ராகு கேது பெயர்ச்சி பலன் 2023: 18 ஆண்டுகளுக்குப் பின் இந்த 4 ராசிக்காரர்களுக்கு எதிர்பாராத மாற்றம்

Subscribe to Oneindia Tamil

மதுரை: ராகு கேது பெயர்ச்சி திருக்கணிதப்பஞ்சாங்கப்படி அக்டோபர் 30ஆம் தேதியன்று நிகழப்போகிறது. நிழல் கிரகங்களான ராகுவும் கேதுவும் பின்னோக்கி நகரக்கூடியவை. மேஷ ராசியில் இருக்கும் ராகு பகவான் மீன ராசிக்கும், துலாம் ராசியில் இருக்கும் கேது பகவான் கன்னி ராசிக்கும் பெயர்ச்சி ஆகிறார்கள். ராகுவும் கேதுவும் வரும் 2025 ஆம் ஆண்டு மே மாதம் வரை இந்த ராசிகளில் சஞ்சரிப்பார்கள். இதனால் யாருக்கெல்லாம் திடீர் ஜாக்பாட் அடிக்கும் கோடீஸ்வர யோகம் தேடி வரும் என்று பார்க்கலாம்.

மேஷம்: இது நாள் வரை ஜென்ம ராசியில் இருந்து பல இன்னல்களை கொடுத்து வந்த ராகு பகவான் இனி உங்கள் ராசிக்கு 12 ம் வீட்டிற்கு வருவதால் எல்லா கஷ்டங்களும் விலகும். தன ஸ்தானத்தை குரு பகவான் பார்க்க போவதால் தடை பட்டு வந்த பண வரவு சீராகும். கொடுத்த கடன்கள் வசூலாகும். பிரிந்திருந்த கணவன் மனைவி ஓன்று சேருவர். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். புது வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். சிலர் வீடு கட்டும் முயற்சிகளில் இறங்குவர். சிலருக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். வீட்டில் சந்தோஷமும் மன மகிழ்ச்சியும் நிலவும். கேது பகவான் உங்கள் ராசிக்கு 6 ம் வீட்டிற்கு பெயர்ச்சி ஆவதால் தொழிலில் இருந்து வந்த முடக்க நிலை மாறி அசுர வளர்ச்சி அடையும். சிலருக்கு வெளி நாடு செல்லும் யோகம் கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்கு இது நாள் வரை தடைபட்டு வந்த பதவி உயர்வுகள் இனிதே கிடைக்கும். எதிரிகள் பலம் இழந்து உங்கள் கால்களில் தஞ்சம் அடைவர். கொடுக்க வேண்டிய கடன்களை பைசல் செய்வீர்கள். வெளிநாட்டு தொடர்புகளால் உங்கள் தொழிலை விரிவாக்கம் செய்து அதில் லாபத்தையும் அடைவீர்கள். கணவன் மனைவி உடல் நிலையில் சற்று கவனம் செலுத்தவும்.

Rahu Ketu Peyarchi palan 2023 : Rahu ketu peyarchi palangal parikarangal 20-07-2023

ரிஷபம்: உங்களுடைய ராசிக்கு 12ஆம் வீட்டில் இருந்து அமைதியை குலைத்து பல விதமான நெருக்கடிகளை கொடுத்து கொண்டிருந்த ராகு பகவான் அக்டோபர் மாதம் முதல் உங்கள் ராசிக்கு 11 ஆம் வீட்டிற்கு வருகிறார். பண வருமானத்தை அதிகரிப்பார். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உருவாகும். கணவன் மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளால் வீட்டில் மகிழ்ச்சி கூடும். திடீர் ஜாக்பாட் மூலம் பண வருமானம் வரும். கேது பகவான் அக்டோபர் மாதம் முதல் உங்கள் ராசிக்கு 5 ஆம் வீட்டிற்கு வந்து அமர்கிறார். இதனால் பூர்வ புண்ணிய ஸ்தானம் பலம் பெற்று தெய்வீக நாட்டம் அதிகரிக்கும். ஆன்மீக செயல்களில் ஈடுபட்டு பெரும் புகழ் அடைவீர்கள். சிலருக்கு விபரீத ராஜ யோக அமைப்பு உண்டாகும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். புதிய தொழில் தொடங்க வழி கிடைக்கும்.

மிதுனம்: உங்களுடைய ராசிக்கு 11 ஆம் வீட்டில் அமர்ந்துள்ள ராகு ராசிக்கு 10 ம் வீட்டிற்கு வரப்போகிறார். இதனால் புதிதாக தொழில் செய்ய காத்திருப்பவர்களுக்கு நல்ல நேரம் பிறக்கப்போகிறது. வேலை தேடுபவர்களுக்கு அவரவர் தகுதிக்கேற்ற நல்ல வேலை கிடைக்கும். பண வரவை அதிகரிப்பார். கணவன் மனைவிக்கு இடையே இருந்த பிரச்சினைகள் நீங்கும். உங்கள் ராசிக்கு 5ஆம் வீட்டில் பயணம் செய்யும் கேது பகவான் உங்கள் ராசிக்கு 4ஆம் வீட்டில் பயணம் செய்யப்போகிறார். இதனால் உங்கள் வாழ்க்கை தரமே மாற போகிறது. வேலை செய்யும் இடத்திலும் சமூகத்திலும் உங்களின் அந்தஸ்து உயரும். பிள்ளைகளால் வீட்டில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் வீட்டில் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கும். சிலருக்கு வேலையில் இடமாற்றம் உண்டாகும்.

கடகம்: உங்கள் ராசிக்கு 10ஆம் வீட்டில் அமர்ந்து பயணம் செய்யும் ராகு பகவான் அக்டோபர் முதல் உங்கள் ராசிக்கு 9 ஆம் வீடான பாக்ய ஸ்தானத்திற்கு வரப்போகிறார். இதனால் சிலருக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். பண தட்டுப்பாடுகள் விலகி பல வழிகளில் இருந்தும் பண மழை கொட்டும். கணவன் மனைவி உறவுக்குள் மகிழ்ச்சி அதிகரிக்கும். குழப்பமான மனநிலை மாறி தெளிவான சிந்தனை உதயமாகும். வேலை செய்யும் இடத்தில் சிறப்பாக செயல்படுவீர்கள். உறவினர்கள் மத்தியில் பெரும் மதிப்பு அதிகரிக்கும். 9 ஆம் பார்வையாக ராசியை பார்க்க போகும் குரு பகவான் பெரும் அதிர்ஷ்டத்தை அளிக்க போகிறார். பெண்களுக்கு ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். உங்களுடைய ராசிக்கு 4ஆம் வீட்டில் பயணம் செய்யும் கேது பகவான் அக்டோபர் மாதம் முதல் 3 ஆம் வீட்டில் வந்து அமர போகிறார். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். இழந்த செல்வங்களை திரும்ப பெறுவீர்கள். படிப்பில் இருந்த மந்த நிலை மாறும். சுறுசுறுப்புடன் செயலாற்றி பல வெற்றிகளை பெறுவார்கள். பிள்ளைகளால் வீட்டில் சந்தோஷம் அதிகரிக்கும். பூர்வீக சொத்துக்கள் உங்களை தேடி வரும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். ஒரு சிலருக்கு வேலையில் பதவி உயர்வு ஏற்படும். மொத்தத்தில் மிக சிறப்பான பலன்களை அனுபவிப்பார்கள்.

சிம்மம்: உங்களுடைய ராசிக்கு 9 ஆம் வீட்டில் அமர்ந்து பயணம் செய்யும் ராகு பகவான் அக்டோபர் மாதம் முதல் 8ஆம் வீட்டில் பயணம் செய்யப்போகிறார். இது மறைவு ஸ்தானம். இது வரை இருந்த மந்த நிலை மாறி புது உத்வேக சூழல் உருவாகும். இனி எடுத்த காரியங்களில் வெற்றிகள் தேடி வரும். பூர்வீக சொத்தில் இருந்த வில்லங்கம் விலகும். வேலையில் நல்ல மாற்றம் ஏற்படும். உயரதிகாரியின் ஆதரவினால் பதவி உயர்வும், பணவரவு ஏற்படும். நோய்கள் நீங்கும். உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படும். வேலை சம்பந்தமாக திடீர் பயணங்கள் உண்டாகும். வீட்டில் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். உங்களுடைய ராசிக்கு 3 ஆம் வீட்டில் அமர்ந்து பயணம் செய்யும் கேது பகவான் அக்டோபர் மாதம் முதல் உங்களுடைய ராசிக்கு 2 ஆம் வீட்டிற்கு வப்போகிறார். வீண் வாக்குவதங்களை தவிர்க்கவும். உறவினர்கள் நண்பர்களுக்கு பண விசயங்களில் தேவையற்ற வாக்குறுதிகள் கொடுப்பதை தவிர்க்கவும். அளவுடன் பேசி காரியத்தை சாதிப்பீர்கள். அளவிற்கு மீறி பேசும் போது பெரும் சிக்கலில் மாட்டும் நிலை உருவாகும்.

கன்னி: உங்கள் ராசிக்கு 8 ம் வீட்டில் அமர்ந்து குரு உடன் இணைந்து பயணம் செய்யும் ராகு பகவான் அக்டோபர் முதல் 7 ம் வீட்டிற்கு வரப்போகிறார். உடலில் சுறுசுறுப்பும் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். கணவன் மனைவிக்குள் இருந்து வந்த சண்டை சச்சரவுகள் நீங்கி மகிழ்ச்சியான மனநிலை உண்டாகும். ஓருவருகொருவர் விட்டு கொடுத்து சென்றால் தேவையற்ற குழப்பங்களை தவிர்க்கலாம். பண விஷயத்தில் சிக்கன போக்கு தேவை. உத்தியோகத்தில் சக பணியாளர்களுடன் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். உங்களுடைய ராசிக்கு 2 ஆம் இடத்தில் இருந்து வீண் வாக்குவாதங்களை ஏற்படுத்தி கொண்டிருக்கும் கேது பகவான் அக்டோபர் மாதம் முதல் உங்கள் ஜென்ம ராசியிலேயே வந்து அமர போகிறார். இதனால் உங்கள் பேச்சில் ஒரு ஒரு கனிவு தென்படும். ஐப்பசி மாதம் முதல் ஆன்மீக சுற்றுலா செல்வீர்கள். அற்புதமான கால கட்டமாக அமையப்போகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+