ராகு கேது பெயர்ச்சி 2023: யாருடைய வாழ்க்கையில் அதிரடி மாற்றம்..வேலையில் நிம்மதி யாருக்கு தேடி வரும்
சென்னை: தனுசு ராசிக்காரர்களே, சுக ஸ்தானமான நான்காவது வீட்டில் ராகுவும் பத்தாம் வீடான தொழில் வீட்டில் கேதுவும் பயணம் செய்யப்போகின்றனர். உங்களுக்கு இந்த ராகு கேது பெயர்ச்சியால் புதிய மாற்றங்கள் நிகழப்போகின்றன. ராகுவும் கேதுவும் நிழல் கிரகங்கள் என்பதால் எதிர்திசையில் சுழலும். இந்த கிரகங்களுக்கு சொந்த வீடு இல்லை புதனைப் போல ராகுவும், குரு பகவானைப்போல கேதுவும் பலன் தரப்போகின்றனர். 18 மாதங்கள் ராகுவும் கேதுவும் மீனம் மற்றும் கன்னி ராசிகளில் பயணம் செய்கின்றனர். 18 மாதங்களில் ராகுவும், கேதுவும் தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு என்னென்ன யோகத்தைத் தரப்போகிறார்கள், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கும் என்றும் பார்க்கலாம்.
நவக்கிரகங்களில் புதனை விட செவ்வாயும், செவ்வாயை விட சனியும், சனியை விட குருவும், குருவை விட சுக்கிரனும், சுக்கிரனை விட சந்திரனும் சந்திரனை விட சூரியனும் சூரியனை விட ராகுவும் ராகுவை விட கேதுவும்,பலம் பெற்றவர்கள். ஜனன ஜாதகத்தில் ராகு கேது 3, 6, 11 ஆகிய இடங்களில் நல்ல பலனை தரக்கூடியவை. ராகு கேதுவுக்கு 3, 7, 11, பார்வைகள் விசேசமானது.

ராகுவைப் போல கொடுப்பாரும் இல்லை கேதுவைப் போல கெடுப்பாடும் இல்லை என்பார்கள். யோகாதிபதி ராகுவும், மோட்சகாரகன் கேதுவும் நிழல் கிரகங்கள். ராகுபகவான் அள்ளிக்கொடுப்பார். கேது பகவான் கெடுக்க நினைப்பவர்களை கெடுப்பார். ராகு ஆசைக்கு காரகர், கேது மோட்சத்திற்கு காரகர் இவர்களுக்கு ராசி மண்டலத்தில் சொந்த ஆட்சி வீடு கிடையாது இவர்கள் யாருடைய வீட்டில் இருக்கின்றனரோ யாருடைய சாரத்தில் இருக்கிறார்களோ அதனுடைய பலனை செய்வார்கள். 18 மாதங்கள் ராகுவும் கேதுவும் மீனம் மற்றும் கன்னி ராசிகளில் பயணம் செய்கின்றனர். அக்டோபர் மாதம் முதல் தனுசு ராசிக்காரர்களுக்கு என்ன பலன் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.
குரு பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட தனுசு ராசிக்காரர்களே, அசாத்திய திறமைசாலிகள் நீங்கள். பிரச்சினைகளை சாமர்த்தியமாக தீர்த்துவிடுவீர்கள். மனநிம்மதி அதிகரிக்கும். பிள்ளைகளால் ஏற்பட்ட தொல்லைகள் நீங்கி நீங்கி சந்தோஷம் அதிகரிக்கும். ஏழரை சனியின் பிடியில் இருந்து விடுபட்டிருக்கிறீர்கள். கலகமும் போர் பதற்றமுமாக இருந்த வீடு சனியின் இடமாற்றத்தால் இனி அமைதிப்பூங்காவாக மாறப்போகிறது.
ராகு கேது இடமாற்றமும் உங்கள் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை தரப்போகிறது. உங்களின் குடும்பத்தில் இருந்த பிரச்சினை முடிவுக்கு வரப்போகிறது. கணவன் மனைவி இடையேயான சிக்கல் நீங்கி சுகமான நாட்களாக மாறப்போகிறது. கசப்பான நாட்கள் இனிமையான நாட்களாக மாறப்போகிறது. தடைபட்ட சுபகாரியங்கள் கைகூடி வரப்போகிறது. கணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். பண வரவு அதிகரிக்கும். கடன் பிரச்சினை முடிவுக்கு வரப்போகிறது.
நான்காம் வீட்டில் அமர்ந்துள்ள ராகுவினால் அம்மாவிற்கு மருத்துவ செலவுகள் அதிகரிக்கும். அம்மா வழி உறவினர்களால் சில சிக்கல்கள் வரும். திடீர் கருத்து மோதல்கள் வரலாம். வேலையில் சிலருக்கு இடமாற்றம உண்டாகும். பணத்தட்டுபாடுகள் நீங்கும். வீட்டிற்குத் தேவையான விலை உயர்ந்த பொருட்களை வாங்குவீர்கள். ஆலயங்களுக்கு ஆன்மீக பயணம் சென்று வருவீர்கள்.
பத்தில் ஒரு பாவி இருக்க வேண்டும் என்று சொல்வார்கள். பத்தாம் வீட்டில் கேது பயணம் செய்கிறார். வேலையில் திறமை பளிச்சிடும். அலுவலகத்தில் புரமோசன் கிடைக்கும். உயரதிகாரியின் ஒத்துழைப்பு கிடைக்கும். கூடுதல் சம்பளத்தில் நல்ல வேலை கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். உயரதிகாரிகளைப் பற்றி விமர்சித்து பேசுவதை தவிர்க்கவும். அலுவலகத்தில் பாராட்டும் பரிசும் கிடைக்கும்.
சமூகத்தில் மதிப்பு மரியாதை கூடும். வீடு நிலம் வாங்கலாம். சகோதரர்கள் கூட்டு விசேசங்களில் பங்கேற்பீர்கள். செல்வம் செல்வாக்கு அதிகரிக்கும். பெரிய அளவில் முக்கியமான முடிவுகள் எடுக்கும் முன்பாக ஒருமுறைக்கு இருமுறை யோசித்து முடிவு செய்வது நல்லது. பெரிய அளவில் முதலீடு செய்து அகலக்கால் வைக்க வேண்டாம்.
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications