ராகு கேது பெயர்ச்சி 2023: பொன் மழை பொழியும்.. மாடி வீடு கட்டும் யோகம்.. யாருக்கு தேடி வரும்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: நிழல் கிரகங்களான ராகுவும் கேதுவும் ஒவ்வொரு ராசியிலும் ஒன்றரை ஆண்டுகள் தங்கி சுப அசுப பலன்களைத் தருவார்கள். அக்டோபர் மாதத்தில் ராகு மீன ராசிக்கும் கேது கன்னி ராசிக்கும் இடப்பெயர்ச்சி அடைகின்றனர். ராகு கேது பெயர்ச்சியினால் தனுசு, மகரம் ராசியில் பிறந்தவர்களுக்கு என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

ராகு கேது பெயர்ச்சி: ராகுவைப் போல கொடுப்பாரும் இல்லை கேதுவைப் போல கெடுப்பாடும் இல்லை என்பார்கள். யோகாதிபதி ராகுவும், மோட்சகாரகன் கேதுவும் நிழல் கிரகங்கள். ராகுபகவான் அள்ளிக்கொடுப்பார். கேது பகவான் கெடுக்க நினைப்பவர்களை கெடுப்பார். ராகு ஆசைக்கு காரகர், கேது மோட்சத்திற்கு காரகர் இவர்களுக்கு ராசி மண்டலத்தில் சொந்த ஆட்சி வீடு கிடையாது இவர்கள் யாருடைய வீட்டில் இருக்கின்றனரோ யாருடைய சாரத்தில் இருக்கிறார்களோ அதனுடைய பலனை செய்வார்கள். ஜனன ஜாதகத்தில் ராகு கேது 3, 6, 11 ஆகிய இடங்களில் நல்ல பலனை தரக்கூடியவை. ராகு கேதுவுக்கு 3, 7, 11, பார்வைகள் விசேசமானது. ஜாதகத்தில் ராகு- கேது மேஷம், ரிஷபம், கடகம், கன்னி, மகரம், ஆகிய வீடுகளில் இருந்தால் வலுவான யோகம் உண்டு என்று நூல்களில் சொல்லப்பட்டுள்ளது.

Rahu ketu peyarchi palan 2023: Rahu Ketu Dhanusu and Makaram rasi palan and Parikaram

தனுசு: குரு பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட தனுசு ராசிக்காரர்களே.. உங்கள் ராசிக்கு 4ஆம் வீட்டிற்கு ராகுவும் 10ஆம் வீட்டிற்கு கேதுவும் பயணம் செய்யப்போகின்றனர். 4ஆம் பாவம் தாயார்,சுகம்,வாகனம் கல்வி,நிலபுலன்கள் ஆகியவற்றை குறிக்கும் இந்த 4ம் பாவத்திற்கு ராகு வருகிறார். கேந்திரத்தில் வரும் ராகு கேது இது வரை தடைப்பட்ட காரியங்களை வெற்றிகரமாக முடிப்பதற்கு உதவுவார்கள். அம்மாவின் உடல் நலனில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். மருத்துவ செலவுகள் வரும். தாய்வழி உறவினர்களுக்கு இழப்பும் ஏற்படும்.

வீடு கட்டும் யோகம்: ராகு பகவான் பூமி வீடு வாகனம் வாங்கும் யோகத்தை கொடுப்பார். வீடு கட்டவேண்டும் என்கிற நீண்ட நாள் கனவுகள் நனவாகும். கடன்கள் அடைபடும். கடந்தகால பிரச்சினைகள் கட்டுக்குள் வரும். புதிய வேலை கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு சிலருக்கு இடமாற்றம் கிடைக்கும். இந்த ராகு கேது பெயர்ச்சியினால் நல்ல வேலை வாய்ப்பு அமையும். கணவன் மனைவி உறவு சிறப்பாக இருக்கும். அவப்பெயர் நீங்கும். மூத்தவர்களின் உடல் நலனில் அக்கறை செலுத்துங்கள். புதிய வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். ஆன்மீக சுற்றுலா பயணங்கள் அதிகரிக்கும்.

தொழிலில் இடமாற்றம்: பத்தாம் இடம் என்பது தொழில், மாமியார் வீடு, உத்தியோகம் வேலை வாய்ப்பு ஆகிய ஸ்தானங்களுக்கு கேது வருகிறார். தொழிலில் இடமாற்றம் ஏற்படும். பெண்களுக்கு உத்யோகத்தில் உயர்வு கிடைக்கும். தொழிலில் இடமாற்றம் உத்யோக உயர்வை கொடுக்கும். வெளிநாட்டு தொடர்புடைய தொழில்கள்,வருமானம் அனுகூலம் ஆதாயத்தை தரும். பூர்வீக இடத்தை விட்டு விட்டு சிலருக்கு தொழில் ரீதியாக இடமாற்றம் வரலாம். தனம் பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். இந்த ராகு கேது பெயர்ச்சி உங்களுக்கு எதிர்பாராத திருப்பத்தை தரும்

மகரம்: சனி பகவானை ராசி அதிபதியாகக்கொண்ட மகர ராசிக்காரர்களே..ராகு பதினொன்று,முன்று,ஆறாம் இடத்திற்கு சேரின் பாகு தேன் பழமும் பாலும் வற்றாத தனமும் உண்டாகும். காரியங்களுண்டாம்,அன்னதானங்களுண்டாம்.வாகு மதி மணமுண்டாம்,வரத்து மேல் வரத்துண்டாம்" என்ற ஜோதிட பாடல் படி அக்டோபர் மாதம் முதல் ராகு மகர ராசிக்காரர்களுக்கு யோகத்தை வழங்க போகிறார். தைரியத்துடன் புது தெம்புடன் செழிப்பான வாழ்க்கை அமையும். வீடு கட்டும் யோகம் அமையும் வண்டி வாகனம் வாங்குவீர்கள்.

வளமான வளர்ச்சி: புது முயற்சிகள் யாவும் வெற்றி பெறும். உங்களை இது நாள் வரைக்கும் ஏளனம் செய்தவர்கள் எல்லாம் உங்களுடைய முன்னேற்றத்தை பார்த்து வியந்து போவார்கள்.செல்வாக்கு உள்ள பிரமுகர்கள் தொடர்பு கிடைக்கும். அதனால் உங்களுடைய நீண்ட கால கனவுகள் லட்சியங்கள் நிறைவேறும். குடும்பத்தில் நீண்ட நாள் இருந்த பிரச்சனைகள் நீங்கும். அம்மாவின் உடல் ஆரோக்கியம் மேம்படும். உங்களின் உடலிலும் உற்சாகம் கூடும். சிலருக்கு வீடு வாகனம் வாங்கும் யோகம் கிடைக்கும். கணவன் மனைவியிடையே ஒற்றுமை அதிகரிக்கும்.

கல்வியில் சிறப்பு: குழந்தைகள் வழியில் மகிழ்ச்சியான செய்தி தேடி வரும். மாணவர்களுக்கு இது அருமையான கால கட்டம். தேர்வில் நல்ல மதிப்பெண்களை பெறுவீர்கள். வெளியூர், வெளிநாட்டு தொடர்புடையவைகளால் லாபங்கள் கிடைக்கும். முன்கோபத்தைக் குறைப்பது, பிறர் விஷயங்களில் தலையீடு செய்யாதிருப்பது நல்லது. மாணவர்களுக்கு எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கப் பெற்று மகிழ்ச்சி ஏற்படும். கல்விக்காக பயணங்களை மேற்கொள்வீர்கள்.

உதவிகள் வீடு தேடி வரும்: மனிதர்களுக்கு மோட்சத்தை கொடுக்க கூடிய கேது பத்தாம் வீட்டில் இருந்து ஒன்பதாம் வீட்டிற்கு வருவதால் உங்களுடைய பிரச்சனைகளுக்காக கோயில் பூஜை பரிகாரம் செய்தும் நடக்காத காரியங்கள் எல்லாம் தடையில்லாமல் நடக்கும். கும்பிட போன தெய்வம் குறுக்கே வந்த மாதிரி யாரை எல்லாம் தேடி தேடி உதவி கேட்டீர்களோ அவர்கள் எல்லாம் தானாக நாடி வந்து உதவி செய்வார்கள். படித்த படிப்புக்கு ஏற்ற வேலை அமையாதவர்களுக்கு நல்ல வேலையும் கை நிறைய வருமானமும் கிடைக்கும்.

குடும்பத்தில் கலகலப்பு: பெண்களுக்கு புத்திர ஸ்தானம் 9ஆம் பாவம், அந்த 9ஆம் இடத்திற்கு கேது வருவதால் புத்திர பாக்கியமும் அதனால் பெற்றோர்களுக்கு புகழ் பெருமை கிடைக்கும். தந்தை வழி சொத்துக்கள் கிடைக்கும். வீட்டில் சுபகாரிய நிகழ்ச்சிகள் நடைபெறும் உற்றார் உறவினர் பகை மறந்து சந்தோசமாக இணையலாம். குடும்பத்தினர் உங்கள் ஆலோசனைக்கு முக்கியத்துவம் தருவார்கள். உடல் ஆரோக்கியம் மேம்படும். அடகில் இருந்த நகைகளை மீட்கும் நேரம் வந்து விட்டது. இந்த ராகு கேது பெயர்ச்சியால் குடும்பத்தில் குழப்பங்கள் நீங்கி கலகலப்பான சூழ்நிலை ஏற்படும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+