ராகு கேது பெயர்ச்சி பலன் 2023: தலையை விட்டு நகரும் ராகு... யாருடைய வீட்டில் நிம்மதி தேடி வரும்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: சர்ப்ப கிரகங்களான ராகு கேது வரும் அக்டோபர் இறுதியில் இடப்பெயர்ச்சி அடைகின்றன. மேஷ ராசியில் உள்ள ராகு மீன ராசிக்கும் துலாம் ராசியில் உள்ள கேது கன்னி ராசிக்கும் இடப்பெயர்ச்சி அடைகின்றன. இந்த கிரகங்களின் இடப் பெயர்ச்சியால் மிகப்பெரிய மாற்றங்கள் சிலருக்கு ஏற்படும். தலைமேல் அமர்ந்த ராகு விரைய ஸ்தானத்திற்கு இடப்பெயர்ச்சி அடைவதால் மேஷம் ராசிக்காரர்களுக்கு என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

ராகுவும் கேதுவும் ஒவ்வொரு ராசியிலும் ஒன்றறை ஆண்டுகள் அதாவது 18 மாதங்கள் தங்கி சுப அசுப பலன்களைத் தருவார்கள். வாக்கிய பஞ்சாங்கப்படி ராகு பகவான் கடகத்தில் இருந்து மிதுனத்திற்கும் கேது பகவான் மகரத்தில் இருந்து தனுசு ராசிக்கும் பெயர்ச்சி அடைந்துள்ளனர். திருக்கணிதப்படி மார்ச் 6ஆம் தேதி இந்த இடப்பெயர்ச்சி நிகழ்கிறது. இந்த ராகு கேது பெயர்ச்சி கடகம் ராசிக்காரர்களுக்கு கொடுக்கும் பலன்களையும் அதற்கான பரிகாரங்களையும் பார்க்கலாம்.

Rahu Ketu Peyarchi Palan 2023: Mesham Rasi Rahu ketu Peyarchi Palan and Parikaram

நவக்கிரகங்களில் புதனை விட செவ்வாயும், செவ்வாயை விட சனியும், சனியை விட குருவும், குருவை விட சுக்கிரனும், சுக்கிரனை விட சந்திரனும் சந்திரனை விட சூரியனும் சூரியனை விட ராகுவும் ராகுவை விட கேதுவும்,பலம் பெற்றவர்கள். ஜனன ஜாதகத்தில் ராகு கேது 3, 6, 11 ஆகிய இடங்களில் நல்ல பலனை தரக்கூடியவை. ராகு கேதுவுக்கு 3, 7, 11, பார்வைகள் விசேசமானது. ஜாதகத்தில் ராகு- கேது மேஷம், ரிஷபம், கடகம், கன்னி, மகரம், ஆகிய வீடுகளில் இருந்தால் வலுவான யோகம் உண்டு என்று நூல்களில் சொல்லப்பட்டுள்ளது. இந்த ராகு கேது பெயர்ச்சி மேஷம் ராசியில் பிறந்தவர்களுக்கு கொடுக்கும் பலன்களையும் அதற்கான பரிகாரங்களையும் பார்க்கலாம்.

ராகுவைப் போல கொடுப்பாரும் இல்லை கேதுவைப் போல கெடுப்பாரும் இல்லை என்பார்கள். யோகாதிபதி ராகுவும், மோட்சகாரகன் கேதுவும் நிழல் கிரகங்கள். ராகுபகவான் அள்ளிக்கொடுப்பார். கேது பகவான் கெடுக்க நினைப்பவர்களை கெடுப்பார். ராகு ஆசைக்கு காரகர், கேது மோட்சத்திற்கு காரகர் இவர்களுக்கு ராசி மண்டலத்தில் சொந்த ஆட்சி வீடு கிடையாது இவர்கள் யாருடைய வீட்டில் இருக்கின்றனரோ யாருடைய சாரத்தில் இருக்கிறார்களோ அதனுடைய பலனை செய்வார்கள். மீன ராசிக்கு வரப்போகும் ராகு குரு பகவானைப் போலவும் கன்னி ராசிக்கு வரப்போகும் கேது புதன் பகவானைப் போலவும் செயல்படப்போகின்றனர்.

ராகு பகவான் உங்கள் ராசிக்கு ஜென்ம ராசியிலும், கேது பகவான் உங்கள் ராசிக்கு 7ஆம் பாவத்திலும் சஞ்சாரம் செய்தார்கள்.இப்பொழுது இடம் மாறி 12மிடத்தில் ராகுவும் 6ம் இடத்தில் கேதுவும் மாறுகிறார்கள். கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜ யோகம் என்பதன் அடிப்படையில் இப்பொழுது கெட்ட இடத்திற்கு ராகு கேது வருவது நல்லது தான். சுபகாரியங்கள் திருமணம் சடங்கு கிரக பிரவேசம் போன்ற சுபகாரியங்கள் நடக்கும். சிலரது பிள்ளைகளுக்கு கலப்பு திருமணம், காதல் திருமணம் அவர்கள் விருப்பப்படி செய்து வைக்கும் சூழ்நிலை வரும்.

லாப சனி ஜென்ம குரு என கிரகங்களின் இடப்பெயர்ச்சி அற்புதமாக இருக்கும் இந்த சூழ்நிலையில் ராகு கேது பெயர்ச்சியும் அருமையாக அமைந்துள்ளது. சிலருக்கு வீடு மாற்றம் ஊர் மாற்றம் உண்டாகும். ஜென்ம ராசியில் அமர்ந்து அறிவாளியை முட்டாளாக்கி உட்கார வைத்த ராகு 12 ம் இடத்திற்கு செல்லப்போகிறார். குரு பகவான் ராகுவின் பிடியில் இருந்து விடுபடுகிறார். வெளிநாட்டு பயணம்,தொழில் வாய்ப்பு அமையும். புதிய வேலை வாய்ப்பை கொடுப்பார். வெளியூர், வெளிநாடு வியாபாரத் தொடர்பு ஏற்படும்.

ஆன்மீகத்தை தரக்கூடிய கேது பகவான் உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டில் அமரப்போகிறார். வேலையில் இருந்த சிக்கல்கள் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். புது வேலை கிடைக்கும். கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளவும். தொழிலை பெருக்கி லாபம் சம்பாதித்து சுகபோகங்களை பெருக்கி கொள்ளலாம். புதிய கடன்களை வாங்கினாலும் அது சுப விரயமாக மாற்றி பழைய கடன்களை அடைக்கலாம். நோய் நொடி போட்டி பொறாமை ஒழியும். வீண் விரைய வைத்திய செலவுகள் குறையும்.

எதிரிகள் பலவீனமடைவார்கள். வழக்கு சாதகமாகும். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். இழுபறியான பணிகள் முழுமையடையும்.

கடந்த காலங்களில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள் எல்லாம் தித்திக்கும் நிலைக்கு மாறும். உங்களுடைய செயல்களில் காரியங்களில் தோல்வியை கண்டு அஞ்சாத உங்களுக்கு வெற்றியை எட்டி பிடிக்க வைக்கும். ராகு கேது பெயர்ச்சி முன்னேற்றத்தையும் மாற்றத்தையும் தரும். மலைபோல வரும் துன்பம் எல்லாம் பனிபோல விலகி ஓடும். குடும்பத்தில் நிம்மதியும் மகிழ்ச்சியும் கிடைக்கும் காலம் வந்து விட்டது. சிவ ஆலயம் சென்று திங்கட்கிழமையன்று நந்தி பகவானுக்கு பாலபிஷேகம் செய்யலாம் எண்ணற்ற பலன்கள் கிடைக்கும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+