ராகு கேது பெயர்ச்சி பலன் 2023: உச்சத்திற்கு போகும் 4 ராசிக்காரர்கள்..புரமோசன் வீடு தேடி வரும்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நவ கிரகங்களில் ராகுவும் கேது நிழல் கிரகங்கள். சூரியன், செவ்வாய், புதன், குரு, சனி, சந்திரன், சுக்கிரன் ஆகிய ஏழு கிரகங்களும் முன்னோக்கி நகரும் போது ராகுவும் கேதுவும் பின்னோக்கி நகரும். ராகு இப்போது மேஷ ராசியில் குரு உடன் பயணம் செய்கிறார். கேது இப்போது துலாம் ராசியில் பயணம் செய்கிறார். அக்டோபர் இறுதியில் ராகு கேது பெயர்ச்சி நடைபெற உள்ளது. ராகு மீனம் ராசிக்கும் கேது கன்னி ராசிகும் இடப்பெயர்ச்சி அடைய உள்ளனர். இந்த ராகு கேது பெயர்ச்சியால் துலாம், விருச்சிகம், தனுசு, மகரம்,கும்பம், மீனம் ஆகிய 6 ராசிகளில் பிறந்தவர்களுக்கு என்ன பலன் கிடைக்கும் யாருக்கு என்ன பாதிப்பு ஏற்படும் என்று பார்க்கலாம்.

ராகு கேது பெயர்ச்சி: ராகு கேது சாதகமாக இருந்தால் ஒருவருக்கு செல்வம் செல்வாக்கு தேடி வரும் ராகு கேது சாதகமாக இருப்பவர்களுக்குத்தான் லாட்டரியில் பணமும், திடீர் புதையலும் கிடைக்கும். ராகு செல்வம் செல்வாக்கை அள்ளிக்கொடுப்பார். கேது திடீர் ஞானத்தை கொடுத்து மோட்சத்திற்கு வழிகாட்டுவார். அக்டோபர் மாதத்திற்குப் பிறகு மீன ராசியில் அமரும் ராகு குரு பகவானைப் போலவும் கன்னி ராசியில் அமரும் கேது புதன் பகவானைப் போலவும் செயல்படுவார்கள்.

Rahu Ketu Peyarchi palan 2023 : Thulam,Viruchigam,Dhanusu,makaram,kumbam and Meenam

துலாம்: ராகு பகவான் அக்டோபர் மாதத்திற்குப் பிறகு உங்கள் ராசிக்கு 6ஆம் வீட்டிற்கு வரப்போகிறார். பிரிந்திருந்த கணவன் மனைவி ஒன்று சேருவார்கள். இனி குடும்பத்தில் அமைதி திரும்பி மகிழ்ச்சியான சூழல் உருவாகும். குரு பகவான் நேரடி பார்வையால் பண வருமானம் அதிகரிக்கும். கடன்கள் அடைபடும். மன நிம்மதி உண்டாகும். சொத்து பிரச்சனைகளில் சுமூக முடிவு உண்டாகும். கேது பகவான் மோட்ச ஸ்தானமான 12வது வீட்டிற்கு வரப்போவதால் வேலையில் உள்ளவர்களுக்கு இது நாள் வரை மேலதிகாரிகளுடன் இருந்து வந்த மோதல் போக்கு விலகும். பதவி உயர்வு கிடைக்கும். வியாபாரத்தில் லாபத்தைப் பெருக்குவீர்கள். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.

விருச்சிகம்: ராகு பகவான் உங்கள் ராசிக்கு 5ஆம் வீட்டில் அமர போகிறார். கணவன் மனைவிக்குள் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் விலகி அன்யோனியம் பெருகும். வேலையில் ஒரு சிலருக்கு இட மாறுதல்கள் ஏற்பட வாய்ப்புண்டு. புது முயர்ச்சியில் சற்று நிதானம் தேவை. ஆடை, ஆபரணங்கள் சேரும். வீட்டிற்கு தேவையான ஆடம்பர பொருட்களை வாங்குவீர்கள். கேது பகவான் உங்கள் ராசிக்கு 11ஆம் வீட்டில் வந்து அமர போகிறார். இதனால் தடைபட்ட சுபகாரியங்கள் இனிதே கைகூடும். திடீர் அதிர்ஷ்டம் உங்களை தேடி வரும். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். வியாபாரத்தில் லாபம் கூடும். பெண்கள் விஷயத்தில் சற்று கவனம் தேவை.

