ராகு கேது பெயர்ச்சி பலன் 2023: 18 ஆண்டுகளுக்குப் பிறகு வீடு தேடி வரப்போகும் கோடீஸ்வர யோகம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜாதகத்தில் ராகு கேது சாதகமாக இருப்பவர்களுக்குத்தான் லாட்டரியில் பணமும், திடீர் புதையலும் கிடைக்கும். ஒரு பிச்சைக்காரர்கூட திடீர் என கோடீஸ்வரராக மாறுவதும் கூட ராகுவினால்தான். ராகு கேது பெயர்ச்சி இந்த ஆண்டு அக்டோபர் மாதம் நிகழப்போகிறது. அடைமழை காலத்தில் சில ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமழை பொழியப்போகிறது. இந்த பெயர்ச்சியால் துலாம்,விருச்சிகம், தனுசு, மகரம்,கும்பம், மீனம் ராசிகளில் பிறந்தவர்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

ராகு தரும் கோடீஸ்வர யோகம்: ஒருவருக்கு நாக தோஷம், கால சர்ப்ப தோஷம் ஏற்பட காரணமாக ராகுவும் கேதுவும் இருக்கின்றன. தசாபுத்தி சரியில்லாமல் இருந்து ராகு கேதுவும் ஒருவரின் ஜாதகத்தில் சரியில்லாமல் இருந்தால் அவர்களை மனக்குழப்பத்திற்கு ஆளாக்கி அவர் தற்கொலை முடிவு எடுக்கும் அளவிற்கு தள்ளப்படுவார்கள். ராகு கேது சாதகமாக இருந்தால் ஒருவருக்கு செல்வம் செல்வாக்கு எப்படி தேடி வருமோ அந்த அளவிற்கு ராகு கேது கிரகங்கள் சரியாக அமையாவிட்டால் செல்வம், செல்வாக்கு இழந்து அவமரியாதை ஏற்படும். கேது திடீர் ஞானத்தை கொடுத்து மோட்சத்திற்கு வழிகாட்டுவார்.

Rahu ketu peyarchi palan 2023: Rahu Ketu gives sudden luck and jackpot

துலாம்: சுக்கிரனை ராசி அதிபதியாகக் கொண்ட துலாம் ராசிக்காரர்களே, உங்க ராசியில் கேது 7 ஆம் பாவத்தில் ராகு பயணம் செய்யும் நிலையில் ஐப்பசி மாதத்திற்குப் பிறகு விரைய ஸ்தானமான 12 ஆம் பாவத்தில் கேது 6ஆம் பாவத்தில் ராகு வருகிறது. கெட்டானை தொட்டானும் கெட்டான் என்பதை போல யாருக்கோ போக வேண்டிய பிரச்சனைகள் உங்களை வாட்டி வதைத்தது. இனி பிரச்சினைகள் தீரப்போகிறது. எதிரி போட்டி பொறாமை கடன், மருத்துவ செலவு,ஆகிய ஸ்தானத்தில் ராகு வருவதால் கடன்கள் அடைப்படும் தீராத நோய் தீரும். தொழில் முயற்சிகள் கை கூடும்.படித்து முடித்து வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை அமையும். திருமணம் கை கூடி வரும் சந்தான யோகம் தேடி வரும். நீண்ட நாள் பட்ட கடன்களும் அடைபடும்.

விருச்சிகம்: ராகு ருண ரோக சத்ரு ஸ்தானத்தில் பயணம் செய்கிறார். ஐப்பசி மாதத்திற்குப் பிறகு பூர்வ புண்ணிய ஸ்தானமான 5ஆம் இடத்திற்கும் 12ஆம் வீட்டில் பயணம் செய்யும் கேது 11ம் வீட்டிற்கும் பயணம் உங்களின் தூக்கம் கெட்டது, நிம்மதி பறிபோனது. ராகுவும் கேதுவும் நோய் நொடிகளுக்கு வைத்திய செலவுகளை செய்ய வைத்து கடன் சுமையை எற்படுத்தினார்கள். போதுமான வருமானம் வந்தாலும் நிம்மதி இழந்து வாழ்ந்த உங்களுக்கு ராகு கேது பெயர்ச்சி இனி நிம்மதியை தரும். கேது லாப ஸ்தானத்தில் வருவதால் தொட்டது துலங்கும். தேவையற்ற செலவுகள் குறையும் தடைபட்ட காரியத்தை செவ்வனே செய்து முடிப்பீர்கள். கடன் சுமை குறையும். இந்த ராகு கேது பெயர்ச்சி நிலையான தொழில் யோகத்தையும் வலிமையான சம்பாதித்யத்தையும் கொடுக்கும். அசையா சொத்துகள் வீடு மனை வாங்கும் யோகத்தை கொடுக்கும். 18 வருஷத்துக்கு பிறகு 5ம் இடத்திற்கு ராகு வருவதால் முன்னோர் வகையில் உள்ள தோஷம் நீங்கி சுகம் பெறலாம்.

