ராகு கேது பெயர்ச்சி 2023: பதவி யோகம் தரப்போகும் பாம்பு கிரகங்கள்..பந்தாவாக அனுபவிக்கப்போவது யார்?
சென்னை: சனி பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மகர ராசிக்காரர்களே, முயற்சி ஸ்தானமான மூன்றாவது வீட்டில் ராகுவும் ஒன்பதாம் வீடான பாக்ய ஸ்தானத்தில் கேதுவும் பயணம் செய்கின்றனர். உங்களுக்கு இந்த ராகு கேது பெயர்ச்சியால் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உங்கள் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றமும் நிகழப்போகிறது. நிழல் கிரகங்களின் இடப்பெயர்ச்சி மற்றும் பார்வைகளால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் பரிகாரம் என்ன செய்யலாம் என்று பார்க்கலாம்.
ராகுவும் கேதுவும் நிழல் கிரகங்கள் என்பதால் எதிர்திசையில் சுழலும். இந்த கிரகங்களுக்கு சொந்த வீடு இல்லை புதனைப் போல ராகுவும், குரு பகவானைப்போல கேதுவும் பலன் தரப்போகின்றனர். 18 மாதங்கள் ராகுவும் கேதுவும் மீனம் மற்றும் கன்னி ராசிகளில் பயணம் செய்கின்றனர். 18 மாதங்களில் ராகுவும், கேதுவும் தனுசு ராசியில் பிறந்தவர்களுக்கு என்னென்ன யோகத்தைத் தரப்போகிறார்கள், என்ன மாதிரியான பலன்கள் கிடைக்கும் என்றும் பார்க்கலாம்.

நவக்கிரகங்களில் புதனை விட செவ்வாயும், செவ்வாயை விட சனியும், சனியை விட குருவும், குருவை விட சுக்கிரனும், சுக்கிரனை விட சந்திரனும் சந்திரனை விட சூரியனும் சூரியனை விட ராகுவும் ராகுவை விட கேதுவும்,பலம் பெற்றவர்கள். ஜனன ஜாதகத்தில் ராகு கேது 3, 6, 11 ஆகிய இடங்களில் நல்ல பலனை தரக்கூடியவை. ராகு கேதுவுக்கு 3, 7, 11, பார்வைகள் விசேசமானது.
ராகுவைப் போல கொடுப்பாரும் இல்லை கேதுவைப் போல கெடுப்பாடும் இல்லை என்பார்கள். யோகாதிபதி ராகுவும், மோட்சகாரகன் கேதுவும் நிழல் கிரகங்கள். ராகுபகவான் அள்ளிக்கொடுப்பார். கேது பகவான் கெடுக்க நினைப்பவர்களை கெடுப்பார். ராகு ஆசைக்கு காரகர், கேது மோட்சத்திற்கு காரகர் இவர்களுக்கு ராசி மண்டலத்தில் சொந்த ஆட்சி வீடு கிடையாது இவர்கள் யாருடைய வீட்டில் இருக்கின்றனரோ யாருடைய சாரத்தில் இருக்கிறார்களோ அதனுடைய பலனை செய்வார்கள். 18 மாதங்கள் ராகுவும் கேதுவும் மீனம் மற்றும் கன்னி ராசிகளில் பயணம் செய்கின்றனர். அக்டோபர் மாதம் முதல் மகரம் ராசிக்காரர்களுக்கு என்ன பலன் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.
நேர்மையும் தன்னம்பிக்கையும் தைரியமும் கொண்ட மகர ராசிக்காரர்களே, உங்களுக்கு இந்த ராகு கேது பெயர்ச்சி அபரிமிமான நன்மைகளைத் தரப்போகிறது. புதிய முயற்சிகள் பலிக்கும். உடலில் இருந்த சோம்பலும் நோய்களும் நீங்கும். சுறுசுறுப்பும் ஆரோக்கியமும் அதிகரிக்கும். டென்சன் மன உளைச்சல் நீங்கி நிம்மதியும் சந்தோஷமும் பிறக்கும். உங்களின் பேச்சிற்கு சமூகத்தில் மதிப்பு மரியாதை கூடும். கணவன் மனைவி இடையே சண்டை சச்சரவுகள் நீங்கி இணக்கமான போக்கு அதிகரிக்கும்.

உங்களின் பேச்சில் கம்பீரம் பிறக்கும். உங்களிடம் கடன் வாங்கியவர்கள் தேடி வந்து கொடுப்பார்கள். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் அதிகரிக்கும். அம்மாவின் ஆரோக்கியம் கூடும். தடைபட்ட திருமண சுபகாரியங்கள் கைகூடி வரும். திருமணமானவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். சொன்ன சொல்லை நிறைவேற்றுவீர்கள். இளைய சகோதரர்களின் வீட்டு விஷேசங்களில் உற்சாகமாக பங்கேற்பீர்கள்.
அக்டோபர் மாதம் முதல் சுபகாரியங்களும் நல்ல காரியங்களும் நிறைய நடைபெறப்போகிறது. எதிர்பார்த்த பணம் கைக்கு வரும். பங்குச்சந்தை முதலீடுகளில் லாபம் அதிகரிக்கும். புதிய வேலைக்கு முயற்சி செய்யலாம். பதவி உயர்வும் சம்பள உயர்வும் கிடைக்கும். புதிய வீடு மனை வாங்க முயற்சி செய்யலாம். பதவி யோகம் கிடைப்பதற்கான நேரம் கைகூடி வந்து விட்டது. அனுபவிக்கத் தயாராகுங்கள். அதே நேரத்தில் 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் அக்டோபர் வரை உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது அவசியம்.
கேது பகவான் உங்கள் ராசிக்கு பாக்ய ஸ்தானத்தில் பயணம் செய்யப்போகிறார். அக்டோபர் முதல் 18 மாதங்களுக்கு வெற்றிகள் தேடி வரப்போகிறது. நிறைய ஆன்மீக பயணங்கள் செல்வீர்கள். வாழ்க்கையின் சூட்சுமத்தை புரிந்து கொள்வீர்கள். புத்திசாலித்தனம் அதிகரிக்கும். குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பங்கள் மாறும். தடுமாற்றம் நீங்கும் தெளிவு பிறக்கும். பல வழிகளில் இருந்தும் பண வருமானம் அதிகரிப்பதால் பற்றாக்குறை நீங்கும் சேமிப்பு அதிகரிக்கும்.
9ஆம் வீட்டில் ராகு பயணம் செய்வதால் அப்பாவின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது அவசியம். வெளிநாட்டு வேலை வாய்ப்புகள் தேடி வரும். ராகுவின் நட்சத்தில் கேது செல்லும் காலத்தில் சிறு சிறு உடல் நலக்கோளாறுகள் ஏற்படும். சுப விரைய செலவுகள் வந்து செல்லும். மொத்தத்தில் இந்த ராகு கேது பெயர்ச்சி மகர ராசிக்காரர்கள் வாழ்க்கையில் அற்புதங்களை நிகழ்த்தப்போகும் கிரகப்பெயர்ச்சியாக அமைந்துள்ளது.












Click it and Unblock the Notifications