ராகு கேது பெயர்ச்சி 2023: சொந்த வீட்டில் குடியேறப்போகும் யோகம்..இந்த ராசிக்காரர்களுக்கு திடீர் லக்!
மதுரை: ராகுபகவான் அதிர்ஷ்டத்தை வருமானத்தை அள்ளிக்கொடுப்பார். கேது பகவான் கெடுக்க நினைப்பவர்களை கெடுப்பார். நவ கிரகங்களில் ராகு கேது நிழல் கிரகங்கள். ராகுவும் கேதுவும் ஓவ்வொரு ராசியிலும் ஓன்றறை ஆண்டுகள் அதாவது 18 மாதங்கள் தங்கி சுப அசுப பலன்களைத் தருவார்கள். வாக்கிய பஞ்சாங்கப்படி ராகு பகவான் மேஷ ராசியில் இருந்து மீன ராசிக்கும் கேது பகவான் துலாம் ராசியில் இருந்து கன்னி ராசிக்கும் அக்டோபர் மாத இறுதியில் இடபெயர்ச்சி அடைய உள்ளனர். இந்த ராகு கேது பெயர்ச்சியால் சிம்மம் ராசியில் பிறந்தவர்களுக்கு என்னென்ன பலன்களை நடைபெறப்போகிறது என்று பார்க்கலாம்.
சிம்மம்: இதுநாள் வரை கலக்கத்தில் இருந்த உங்களுக்கு மன நிம்மதியும் மகிழ்ச்சியும் கிடைக்கப்போகிறது. பாத சனி படுத்தி எடுத்தாலும் இந்த ராகு பெயர்ச்சி யோகத்தையும் அதிர்ஷ்டத்தையும் பெருமை புகழையும் தருவார். இதுநாள் வரை 3ஆம் இடத்தில் இருந்த கேது இப்பொழுது 2ம் இடத்திற்கும்,9ல் இருந்த ராகு 8ம் வீட்டிற்கும் வருகிறார்கள். ராகு கேதுவினால் இதுவரையிலும் பலவிதங்களிலும் சிரமப்பட்ட நீங்கள், இனி ஓரளவு நிம்மதி அடைவீர்கள். சிலரின் ஆலோசனையைக் கேட்டு தவறான பாதையில் சென்று பலவிதங்களிலும் சிக்கித் தவித்தீர்களே, இனி சரியான பாதையில் பயணிப்பீர்கள். எதிர்பார்த்த இடங்களில் இருந்து உதவிகள் கிடைக்கும்.

பொன்னான காலம்: ராகு சூது கிரகம் குடும்ப எட்டாம் வீடான அஷ்டம ஸ்தானத்திற்கு வருவதால் எதிர்ப்பாராத பணம் பொன் பொருள் சேர்க்கை வீடு வாசல் போன்ற வசதிகளை தருவார். திருமணம் சுபகாரியம் நடக்கும். கோர்ட் வம்பு வழக்குகள் சாதகமாகும். எதிர்பாராத வகையில் திடீர் செலவுகளும் வந்து சேரும். குடும்பத்தினரிடம் விட்டுக்கொடுத்து செல்லுங்கள். சிலருக்கு இடமாற்றம்,ஊர்மாற்றம் நேரலாம். இருக்கும் வீட்டை விரிவுபடுத்திக் கட்டுவீர்கள். சிலர் பிள்ளைகள் படிப்புக்காக பிரிந்து போகலாம்.
ஷேர் மார்கெட்: தொழில் வியாபாரத்தில் அதிகப்படியான முதலீடுகளை தவிர்க்கப்பாருங்கள். யாருக்கும் பணம் கொடுக்கும் முன்பாக ஒருமுறைக்கு இருமுறை யோசித்து முதலீடு செய்வது நல்லது. ராகு நிழல் கிரகம் என்பதால் ஷேர்மார்க்கெட் முதலீடுகள் லாபத்தைக் கொடுக்கும். அலுவலகத்தில் சலுகைகள் அதிகரிக்கும். மேலதிகாரிகளின் அன்பும் ஆதரவும் கூடும். சிலருக்கு திறமைக்கு ஏற்ற வேலையும், ஊதிய உயர்வும் கிடைக்கும்.
வருமானம் கூடும்: மூன்றாம் வீடான தைரிய வீரிய ஸ்தானத்தில் பயணம் செய்யும் கேது பகவான் இரண்டாம் வீடான வாக்கு, தன ஸ்தானத்தில் அமர்வதால் உங்களின் செல்வாக்கும், சொல்வாக்கும் அதிகரிக்கும். மகன், மகளுக்கு நல்ல வேலை கிடைக்கும். திருமண பேச்சுவார்த்தைகள் நல்லபடியாக முடியும். வெளிநாட்டு பயணங்கள் சிலரை தேடி வரும்.
யோகம் தரும் கேது: பணவரவுக்கு ஏற்ப விரைய செலவுகளும் தேடி வரும். தூக்க குறைபாடு அதனால் மன உளைச்சல் ஏற்படும். சிலர் வெளிமாநில புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். மாடி வீடு கட்டும் யோகம் வரும். சொல்லும் செயலும் வெற்றியைத் தேடித் தரும் இந்த ராகு கேது பெயர்ச்சியால் நன்மைகளே அதிகம் நடக்கப்போகிறது என்பதால் அனுபவிக்கத் தயாராகுங்கள்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications