

Subscribe to Oneindia Tamil

மதுரை: நவ கிரகங்களில் ராகுபகவான் அதிர்ஷ்டத்தை வருமானத்தை அள்ளிக்கொடுப்பார். கேது பகவான் கெடுக்க நினைப்பவர்களை கெடுப்பார் எனவேதான் ராகுவைப் போல கொடுப்பாரும் இல்லை கேதுவைப் போல கெடுப்பாடும் இல்லை என்பார்கள். தமிழ் பஞ்சாங்கப்படி ராகு பகவான் மேஷ ராசியில் இருந்து மீன ராசிக்கும் கேது பகவான் துலாம் ராசியில் இருந்து கன்னி ராசிக்கும் அக்டோபர் மாத இறுதியில் இடபெயர்ச்சி அடைய உள்ளனர். இந்த ராகு கேது பெயர்ச்சியால் தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு என்னென்ன பலன்களை கொடுக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

நவக்கிரகங்களில் புதனை விட செவ்வாயும், செவ்வாயை விட சனியும், சனியை விட குருவும், குருவை விட சுக்கிரனும், சுக்கிரனை விட சந்திரனும் சந்திரனை விட சூரியனும் சூரியனை விட ராகுவும் ராகுவை விட கேதுவும்,பலம் பெற்றவர்கள். ராகு கேதுவிற்கு ராசி மண்டலத்தில் சொந்த ஆட்சி வீடு கிடையாது இவர்கள் யாருடைய வீட்டில் இருக்கின்றனரோ யாருடைய சாரத்தில் இருக்கிறார்களோ அதனுடைய பலனை செய்வார்கள். அக்டோபர் மாதத்திற்குப் பிறகு ராகு குரு பகவானைப் போலவும் கேது புதன் பகவானைப் போலவும் செயல்படுவார்கள்.

Rahu Ketu Peyarchi Palan 2023: Dhanusu Rasi Rahu Ketu Peyarchi Palan Tamil

தனுசு: உங்கள் ராசிக்கு 4ஆம் வீடான சுக ஸ்தானத்தில் ராகுவும் 10ஆம் வீட்டில் கேதுவும் பயணம் செய்யப்போகின்றனர். 4ஆம் பாவம் தாயார்,சுகம்,வாகனம் கல்வி,நிலபுலன்கள் ஆகியவற்றை குறிக்கும் இந்த 4ம் பாவத்திற்கு ராகு வருகிறார். சனியின் பார்வையில் இருந்து ராகு விலகினாலும் கேந்திரத்தில் வரும் ராகு கேது இது வரை தடைப்பட்ட காரியங்களை வெற்றிகரமாக முடிப்பதற்கு உதவுவார்கள்.

வீடு கட்டும் யோகம்: பூமி வீடு வாகனம் வாங்கும் யோகத்தை கொடுப்பார். வீடு கட்டவேண்டும் என்கிற நீண்ட நாள் கனவுகள் நனவாகும். கடன்கள் அடைபடும். கடந்தகால பிரச்சினைகள் கட்டுக்குள் வரும். புதிய வேலை கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு சிலருக்கு இடமாற்றம் கிடைக்கும்.
அம்மாவின் உடல் நலனில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். மருத்துவ செலவுகள் வரும். தாய்வழி உறவினர்களுக்கு இழப்பும் ஏற்படும். பத்தாம் இடத்தில் கேது அமர்வதும் பாதிப்பை ஏற்படுத்தும்.

வேலையில் இடம்மாற்றம்: பத்தாம் இடம் என்பது தொழில், மாமியார் வீடு, உத்தியோகம் வேலை வாய்ப்பு ஆகிய ஸ்தானங்களுக்கு கேது வருகிறார். தொழிலில் இடமாற்றம் ஏற்படும். பெண்களுக்கு உத்யோகத்தில் உயர்வு கிடைக்கும். தொழிலில் இடமாற்றம் உத்யோக உயர்வை கொடுக்கும். வெளிநாட்டு தொடர்புடைய தொழில்கள்,வருமானம் அனுகூலம் ஆதாயத்தை தரும். பூர்வீக இடத்தை விட்டு விட்டு சிலருக்கு தொழில் ரீதியாக இடமாற்றம் வரலாம்.

திடீர் திருப்பம்: தனம் பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். இந்த ராகு கேது பெயர்ச்சி உங்களுக்கு எதிர்பாராத திருப்பத்தை தரும். ராகு கேது பெயர்ச்சியினால் நல்ல வேலை வாய்ப்பு அமையும். கணவன் மனைவி உறவு சிறப்பாக இருக்கும். அவப்பெயர் நீங்கும். மூத்தவர்களின் உடல் நலனில் அக்கறை செலுத்துங்கள். புதிய வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். ஆன்மீக சுற்றுலா பயணங்கள் அதிகரிக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+