கேது பெயர்ச்சி பலன் 2023: சித்திரை நட்சத்தில் கேதுவின் பயணம்.. 3 ராசிக்காரர்களுக்கு திடீர் புரமோசன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கேது பகவான் மோட்சகாரகன். துலாம் ராசியில் விசாகம் நட்சத்திரத்தில் இருந்து சித்திரை நட்சத்திரத்திற்கு இடப்பெயர்ச்சி அடைந்துள்ளார். கேதுவின் நட்சத்திர மாற்றத்தினால் சில ராசிக்காரர்கள் வாழ்க்கையில் திடீர் மாற்றங்கள் உண்டாகும். வேலையில் இடமாற்றமும் புரமோசனும் கிடைக்கும். எந்தெந்த ராசிக்காரர்களுக்கு என்ன பலன் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

Rahu ketu peyarchi palan 2023: Ketu transit Chithirai Star Who will get sudden promotion in work place

மேஷம்: கேதுபகவான் களத்திர ஸ்தானத்தில் பயணம் செய்வதால் கணவன்-மனைவிக்குள் அவ்வப்போது காரசாரமான விவாதங்கள் வந்துபோகும். குடும்பத்தில் விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. அந்தரங்க விஷயங்களை யாரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டாம். தாழ்வு மனப்பான்மையில் இருந்து விடுபடுவீர்கள். மனதளவிலும் உடல் ரீதியாகவும் உற்சாகமாக இருப்பீர்கள். வண்டி வாகனம் வாங்குவீர்கள். உறவும் நட்பும் பலப்படும். அலுவலகத்தில் மதிப்பு மரியாதை கூடும். மேலதிகாரிகளின் பகைக்கு ஆளாக வேண்டாம். தொழில் வியாபாரத்தில் செய்யும் முதலீடுகளில் வெற்றியும் லாபமும் தேடி வரும். நேர்மைதான் உங்களுக்கு எப்போதும் வெற்றியை தேடித்தரும். விபரீத ராஜயோகம் வரப்போகிறது. திடீர் பண வரவும் வேலையில் புரமோசனும் தேடி வரும். கண் திருஷ்டி அதிகரிக்கும் கவனம் தேவை. வாகன பயணங்களில் நிதானம் தேவை.

ரிஷபம்: கேதுவின் நட்சத்திர மாற்றம் சுப காரியங்களில் தடைகளை ஏற்படுத்தும். கணவன் மனைவி இடையே சண்டை சச்சரவுகள் வந்து நீங்கும். பங்குச்சந்தை முதலீடுகளை தவிர்க்கவும். தொழில் வியாபாரிகளிடம் கருத்து வேறுபாடுகள் உண்டாகும் கவனம் தேவை. புதிய முதலீடுகள் ஒப்பந்தங்களை தவிர்ப்பது நல்லது. வீண் விரையங்கள் அதிகரிக்கும். சுப விரைய செலவுகளாக மாற்றுவது நல்லது. காதல் திருமணம் நடைபெற வாய்ப்பு உள்ளது. சகோதர சகோதரிகளிடையே பாசப்பிணைப்புகள் அதிகரிக்கும். அலுவலகத்தில் வேலைப்பளு அதிகரிக்கும் கடின உழைப்புக்கு ஏற்ற பலன் கிடைக்கும். பதவி உயர்வும் சம்பள உயர்வும் உண்டாகும்.

மிதுனம்: கேதுவின் சித்திரை சஞ்சார பலன் உடலில் இருக்கும் நோய்களை வெளிப்படுத்தும். சிறுநீரகம், மறைமுக நோய்கள் வந்து நீங்கும். சிறு அறுவை சிகிச்சை செய்ய வாய்ப்பு உள்ளது. பூர்வீக சொத்து பிரச்சினை நீங்கும். சொத்து விற்பனை மூலம் பண வருமானம் அதிகரிக்கும். பழைய கடன்கள் பயமுறுத்தும். கவலை வேண்டாம் திடீர் பண வருமானம் வந்து கடன்கள் அடைபடும். சகோதர சகோதரிகளிடையே சண்டை சச்சரவுகள் வரும். விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. அலுவலகத்தில் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த புரமோசன் தேடி வரும். சம்பள உயர்வும் வந்து உங்களை மகிழ்ச்சிப்படுத்தும்.

கடகம்: வேலைக்காக இடம்மாற்றம் உண்டாகும். பூர்வீகத்தை விட்டு வேலைக்காகவும் தொழில் வியாபாரத்திற்காகவும் வெளியூரில் சென்று குடியேறுவீர்கள். புகழும் அந்தஸ்தும் தேடி வரும். அலுவலகத்தில் திடீர் புரமோசனும் சம்பள உயர்வும் கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு திடீர் பதவியும் செல்வாக்கும் தேடி வரும். பேச்சிற்கு மதிப்பு கிடைக்கும். அம்மாவின் உடல் ஆரோக்கியம் சீரடையும். பதவியும் பாராட்டும் கிடைக்கும்.

சிம்மம்: கேதுவின் இடம்மாற்றத்தினால் நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்கும். பிள்ளைகளால் ஏற்பட்ட பிரச்சினைகள் மன உளைச்சல்கள் நீங்கும். அசையும் அசையா சொத்துக்கள் வாங்குவீர்கள். பூர்வீக சொத்துக்களில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். சொத்து விற்பனையின் மூலம் வருமானம் அதிகரிக்கும். ஆலய தரிசனம் செல்வீர்கள். அசையும் அசையா சொத்து சேர்க்கை ஏற்படும். ஆன்மீக பயணங்கள் செல்வதற்கான காலம் கைகூடி வந்துள்ளது.

கன்னி: அலுவலக பணிகளில் கவனமும் நிதானமும் அவசியம். வேலையில் திடீர் இடமாற்றம் உண்டாகும். நகைகள் பணத்தை பத்திரப்படுத்துங்கள். விலை உயர்ந்த நகைகளை யாருக்கும் இரவலாக கொடுக்க வேண்டாம். பங்குச்சந்தை முதலீடுகள் மூலம் லாபம் கிடைக்கும். திடீரென்று வரும் பணத்தை நிதி நிறுவனங்களில் டெபாசிட் செய்து இழந்து விட வேண்டாம். வேலைப்பளு கூடும். எதிர்பாராத இடத்தில் இருந்து பணம் வந்து பாக்கெட்டை நிரப்பும். உயரதிகாரிகளின் பேச்சிற்கு மதிப்பு தருவது நல்லது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+