ராகு கேது பெயர்ச்சி 2023: ராசி மாறும் ராகு கேது..அக்டோபருக்குப் பின் சீறும் சிம்மம்..அடி தூள்
சென்னை: பாம்பு கிரகங்களான ராகு கேது திருக்கணிதப்பஞ்சாங்கப்படி ஐப்பசி மாதம் 13ஆம் தேதி அக்டோபர் 30,2023 நாள் மீன ராசிக்கும், கன்னி ராசிக்கும் இடப்பெயர்ச்சி அடைகின்றன. இந்த கிரகங்களின் இடப் பெயர்ச்சியால் சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் அதிரடி மாற்றம் ஏற்படப்போகிறது. சிலருக்கு வேலையில் இடமாற்றம் ஏற்படும். சிம்ம ராசியில் பிறந்தவர்களுக்கு ராகு கேது பெயர்ச்சியால் என்னென்ன மாற்றங்கள் ஏற்படப்போகிறது என்று பார்க்கலாம்.
ராகுவைப் போல கொடுப்பாரும் இல்லை கேதுவைப் போல கெடுப்பாரும் இல்லை என்பார்கள். யோகாதிபதி ராகுவும், மோட்சகாரகன் கேதுவும் நிழல் கிரகங்கள். ராகுபகவான் அள்ளிக்கொடுப்பார். கேது பகவான் கெடுக்க நினைப்பவர்களை கெடுப்பார். ராகு ஆசைக்கு காரகர், கேது மோட்சத்திற்கு காரகர் இவர்களுக்கு ராசி மண்டலத்தில் சொந்த ஆட்சி வீடு கிடையாது இவர்கள் யாருடைய வீட்டில் இருக்கின்றனரோ யாருடைய சாரத்தில் இருக்கிறார்களோ அதனுடைய பலனை செய்வார்கள்.

நவக்கிரகங்களில் புதனை விட செவ்வாயும், செவ்வாயை விட சனியும், சனியை விட குருவும், குருவை விட சுக்கிரனும், சுக்கிரனை விட சந்திரனும் சந்திரனை விட சூரியனும் சூரியனை விட ராகுவும் ராகுவை விட கேதுவும்,பலம் பெற்றவர்கள். ஜனன ஜாதகத்தில் ராகு கேது 3, 6, 11 ஆகிய இடங்களில் நல்ல பலனை தரக்கூடியவை. ராகு கேதுவுக்கு 3, 7, 11, பார்வைகள் விசேசமானது. புதனை போல கேதுவும் குருவை போல ராகுவும் செயல்பட உள்ளதால் சிம்மம் ராசிக்காரர்களுக்கு என்ன பலன் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.
சூரியனை ராசி அதிபதியாகக் கொண்ட சிம்மம் ராசிக்காரர்களே..உங்கள் ராசிக்கு 3ஆம் இடத்தில் பயணம் செய்யும் கேது அக்டோபர் மாதத்திற்குப் பிறகு 2ம் இடத்திற்கு வருகிறார். 9ஆம் வீட்டில் பயணம் செய்யும் ராகு அக்டோபர் மாதத்திற்குப் பிறகு எட்டாம் வீட்டிற்கு வருகிறார்கள். ராகு கேதுவினால் இதுவரையிலும் பலவிதங்களிலும் சிரமப்பட்ட நீங்கள், இனி ஓரளவு நிம்மதி அடைவீர்கள். சிலரின் ஆலோசனையைக் கேட்டு தவறான பாதையில் சென்று பலவிதங்களிலும் சிக்கித் தவித்தீர்களே, இனி சரியான பாதையில் பயணிப்பீர்கள். எதிர்பார்த்த இடங்களில் இருந்து உதவிகள் கிடைக்கும்.
ராகு சூது கிரகம். எதிர்பாராத பணம் பொன் பொருள் சேர்க்கை வீடு வாசல் போன்ற வசதிகளை தருவார். குருவின் பார்வையும் உங்கள் ராசிக்கு கிடைப்பதால் திருமணம் உள்ளிட்ட சுபகாரியங்கள் இனி தடையின்றி நடைபெறும். கோர்ட் வம்பு வழக்குகள் சாதகமாகும். எதிர்பாராத வகையில் திடீர் செலவுகளும் வந்து சேரும். குடும்பத்தினரிடம் விட்டுக்கொடுத்து செல்லுங்கள். சிலருக்கு இடமாற்றம்,ஊர்மாற்றம் நேரலாம். இது வரை வெளியூரில் இருந்தால் உள்ளுரில் செட்டில் ஆகலாம். இருக்கும் வீட்டை விரிவுபடுத்திக் கட்டுவீர்கள். சிலர் பிள்ளைகள் படிப்புக்காக பிரிந்து போகலாம்.
யாருக்கும் பணம் கொடுக்கும் முன்பாக ஒருமுறைக்கு இருமுறை யோசித்து முதலீடு செய்வது நல்லது. ராகு நிழல் கிரகம் என்பதால் ஷேர்மார்க்கெட் முதலீடுகள் லாபத்தைக் கொடுக்கும். அலுவலகத்தில் சலுகைகள் அதிகரிக்கும். மேலதிகாரிகளின் அன்பும் ஆதரவும் கூடும். சிலருக்கு திறமைக்கு ஏற்ற வேலையும், ஊதிய உயர்வும் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் அதிகப்படியான முதலீடுகளை தவிர்க்கப் பாருங்கள்.
இதுநாள் வரை தைரிய வீரிய ஸ்தானத்தில் இருந்த கேது பகவான் வாக்கு, தன ஸ்தானத்தில் அமர்வதால் உங்களின் செல்வாக்கும், சொல்வாக்கும் அதிகரிக்கும். மகன், மகளுக்கு நல்ல வேலை கிடைக்கும். திருமண பேச்சுவார்த்தைகள் நல்லபடியாக முடியும். வெளிநாட்டு பயணங்கள் சிலரை தேடி வரும்.
பணவரவுக்கு ஏற்ப விரைய செலவுகளும் தேடி வரும். தூக்க குறைபாடு காரணமாக மன உளைச்சல் ஏற்படும். யாருக்கும் வாக்கு கொடுத்து மாட்டிக்கொள்ளாதீர்கள். சிலர் வெளிமாநில புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். மாடி வீடு கட்டும் யோகம் வரும். சொல்லும் செயலும் வெற்றியைத் தேடித் தரும் இந்த ராகு கேது பெயர்ச்சியால் நன்மைகளே அதிகம் நடக்கும்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications