ராகு கேது பெயர்ச்சி பலன் 2023: கோடி கோடியாக கொட்டித்தரப்போகும் ராகு..3 ராசிக்காரர்களுக்கு ஜாக்பாட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நவ கிரகங்களில் ராகுவும் கேது நிழல் கிரகங்கள். சூரியன், செவ்வாய், புதன், குரு, சனி, சந்திரன், சுக்கிரன் ஆகிய ஏழு கிரகங்களும் முன்னோக்கி நகரும் போது ராகுவும் கேதுவும் பின்னோக்கி நகரும். ராகு இப்போது மேஷ ராசியில் குரு உடன் பயணம் செய்கிறார். கேது இப்போது துலாம் ராசியில் பயணம் செய்கிறார். அக்டோபர் இறுதியில் ராகு கேது பெயர்ச்சி நடைபெற உள்ளது. ராகு மீனம் ராசிக்கும் கேது கன்னி ராசிகும் இடப்பெயர்ச்சி அடைய உள்ளனர். இந்த ராகு கேது பெயர்ச்சியால் மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளில் பிறந்தவர்களுக்கு என்ன பலன் கிடைக்கும் யாருக்கு என்ன பாதிப்பு ஏற்படும் என்று பார்க்கலாம்.

ராகு கேது பெயர்ச்சி: ராகு கேது சாதகமாக இருந்தால் ஒருவருக்கு செல்வம் செல்வாக்கு தேடி வரும் ராகு கேது சாதகமாக இருப்பவர்களுக்குத்தான் லாட்டரியில் பணமும், திடீர் புதையலும் கிடைக்கும். ராகு செல்வம் செல்வாக்கை அள்ளிக்கொடுப்பார். கேது திடீர் ஞானத்தை கொடுத்து மோட்சத்திற்கு வழிகாட்டுவார். அக்டோபர் மாதத்திற்குப் பிறகு மீன ராசியில் அமரும் ராகு குரு பகவானைப் போலவும் கன்னி ராசியில் அமரும் கேது புதன் பகவானைப் போலவும் செயல்படுவார்கள்.

Rahu Ketu Peyarchi palan 2023 : Rahu ketu peyarchi palangal parikarangal for 6 zodiac signs

மேஷம்: ஜென்ம ராசியில் பயணம் செய்யும் ராகு அக்டோபருக்குப் பிறகு உங்கள் ராசிக்கு 12 ம் வீட்டிற்கு செல்வதால் எல்லா கஷ்டங்களும் விலகும். பண வரவு சீராகும். கொடுத்த கடன்கள் வசூலாகும். பிரிந்திருந்த கணவன் மனைவி ஒன்று சேருவார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். புது வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். சிலர் வீடு கட்டும் முயற்சிகளில் இறங்குவர். கேது பகவான் 6 ம் வீட்டிற்கு இடப்பெயர்ச்சி ஆவதால் கொடுக்கல் வாங்கலில் இருந்து வந்த பிரச்சனைகள் தீர்ந்து லாபத்தை அடைவீர்கள். சிலருக்கு வெளி நாடு செல்லும் யோகம் கிட்டும். உத்தியோகஸ்தர்களுக்கு இது நாள் வரை தடைபட்டு வந்த பதவி உயர்வுகள் இனிதே கிடைக்கும். உங்கள் தொழிலை விரிவாக்கம் செய்து அதில் லாபத்தையும் அடைவீர்கள்.

ரிஷபம்: ராகு பகவான் உங்கள் ராசிக்கு 11 ஆம் வீட்டிற்கு வருகிறார். ராகுபகவான் பண வரவை அதிகரிப்பார். மனதில் தைரியத்தையும், தன்னம்பிக்கையையும் அளித்து புது புது முயற்சிகளில் இறங்க வைத்து அதில் வெற்றியையும் பண வரவையும் அளிப்பார். இதனால் குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் உருவாகும். கணவன் மனைவிக்குள் பிரியம் அதிகரிக்கும். பண வரவையும் கொடுப்பதுடன் வீண் செலவுகளையும் குறைப்பார். திடீர் அதிர்ஷ்டம் ஏற்படும். கேது பகவான் உங்கள் ராசிக்கு 5ஆம் வீட்டுக்கு வந்து அமர்கிறார். அக்டோபர் மாதத்திற்குப் பிறகு உங்களுக்கு வசந்த காலமென்றே சொல்ல வேண்டும். பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும்.