தனுசு: குரு பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட தனுசு ராசிக்காரர்களே, ராகு சுக ஸ்தானமான நான்காம் இடத்திற்கும்,கேது 10ஆம் இடத்திற்கும் மாறப்போகின்றனர். இதுவரை திணறடித்த பிரச்சனைகள் கொஞ்சம் கொஞ்சமாக குறையும். நான்காம் பாவம் தாயார்,சுகம்,வாகனம் கல்வி,நிலபுலன்கள் ஆகியவற்றை குறிக்கும் இந்த 4ஆம் பாவத்திற்கு ராகு வருகிறார். இது வரை தடைப்பட்ட காரியங்களை வெற்றிகரமாக முடிப்பதற்கு உதவுவார்கள். தாயார் வழியில் சில தேவைற்ற செலவுகள் உண்டாகலாம்.பூமி வீடு வாகனம் வாங்கும் யோகத்தை கொடுப்பார். பழைய கடன்கள் அடைப்படும்.புதிய கடன் வாங்கி சுபகாரியம்,திருமணம்,பிள்ளைகள் படிப்புக்கு செலவு செய்ய நேரிடும். வரவுகள் அதிகரிக்கும் சேமிப்பும் உயரும். வேலை தொழிலில் முன்னேற்றம் உண்டாகும்.

மகரம்: சனி பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மகர ராசிக்காரர்களே, உங்கள் ராசிக்கு 4ஆம் வீட்டில் பயணம் செய்யும் ராகு 3ஆம் இடத்திலும் 10 இடத்தில் பயணம் செய்யும் கேது 9ம் இடத்திற்கும் வரப்போகிறார்கள். 3ஆம் இடம் என்பது இளைய சகோதரம், தைரியம், வீரம் ஆகியவற்றை குறிப்பிடும் ஸ்தானங்களில் ராகு வருகிறார். ராகு இப்பொழுது யோகத்தை வாரி வழங்க போகிறார். இனி தைரியத்துடன் புது தெம்புடன் செழிப்பான வாழ்க்கை அமையும். புது முயற்சிகள் யாவும் வெற்றி பெறும்.தேவைகள் பூர்த்தியாகும்.இது வரை ஏளனம் செய்தவர்கள் எல்லாம் உங்களுடைய முன்னேற்றத்தை பார்த்து வியந்து போவார்கள். திருமண நிகழ்ச்சிகள் சுபமாக முடியும். உங்களுடைய நீண்ட கால கனவுகள் லட்சியங்கள் நிறைவேறும். குடும்பத்தில் நீண்ட நாட்களாக இருந்த பிரச்சனைகள் தீரும். கும்பிட போன தெய்வம் குறுக்கே வந்த மாதிரி யாரை எல்லாம் தேடி தேடி உதவி கேட்டீர்களோ அவர்கள் எல்லாம் தானாக நாடி வந்து உதவி செய்வார்கள். உறவினர்கள் பகை மறந்து வீடு தேடி வருவார்கள்.

கும்பம்: தைரிய ஸ்தானத்தில் உள்ள ராகு 18 மாதங்கள் உங்க ராசிக்கு குடும்ப ஸ்தானத்திற்கும் கேது உங்க ராசிக்கு ஆயுள் ஸ்தானத்திற்கும் வருவது சிறப்பு. திடீர் பணவருமானம் வரும் திடீர் அதிர்ஷ்டங்கள் தேடி வரும். அதே நேரத்தில் சேமிக்க முடியவில்லையே என்ற வருத்தம் ஏற்படும் அளவிற்கு செலவுகளும் வரும். வேலை செய்யும் இடத்தில் தேவையில்லாத பேச்சுக்களை தவிர்த்து விடுங்கள். வீட்டிலோ வெளியிலோ உங்க கோபம், உணர்வுகளை கட்டுப்படுத்துங்கள். உங்க வீட்ல கூட பேசும் போது காரசார விவாதங்களை தவிர்த்திடுங்க. ராகு காலத்தில் ராகு கேதுவிற்கு அர்ச்சனை பண்ணுங்க நல்லதே நடக்கும்.

மீனம்: 18 ஆண்டுகளுக்கு பிறகு மீன ராசிக்கு ஜென்ம ராகு வந்து அமர்கிறார். ஜென்ம ராகு, ஏழாம் வீட்டில் கேது இனி 18 மாதங்கள் அதாவது ஏப்ரல் 2025 ஆம் ஆண்டுவரை உங்க ராசியில் சஞ்சரிப்பார்கள். திடீர் பணவருமானம் வரும் செல்வம் செல்வாக்கு அதிகரிக்கும். மனைவி பெயரில் புதிய தொழில் தொடங்கலாம். திருமணம் நடைபெறுவதில் இருந்த தடைகள் நீங்கும். வேலையில் திடீர் இடமாற்றம் வரலாம். திடீர் செலவுகள் வரும். சிலருக்கு கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை வரும். மாணவர்களுக்கு உயர்கல்வி யோகம் தேடி வரும். எந்த வேலையிலும் கவனமாகவும் விழிப்புணர்வோடும் இருங்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+