ராகு கேது பெயர்ச்சி பலன் 2023: விபரீத ராஜயோகம் தரப்போகும் விரைய ராகு.. கடன் நீக்கும் கேது யாருக்கு?
சென்னை: ராகு கேது கிரகங்கள் பலரது வாழ்க்கையில் திடீர் மாற்றத்தை ஏற்படுத்தப்போகிறது. ராகுவும் கேதுவும் 18 மாதங்கள் ஒரு ராசியில் பயணம் செய்கின்றன. இன்று முதல் மீன ராசியில் பயணம் செய்யும் ராகுவும் கன்னி ராசியில் பயணம் செய்யும் கேதுவும் மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும் பரிகாரம் என்ன செய்யலாம் என்று பார்க்கலாம்.
ராஜயோகம்: ராகுவைப் போல கொடுப்பாரும் இல்லை கேதுவைப் போல கெடுப்பாரும் இல்லை என்பார்கள். யோகாதிபதி ராகுவும், மோட்சகாரகன் கேதுவும் நிழல் கிரகங்கள். ராகுபகவான் அள்ளிக்கொடுப்பார். கேது பகவான் கெடுக்க நினைப்பவர்களை கெடுப்பார். ராகு ஆசைக்கு காரகர், கேது மோட்சத்திற்கு காரகர். மேஷம் ராசிக்கு 12மிடத்தில் ராகுவும் 6ம் இடத்திற்கு கேதுவும் பயணம் செய்வதால் விபரீத ராஜயோகம் தேடி வரப்போகிறது.

மேஷம்: கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜ யோகம் என்பதன் அடிப்படையில் இப்பொழுது கெட்ட இடத்திற்கு ராகு கேது வருவது நல்லது தான். ஜென்ம ராசியில் அமர்ந்து அறிவாளியை முட்டாளாக்கி உட்கார வைத்த ராகு 12 ம் இடத்திற்கு செல்லப்போகிறார். ராகுவின் பிடியில் இருந்து குரு பகவான் விடுபடுகிறார். வெளிநாட்டு பயணம்,தொழில் வாய்ப்பு அமையும். புதிய வேலை வாய்ப்பை கொடுப்பார். வெளியூர், வெளிநாடு வியாபாரத் தொடர்பு ஏற்படும். வெளிநாட்டில் நல்ல வேலை கிடைக்கும். கல்விக்காக மாணவர்கள் வெளிநாடு செல்ல செய்யும் முயற்சி வெற்றியை தரும்.
இடமாற்றம்: ராகு கேது பெயர்ச்சியால் சிலருக்கு வீடு மாற்றம் ஊர் மாற்றம் உண்டாகும். சுபகாரியங்கள் திருமணம் சடங்கு கிரக பிரவேசம் போன்ற சுபகாரியங்கள் நடக்கும். சிலரது பிள்ளைகளுக்கு கலப்பு திருமணம் காதல் திருமணம் அவர்கள் விருப்பப்படி செய்து வைக்கும் சூழ்நிலை வரும். வீட்டில் இருந்த சண்டை சச்சரவுகள் நீங்கும். கடந்த கால கசப்பு உணர்வுகள் நீங்கி மகிழ்ச்சியான இல்லற வாழ்க்கையை தரப்போகிறது.
பதற்றம் நீங்கும்: ராகு பகவான் யோக காரகன் என்பதால் ஆசைகளை தூண்டி விடக்கூடியவர். ஜென்ம ராகு விலகுவதால் பயம், பதற்றம் நீங்கும். தெளிவான முடிவு எடுப்பீர்கள். கவலைகள், மன சஞ்சலங்கள் முடிவுக்கு வரப்போகிறது. 12ஆம் வீட்டில் பயணம் செய்யும் ராகு திடீர் பயணங்களைத் தரப்போகிறார். புது வீடு வாங்கும் யோகம் வரப்போகிறது. புது முயற்சிகளுக்கு வெற்றிகள் கிடைக்கப்போகிறது. வெளிநாடு சுற்றுலா செல்வதற்காக யோசிப்பீர்கள்.
மன நிம்மதி: மாணவர்களுக்கு படிப்போடு வேலையும் கிடைக்க வாய்ப்பு உள்ளது. முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பெண்களுக்கு நிம்மதியும் மன மகிழ்ச்சியும் தரப்போகிறது. தொழில் வியாபாரத்தில் இருந்த சிக்கல்கள் நீங்கப்போகிறது. மன நிம்மதியையும் மகிழ்ச்சியையும் தரப்போகிறார் ராகு பகவான். நரக வேதனை நீங்கப்போகிறது. ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து செல்வீர்கள். எதிர்மறை எண்ணங்கள் விலகி நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும்.
கடன் தீர்க்கும் கேது: ஆன்மீகத்தை தரக்கூடிய கேது பகவான் உங்கள் ராசிக்கு ஆறாம் வீட்டில் பயணம் செய்யப்போவதால் குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். நோய்கள் நீங்கும். கடன் பிரச்சினைகள் முடிவுக்கு வரப்போகிறது. உங்களை தொந்தரவு செய்த எதிரிகள் பலவீனமடைவார்கள். பூர்வீக சொத்து பிரச்சினைகளால் நடந்து வந்த வழக்குகள் உங்களுக்கு சாதகமாகும். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். இழுபறியான பணிகள் முழுமையடையும்.
லாபம் அதிகரிக்கும்: நிறைய நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்கும். ஆன்மீக வழிபாடு எண்ணங்கள் அதிகரிக்கும். ஆன்ம பலம் கூடி வரும். வேலையில் இருந்த சிக்கல்கள் பிரச்சினைகள் முடிவுக்கு வரும். புது வேலை கிடைக்கும். கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளவும். தொழிலை பெருக்கி லாபம் சம்பாதித்து சுகபோகங்களை பெருக்கி கொள்ளலாம். கடந்த காலங்களில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள் நீங்கும். உங்களுடைய செயல்களில் காரியங்களில் வெற்றி உண்டாகும்.
பரிகாரம்: ராகு கேது பெயர்ச்சி முன்னேற்றத்தையும் மாற்றத்தையும் தரும். மலைபோல வரும் துன்பம் எல்லாம் பனிபோல விலகி ஓடும். குடும்பத்தில் நிம்மதியும் மகிழ்ச்சியும் கிடைக்கும் காலம் வந்து விட்டது. ராகு கேது பெயர்ச்சியால் சின்ன சின்ன பாதிப்புகள் வந்தாலும் கவலைகள் நீங்க ராகு கேது பெயர்ச்சியால் கால சர்ப்ப தோஷம் விலகுவது நன்மையை ஏற்படுத்த போகிறது. வியாழக்கிழமை குரு பகவானையும் புதன்கிழமை விநாயகரையும் வணங்குவது நன்மையை ஏற்படுத்தப்போகிறது.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications