ராகு கேது பெயர்ச்சி பலன் 2023: நினைத்தது நிறைவேறும்..குடும்பத்தில் குதூகலம்.. யாருக்கு தெரியுமா?
மதுரை: ராகுவும் கேதுவும் ஓவ்வொரு ராசியிலும் ஓன்றறை ஆண்டுகள் அதாவது 18 மாதங்கள் தங்கி சுப அசுப பலன்களைத் தருவார்கள். ராகுபகவான் அள்ளிக்கொடுப்பார். கேது பகவான் கெடுக்க நினைப்பவர்களை கெடுப்பார். தமிழ் பஞ்சாங்கப்படி ராகு பகவான் மேஷ ராசியில் இருந்து மீன ராசிக்கும் கேது பகவான் துலாம் ராசியில் இருந்து கன்னி ராசிக்கும் அக்டோபர் மாத இறுதியில் இடப்பெயர்ச்சி அடைய உள்ளனர். இந்த ராகு கேது பெயர்ச்சியால் மீனம் ராசியில் பிறந்தவர்களுக்கு என்னென்ன பலன்களை தரப்போகிறது என்று பார்க்கலாம்.
நவக்கிரகங்களில் புதனை விட செவ்வாயும், செவ்வாயை விட சனியும், சனியை விட குருவும், குருவை விட சுக்கிரனும், சுக்கிரனை விட சந்திரனும் சந்திரனை விட சூரியனும் சூரியனை விட ராகுவும் ராகுவை விட கேதுவும்,பலம் பெற்றவர்கள். ஜனன ஜாதகத்தில் ராகு கேது 3, 6, 11 ,ஆகிய இடங்களில் நல்ல பலனை தரக்கூடியவை. ராகு கேதுவுக்கு 3, 7, 11, பார்வைகள் விசேசமானது. ஜாதகத்தில் ராகு- கேது மேஷம், ரிஷபம், கடகம், கன்னி, மகரம், ஆகிய வீடுகளில் இருந்தால் வலுவான யோகம் உண்டு என்று நூல்களில் சொல்லப்பட்டுள்ளது.
ராகுவைப் போல கொடுப்பாரும் இல்லை கேதுவைப் போல கெடுப்பாடும் இல்லை என்பார்கள். யோகாதிபதி ராகுவும், மோட்சகாரகன் கேதுவும் நிழல் கிரகங்கள். ராகு ஆசைக்கு காரகர், கேது மோட்சத்திற்கு காரகர் இவர்களுக்கு ராசி மண்டலத்தில் சொந்த ஆட்சி வீடு கிடையாது இவர்கள் யாருடைய வீட்டில் இருக்கின்றனரோ யாருடைய சாரத்தில் இருக்கிறார்களோ அதனுடைய பலனை செய்வார்கள். அக்டோபர் மாதம் முதல் ராகு குரு பகவானைப்போலவும் கேது புதன் பகவானைப்போலவும் செயல்படப்போகின்றனர்.
ஜென்ம ராகு: ராகுபகவான் இது வரை உங்கள் ராசிக்கு இரண்டாவது வீட்டிலும் கேது பகவான் எட்டாவது வீட்டிலும் சஞ்சரித்தனர். இப்பொழுது ஜென்ம ராசியில் வரும் ராகுவிற்கு சனியின் பார்வையும்,கேதுவின் பார்வையும் ராசிக்கு கிடைக்கிறது. ஜென்ம ராசி என்பது கௌரவம், செயல் தன்மை, கீர்த்தி, செல்வாக்கு,புகழ்,பெறுமை,ஆற்றலை குறிக்கும் இடமாகும். நீண்ட நாள் பிரிந்திருந்த குடும்பம் ஒன்று சேரும்.

திருமண யோகம்: சகோதர சகோதரிகள் வகையில் அனுகூலம் ஆதாயத்தை தரும். ராகுவை சனி பார்ப்பதால் தேவையில்லாத விரைய செலவை கொடுக்கும். சிலருக்கு மனைவி பெயரில் தொழில் தொடங்கும் வாய்ப்பு வரும். தொழிலில் முன்னேற்றம் வரும். சிலருக்கு தொழில் மாற்றம்,இடமாற்றம் வரலாம். பொருளாதாரம் நிலை உயரும் இது வரை தடைப்பட்ட திருமணம் இனி தடை நீங்கி நடக்கும். சிலருக்குக் குழந்தை பாக்கியம் உண்டாகும்
உயர்கல்வி யோகம்: உங்கள் பேச்சில் இனி முதிர்ச்சி தெரியும். உங்களை சிலர் அவமதித்து பேசினாலும் அதற்கு சரியான பதிலடி கொடுப்பீர்கள். உங்களின் களத்திர ஸ்தானத்தை ராகு பார்வையிடுவதால் இது வரை செய்த பரிகாரங்களுக்கு இப்பொழுது தான் பலன் கிடைக்கும்.உத்தியோக உயர்வு கல்வி மேன்மையை பெற்று நல்ல வேலைக்கு போகலாம். உயர்கல்வியும் படிக்கும் வாய்ப்பு கைகூடி வரும். வெளி உணவுகளைத் தவிர்த்துவிடுங்கள். நேரம் கடந்து சாப்பிடும் வழக்கத்தையும் மாற்றிக் கொள்ளுங்கள்.
களத்திர கேது: சனி பகவானோடு 7ஆம் வீட்டில் கேது பயணம் செய்யப்போவதால் தவிர்க்க முடியாத செலவும் அதனால் கடன் வாங்கும் கட்டாயமும் வரலாம். உடன்பிறந்தவர்கள் ஒத்துழைப்பார்கள். கணவன், மனைவிக்குள் அவ்வப்போது காரசாரமான விவாதங்கள் வந்துபோகும். ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து செல்லுங்கள் அந்தரங்க விஷயங்களை யாரிடமும் பகிர்ந்துகொள்ள வேண்டாம். தொழில் ரகசியங்களை யாரிடமும் வெளியிடவேண்டாம். உத்தி யோகத்தில் பதவி உயர்வு வரும். மேலதிகாரியை பகைத்துக்கொள்ள வேண்டாம்.
முன்னேற்றம்: ராகு கொடுத்தால் கேது கெடுப்பார் அதன் அடிப்படையில் அவர்களின் பெயர்ச்சிக்கு 3மாதத்திற்கு முன்னே அவர்களின் ஆட்டத்தை காண்பிக்க ஆரம்பித்து விட்டனர். இனி எல்லாவற்றிலும் கவனமாக செயல்பட வேண்டும். செவ்வாய்கிழமைகளில் ராகு காலத்தில் துர்க்கைக்கு விளக்கு போடுங்கள். ராகு, கேதுப் பெயர்ச்சி, கவலைகளிலிருந்து உங்களை விடுவித்து முன்னேற்றப்பாதையில் அழைத்துச்செல்லும். துளசி மாலை சாற்றி புதன்கிழமை பெருமாளை தரிசனம் செய்ய நன்மைகள் நடைபெறும்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications