ராகு கேது பெயர்ச்சி பலன் 2023: பாம்பு கிரகங்களின் அதிரடி நகர்வு..யாருக்கெல்லாம் கோடீஸ்வர யோகம்?
சென்னை: ராகு கேது பெயர்ச்சி அக்டோபர் மாத இறுதியில் நிகழப்போகிறது. நவ கிரகங்களில் ராகுவும் கேதுவும் நிழல் கிரகங்கள் என்றாலும் மனிதர்களின் நல்லது கெட்டதுகளில் முக்கிய பங்கு வகிக்கின்றன. பாம்பு கிரகங்களான ராகு பணத்தையும் அதிர்ஷ்டத்தையும் அள்ளிக்கொடுப்பார். கேது ஞானத்தை கொடுப்பார். ராகு கேது சாதகமாக இருப்பவர்களுக்குத்தான் லாட்டரியில் பணமும், திடீர் புதையலும் கிடைக்கும். ராகு கேது பெயர்ச்சியால் அக்டோபர் மாதத்திற்குப் பிறகு மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம், சிம்மம், கன்னி வரையிலான ஆறு ராசிகளில் பிறந்தவர்களில் எந்த ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

மேஷம்: உங்க ராசியில் அமர்ந்து உங்களை ஆட்டிப்படைத்து வரும் ராகு அக்டோபர் முதல் விரைய ஸ்தானத்திற்கு மாறுவது சிறப்பு. கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜ யோகம் என்பதன் அடிப்படையில் இப்பொழுது கெட்ட இடத்திற்கு மறைவு ஸ்தானத்திற்கு ராகு வருவது நல்லது தான். சுபகாரியங்கள் திருமணம் சடங்கு கிரக பிரவேசம் போன்ற சுபகாரியங்கள் நடக்கும். சிலருக்கு வெளிநாட்டு பயணம்,தொழில் அமையும் வாய்ப்பை அமைத்துக்கொடுப்பார். சிலர் வீடு மாற்றம் ஊர் மாற்றம் செய்ய நேரிடும். கேது பெயர்ச்சியால் இதுநாள் வரை தொந்தரவு செய்த நோய்பிரச்சினை நீங்கும். போட்டி பொறாமை ஒழியும். சிலருக்கு புது வேலை வாய்ப்பு மற்றும் தொழில் அமையும்.
ரிஷபம்: உங்க ராசிக்கு சாதகமான இடத்திற்கு ராகு கேது வந்திருக்கிறார்கள். விரைய ஸ்தானத்தில் இருந்த ராகு லாப ஸ்தானத்திற்கு மாறுவதால் எதிர்பாராத யோகத்தையும் திடீர் பண வரவையும் கொடுப்பார். எடுத்த காரியத்தை முடிக்கும் வரை ஓயமாட்டீர்கள். அடுத்தவர்களின் சூழ்ச்சியால் உங்களுக்கு வந்த பிரச்சனைகள் இனி தானாகவே மறைந்து விடும். மோட்ச காரகன் கேது பூர்வ பூண்ணிய ஸ்தமான 5ஆம் வீட்டிற்கு வருவது யோகம் தான். பலவித சோதனைகளை தாண்டி மாற்றங்களை கொடுக்கும். கடன் சுமை குறையும். காரிய வெற்றி உண்டாகும். புதிய முயற்சிகள் கை கூடி வரும். சுப காரியங்கள் சந்தோஷமாக நடக்கும். இது வரை உங்களை தரக்குறைவாக நடத்தியவர்கள் எல்லாம் இனி உங்களை கண்டு மதிப்பு மரியாதை கொடுப்பார்கள்.
மிதுனம்: லாப ஸ்தானத்தில் பயணம் செய்யும் ராகு பகவான் தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார். நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும் காரிய வெற்றியை கொடுக்கும். நினைத்த மாதிரி நல்ல வேலை வாய்ப்பு அமையலாம் சம்பள உயர்வும் வசதி வாய்ப்புகளும் தேடி வரும். சொந்த வீடு வாங்கும் யோகம் வரும். தொழிலாளியாக இருந்த நீங்கள் முதலாளி ஆகும் யோகம் கை கூடி வரப்போகிறது. சுப காரியங்கள் நல்லமுறையில் கைகூடி வரும். கணவன் மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். கடன் பட்டு கலங்கி போனவர்களுக்கு இனி சிறிது சிறிதாக கடன் சுமை குறையும். இந்த ராகு கேது பெயர்ச்சி மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் தரும்.
கடகம்: ராகு பகவான் பாக்ய ஸ்தானத்திற்கு வரப்போவதால் நிர்வாக பொறுப்புகள் தேடி வரும். நினைத்த காரியம் கைகூடி வரும். வருமானம் திருப்தி தரும். செய்யும் தொழிலில் பார்க்கும் வேலைகளில் இடையூறு நீங்கும்.மறைமுக எதிர்ப்புகள் விலகும். கேது மாறி வரும் இடம் முன்றாம் பாவம் சகோதரம்,வீரியம்,வீரம்,எழுத்தறிவு,விளையாட்டு ஆகியவற்றை தெரிந்து கொள்ளலாம். ராகுவிற்கு குரு பார்வை கிடைப்பதால் குடும்பத்தில் சுபகாரியம் நடைபெறும். பிள்ளைகளுக்கு திருமணம் கைகூடி வரும், புத்திர பாக்கியத்திற்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி தேடி வரும். கடந்த காலங்களில் பல பிரச்சினைகளை சந்தித்த உங்களுக்கு இந்த ராகு கேது பெயர்ச்சியால் விமோசனம் கிடைக்கும்.

சிம்மம்: உங்கள் ராசிக்கு பாக்ய ஸ்தானத்தில் பயணம் செய்யும் ராகு அக்டோபர் முதல் 8ஆம் வீட்டிற்கும் 3ஆம் வீட்டில் பயணம் செய்யும் கேது அக்டோபர் முதல் 2ஆம் இடத்திற்கும் வரப்போகிறார்கள். ராகு பெயர்ச்சி யோகத்தையும் பெரும் புகழையும் கொடுக்கப்போகிறது. எதிர்ப்பாராத பணம் பொன் பொருள் சேர்க்கை வீடு வாசல் போன்ற வசதிகளை தருவார். இது வரை கலங்கிய களங்கப்பட்ட வாழ்க்கை ஒளி மயமான வாழ்க்கைக்கு வழிகாட்டும். திருமணம் சுபகாரியம் நடக்கும். சிலருக்கு இடமாற்றம்,ஊர்மாற்றம் ஏற்படலாம். இதுநாள் வரை வெளியூரில் இருந்தவர்கள் இனி உள்ளுரில் செட்டில் ஆகலாம். கேது பகவான் குடும்ப வாக்கு ஸ்தானத்திற்கு வரப்போவதால் உங்களின் சொல்லும் செயலும் வெற்றி பெறும். அதே நேரத்தில் வாக்கு கொடுத்து மாட்டிக்கொள்ளாதீர்கள். உங்க முயற்சி தன்னம்பிக்கை மூலம் தான் வாழ்க்கையில் முன்னேற்றம் வரும். இந்த ராகு கேது பெயர்ச்சி மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் தரும்.
கன்னி: இரண்டாம் இடத்தில் உள்ள கேது ராசிக்கு வரப்போகிறார். களத்திர ஸ்தானமான 7 ஆம் இடத்திற்கு ராகுவும் பெயர்ச்சியாகப்போகிறார்கள். உங்களால் எல்லோருக்கும் நல்லது நடக்கும். ஆனால் உங்களுக்கு எந்த பயனும் இல்லை என்ற நிலை மாறும். ராசியில் கேது சஞ்சரிப்பதால் கௌரவம் புகழ் கீர்த்தி அந்தஸ்து தரும். வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும் உத்யோகத்தில் முன்னேற்றம் வரும்.வருமானம் திருப்தி தரும்.தேவைகள் பூர்த்தியாகும்.குடும்பத்தில் பிள்ளைகள் படிப்புக்கு செலவு செய்வீர்கள். களத்திரம் கூட்டு தொழில் ஸ்தானம் நண்பர்கள் ஸ்தானத்தில் ராகு அமர்வதால் கஷ்டங்கள் நீங்கி இனி தலை நிமிரலாம். கணவன் மனைவி இடையே இருந்த பிரச்சினைகள் நீங்கி ஒன்று சேரலாம். வாழ்க்கையே போர்க்களம், ஏமாற்றம் சஞ்சலம் என்று வாழ்க்கை வாழ்ந்தவர்களுக்கு ராகு கேது பெயர்ச்சியால் மாற்றம் முன்னேற்றம் வரும்.
-
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
உடைந்தது திமுக கூட்டணி..தனித்துப் போட்டியிடும் விசிக! அதிரடியாக அறிவித்த திருமா! அவரே சொன்ன விளக்கம் -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
சங்கீதாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த விஜய்.. சர்ப்ரைஸ்னா இப்படி இருக்கணும்! ரகசியங்கள் உடையுதே -
மொத்த அதிமுகவும் போய்விடும்.. தேர்தலுக்கு நடுவே தவிக்கும் எடப்பாடி! பின்னணியில் 3 மேஜர் காரணம் -
தமிழ் புத்தாண்டு பலன்: மேஷ ராசிக்கு தேடி வரும் ராஜயோகம்.. மிகப்பெரிய ஜாக்பாட் காத்திருக்கு -
மோடி என்ட்ரி கொடுத்ததும் மாறிய கிளைமேக்ஸ்.. மனம் மாறிட்டாரே டிரம்ப்! இனி ஈரானுக்கு சிக்கல் இல்லை? -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
இரட்டை இலக்க தொகுதி + ஒரு ராஜ்யசபா! பிரஷர் போடும் திருமா.. திமுக பிளான் என்ன தெரியுமா? விசிக ஷாக் -
டெல்டா, வடக்கில் விஜய்க்கு 'முட்டை’ தான்.. மொத்தமாக தவெகவுக்கு எத்தனை சீட் கிடைக்கும்? புதிய கருத்து கணிப்பு












Click it and Unblock the Notifications