Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ராகு கேது பெயர்ச்சி பலன் 2023: திடீர் ஜாக்பாட்.. கோடி கோடியாக பணம் யாருக்கு தேடி வரும்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சர்ப்ப கிரகங்களான ராகு கேது வரும் அக்டோபர் இறுதியில் இடப்பெயர்ச்சி அடைகின்றன. மேஷ ராசியில் உள்ள ராகு மீனம் ராசிக்கும் துலாம் ராசியில் உள்ள கேது கன்னி ராசிக்கும் இடப்பெயர்ச்சி அடைகின்றன. இந்த கிரகங்களின் இடப் பெயர்ச்சியால் ரிஷப ராசியின் ராசிநாதன் சுக்கிரன் உச்சம் பெறும் வீட்டில் ராகு சென்று அமர்வதால் திடீர் ஜாக்பாட் அடிக்கும். எதிர்பாராத பணம் பல வழிகளில் இருந்து மலையாக குவியப்போகிறது

ராகுவும் கேதுவும் ஒவ்வொரு ராசியிலும் ஒன்றறை ஆண்டுகள் அதாவது 18 மாதங்கள் தங்கி சுப அசுப பலன்களைத் தருவார்கள். ராகுவைப் போல கொடுப்பாரும் இல்லை கேதுவைப் போல கெடுப்பாரும் இல்லை என்பார்கள். யோகாதிபதி ராகுவும், மோட்சகாரகன் கேதுவும் நிழல் கிரகங்கள். ராகுபகவான் அள்ளிக்கொடுப்பார். கேது பகவான் கெடுக்க நினைப்பவர்களை கெடுப்பார். ராகு ஆசைக்கு காரகர், கேது மோட்சத்திற்கு காரகர் இவர்களுக்கு ராசி மண்டலத்தில் சொந்த ஆட்சி வீடு கிடையாது இவர்கள் யாருடைய வீட்டில் இருக்கின்றனரோ யாருடைய சாரத்தில் இருக்கிறார்களோ அதனுடைய பலனை செய்வார்கள். மீன ராசியில் அமரும் ராகு குருவைப்போலவும், கன்னி ராசியில் அமரும் கேது புதன் பகவானைப் போலவும் செயல்படப்போகிறார்.

Rahu Ketu Peyarchi Palan 2023: Rishabam Rasi Rahu ketu Peyarchi Palan and Parikaram

நவக்கிரகங்களில் புதனை விட செவ்வாயும், செவ்வாயை விட சனியும், சனியை விட குருவும், குருவை விட சுக்கிரனும், சுக்கிரனை விட சந்திரனும் சந்திரனை விட சூரியனும் சூரியனை விட ராகுவும் ராகுவை விட கேதுவும்,பலம் பெற்றவர்கள். ஜனன ஜாதகத்தில் ராகு கேது 3, 6, 11 ,ஆகிய இடங்களில் நல்ல பலனை தரக்கூடியவை. ராகு கேதுவுக்கு 3, 7, 11, பார்வைகள் விசேசமானது. ஜாதகத்தில் ராகு- கேது மேஷம், ரிஷபம், கடகம், கன்னி, மகரம், ஆகிய வீடுகளில் இருந்தால் வலுவான யோகம் உண்டு என்று நூல்களில் சொல்லப்பட்டுள்ளது. இந்த ராகு கேது பெயர்ச்சி ரிஷபம் ராசிக்கும் கொடுக்கும் பலன்களையும் அதற்கான பரிகாரங்களையும் பார்க்கலாம்.

ரிஷப ராசிக்காரர்களுக்கு ராகு லாப ஸ்தானத்திற்கு செல்லப்போகிறார். ராகு யோக காரகன். குருவின் வீட்டில் ராகு சென்று அமர்வது ரிஷப ராசிக்காரர்களுக்கு திடீர் யோகம், எதிர்பாராத பண வருமானத்தை அள்ளித்தரப்போகிறார் ராகு பகவான். ரிஷப ராசியில் பிறந்து ராகு யோகம் பெற்ற ஜாதகக்காரராக இருந்தால் உங்களுக்கு இந்த ராகு கேது பெயர்ச்சி அற்புதமான பலன்களைத் தரப்போகிறார். ராஜயோகத்தை தருவார். திடீரென உச்சத்திற்கு செல்வீர்கள். ரிஷப ராசியின் ராசிநாதன் சுக்கிரன் உச்சம் பெறும் வீட்டில் ராகு சென்று அமர்வது திடீர் ஜாக்பாட் அடிக்கும். எதிர்பாராத பணம் பல வழிகளில் இருந்து மலையாக குவியப்போகிறது

ராகு வேலை தொழிலில் போட்டி பொறாமைகளை ஒழிப்பார். அடுத்தவர்களின் சூழ்ச்சியால் நீங்கள் மாட்டிய பிரச்சனைகள் இனி தானாகவே மறைந்து விடும். பாகப் பிரிவினை, சொத்து வழக்குகள் அனைத்தும் உங்களுக்கு சாதகமாக முடியும். எலியும் பூனையுமாக சண்டை போட்டுக்கொண்டிருந்த தம்பதியர் இடையே இனி ஒற்றுமை அதிகரிக்கும். பிள்ளைகள் எல்லோரும் மகிழ்ச்சியான செய்திகளை சொல்வார்கள். தேர்வுகளில் அதிக மதிப்பெண்களுடன் வெற்றி பெற்று உயர்கல்விக்கு செல்வார்கள். உடல்நிலையும் உற்சாகமாக இருக்கும். சுறுசுறுப்பாக இருப்பீர்கள்.

இதுநாள்வரை தடைபட்டு வந்த நல்ல காரியங்கள் இனி மளமளவென முடியும். திருமணமாகாமல் இருந்தவர்களுக்கு தோஷங்கள் நிவர்த்தியாகி திருமணம் கைகூடி வரும். சிலருக்கு பிள்ளைபாக்கியம் வந்து சேரும். குல தெய்வ பிரார்த்தனைக்காக குடும்பத்துடன் கோவிலுக்கு செல்வீர்கள். வெளிநாட்டு பயணம் வெற்றிகரமாக அமையும். சொத்து வழக்குகள் முடிவுக்கு வந்து உங்களுக்கு சாதகமான தீர்ப்புகள் வரும்.

அலுவலகத்தில் இதுநாள்வரை உங்களை அலட்சியப்படுத்தியவர்கள் தேடி வந்து பேசுவார்கள். வேலைக்கு ஏற்ற மதிப்பு கூடும். உயரதிகாரிகள் உங்களை தேடி வந்து பேசுவார்கள். உயர்பதவி தேடி வரும். சம்பள உயர்வும் கூட வரும். கலைத்துறையினருக்கு புதிய பட வாய்ப்புகள் தேடி வரும் வருமானம் கூடும். பெண்களுக்கு நினைத்ததெல்லாம் நிறைவேறும் காலம் வந்து விட்டது பொன்மழை பொழியும் நேரம் இது.

மோட்ச காரகன் கேது இதுநாள்வரை உங்கள் ராசிக்கு ஆறாம் வீடான ருண ரோக சத்ரு ஸ்தானத்தில் அமர்ந்திருந்தார். இனி பூர்வ பூண்ணிய ஸ்தமான 5ல் வருவது யோகம் தான். ரிஷப ராசிக்காரர்களுக்கு சொந்த வீடு வாங்கும் யோகம் வந்து விட்டது. அதற்கேற்ப வருமானமும் அதிகரிக்கும்.
ஆன்மீக பயணம் செல்வீர்கள். மகான்கள் தரிசனம் மனதிற்கு நிம்மதியை தரும். புத்திர பாக்கியம் தெய்வ அருள் புண்ணியம் ஆகியவற்றை குறிப்பிடும் ஸ்தானத்தில் கேது வருவதால் சோதனைகளை தாண்டி மாற்றங்களை கொடுக்கும்.

பிள்ளைகளின் உயர்கல்விக்காக கடன்கள் வாங்க நேரிடும். பிள்ளைகளின் கல்விக்காக அதிக செலவு செய்யும் நீங்கள் அவர்களின் நலனிலும் அக்கறை காட்டுங்கள். தடைப்பட்ட திருமணங்கள் கடகடவென நடைபெறும் சிலருக்கு புத்திரபாக்கியம் கிடைக்கும். செய்யும் தொழிலில் பார்க்கும் வேலையில் திருப்திகரமான போக்கும் மாற்றமும் உருவாகும். கடன் சுமை குறையும். பணத்தால் நண்பர்கள் உற்றார் உறவினர் மூலம் சங்கடங்களை சந்தித்த உங்களுக்கு பகையை மறந்து நட்பு பாராட்டுவார்கள். தாய்வழி உறவினர்களுடன் கோபத்துடன் பேச வேண்டாம். புதிய முயற்சிகள் கை கூடும். மொத்தத்தில் இந்த ராகு கேது பெயர்ச்சி யோகங்கள் நிறைந்த ராகு கேது பெயர்ச்சியாக அமைந்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+