மிதுனம்: பத்தாம் வீட்டில் ராகு பயணம் செய்யப்போவதால் புதிதாக தொழில் செய்ய காத்திருப்பவர்களுக்கு ஏதுவான சூழல் உண்டாகும். வேலை தேடுபவர்களுக்கு அவரவர் தகுதிக்கேற்ற வேலை கிடைக்கும். வேலையில் புரமோசனும் சம்பள உயர்வும் கிடைக்கும். ராகு பகவான் பண வரவை அதிகரிப்பார். நான்காம் வீட்டிற்கு வரப்போகும் கேது பகவானால் உங்கள் வாழ்க்கை தரமே மாற போகிறது. உங்கள் பேச்சில் ஒரு முதிர்ச்சி தன்மை தென்படும். சிலருக்கு வேலை பளு அதிகரிக்கும். சமூகத்தில் உங்களின் அந்தஸ்து உயரும். பிள்ளைகளால் வீட்டில் மகிழ்ச்சி அதிகரிக்கும். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் வீட்டில் மகிழ்ச்சியை இரட்டிப்பாக்கும். சிலருக்கு உத்தியோகத்தில் இடமாற்றம் உண்டாகும்.

கடகம்: ராகு பகவான் பாக்ய ஸ்தானத்தில் பயணம் செய்யப்போவதால் பண தட்டுப்பாடுகள் விலகி பல வழிகளில் இருந்தும் பண மழை கொட்டும். கணவன் மனைவி உறவுக்குள் மகிழ்ச்சி அதிகரிக்கும். உறவினர்கள் மத்தியில் பெரும் மதிப்பு அதிகரிக்கும். ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும். புதிதாக தொழில் செய்ய நினைப்பவர்கள் லாபத்தை அடைவார்கள். பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்ய ஏற்ற காலம். வாழ்க்கை தரம் உயரும். கேது பகவான் 3ஆம் வீட்டிற்கு வரப்போவதால் பூர்வீக சொத்துக்கள் உங்களை தேடி வரும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். ஒரு சிலர் வாகனங்களை புதுப்பிப்பார்கள். ஒரு சிலருக்கு வேலையில் பதவி உயர்வு ஏற்படும். மொத்தத்தில் மிக சிறப்பான பலன்களை அனுபவிப்பார்கள்.

சிம்மம்: எட்டாம் வீடான மறைவு ஸ்தானத்திற்கு ராகு வரப்போகிறார். வேலை செய்யும் இடத்தில் புது உத்வேக சூழல் உருவாகும். இனி எடுத்த காரியங்களில் வெற்றிகள் தேடி வரும். பூர்வீக சொத்தில் இருந்த வில்லங்கம் விலகும். பதவி உயர்வும், பணவரவு ஏற்படும். உடல் நிலையில் முன்னேற்றம் ஏற்படும். மருத்துவ செலவு குறையும். வேலை சம்பந்தமாக திடீர் பயணங்கள் செல்வீர்கள். வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். கேது பகவான் உங்கள் ராசிக்கு 2 ஆம் வீட்டில் பயணம் செய்யப்போவதால் வாக்கு கொடுத்து மாட்டிக்கொள்ளாதீர்கள். வீண் வாக்குவதங்களை தவிர்க்கவும். யாராலும் முடிக்க முடியாத வேலையை எளிதில் முடித்து காட்டுவீர்கள். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் ஈட்டும் காலமிது.

கன்னி: ராகு பகவான் உங்கள் ராசிக்கு 7ஆம் வீட்டில் வந்து அமர போகிறார். கணவன் மனைவிக்குள் இருந்து வந்த மன கசப்புகள் விலகி மகிழ்ச்சியான நிலை ஏற்படும். ஒருவருகொருவர் விட்டு கொடுத்து சென்றால் தேவையற்ற குழப்பங்களை தவிர்க்கலாம். பண விஷயத்தில் சிக்கன போக்கு தேவை. உத்தியோகத்தில் சக பணியாளர்களுடன் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். கேது பகவான் இனி உங்கள் ஜென்ம ராசியிலேயே வந்து அமர போகிறார். ஆன்மீக சுற்றுலா செல்ல நேரிடும். புண்ணிய காரியங்களில் உங்களை ஈடுபடுத்தி கொள்வீர்கள். கணவன் மனைவிக்குள் வீண் வாக்குவாதங்களை தவிர்க்கவும். விட்டு கொடுத்து போனால் பல பிரச்சனைகளை தவிர்க்கலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+