தனுசு: ராகு பகவான் உங்கள் ராசிக்கு 4 ஆம் வீட்டில் பயணம் செய்யப்போகிறார். கணவன் மனைவிக்குள் அன்பு அதிகரிக்கும். பூர்வீக சொத்தில் இருந்து வந்த பிரச்சினைகள் விலகும். அலுவலகத்தில் வரும் பிரச்னைகளை சுமுகமாகப் பேசித் தீர்ப்பீர்கள். கேது பகவான் அக்டோபர் மாதத்திற்குப் பிறகு உங்கள் ராசிக்கு 10ஆம் வீட்டிற்கு வந்து அமர்வதால் இனி எடுத்த காரியத்தை எளிதில் முடிக்க வைப்பார். அலுவலகத்தில் வேலைச்சுமை அதிகரித்தாலும் புதிய அனுபவங்களைக் கற்றுக்கொள்வீர்கள். வியாபாரத்தில் போட்டிகளை சமாளித்து லாபத்தைப் பெருக்குவீர்கள்.சிலருக்கு வெளிநாடு செல்லும் யோகமும் கிட்டும்.

மகரம்: முயற்சி ஸ்தானமான மூன்றாவது வீட்டிற்கு ராகு பகவான் வந்து அமர்வதால் எதிலும் வெற்றி உண்டாகும். சமூகத்தில் அந்தஸ்து உயரும். கணவன் மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். வருமானம் அதிகரிப்பதால் கடன்கள் தீரும். வங்கியில் அடகு வைத்து நகைகளை திருப்புவீர்கள். தாய்வழி உறவினர்களுடன் இருந்து வந்த பிரச்னை விலகும். வீடு, மனை வாங்கும் யோகம் உண்டாகும். தடைபட்ட சுபகாரியங்கள் நிறைவேறும். கேது பகவான் பாக்ய ஸ்தானத்திற்கு வரப்போவதால் வேலையில் புரமோசன் கிடைக்கும். பெண்களின் நட்பு கிடைக்கும். புதிதாக ஆடை, ஆபரணங்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் லாபம் பலமடங்கு பெருகும். நீங்கள் செய்யும் புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.

கும்பம்: ராகு குடும்ப ஸ்தானத்திற்கு வரப்போவதால் கும்பம் ராசிக்காரர்கள் வாக்கு கொடுக்காதீர்கள். கோபத்தை தவிருங்கள். செலவுகள் அதிகம் வரும் சிக்கனமும் சேமிப்பும் தேவை. நாவடக்கம் ரொம்ப முக்கியம். பங்குச்சந்தையில் சந்தை நிலவரத்தை அறிந்து முதலீடு செய்தால் உங்களுக்கு பலன் கிடைக்கும். சிலருக்கு உயர் பதவிகள் தேடி வரும். பணவரவு அதிகமாகும். எதிர்ப்புகள் விலகும். வேலை செய்யும் இடத்தில் புத்திசாலித்தனம் அதிகரிக்கும். கணவன் மனைவி இடையே இருந்த பிரச்சினைகள் நீங்கும். காரிய தடைகள் நீங்கும்.

மீனம்: ராகு இனி உங்கள் ஜென்ம ராசியில் வந்து அமர்வதால் கஷ்டங்கள் விலகி இனிதான நற்பலன்களை அனுபவிக்க போகிறீர்கள். முதல் இரண்டு மாதங்கள் மந்தமான நிலை உருவாகும் இனி எடுத்த காரியங்களில் எளிதில் வெற்றி கிட்டும். சமூகத்தில் உயர்ந்த அந்தஸ்தை பெறுவீர்கள். பண வரவு அதிகரிக்கும் . குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். உங்கள் பேச்சில் ஒரு நிதானமும் பொறுப்பு தன்மையும் தென்படும். சமூகத்தில் உங்கள் அந்தஸ்து உயரும். பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும். கணவன் மனைவிக்குள் சிறு சிறு சண்டைகள் வந்து போகும் யாராவது ஒருவர் விட்டு கொடுத்து போனால் வாழ்க்கை இனிமையாக செல்லும். குடும்பத்தில் புது தொழிலில் முதலீடு செய்வீர்கள். வரவுக்கு மீறி செலவு செய்வதை தவிர்க்கவும். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவீர்கள். சிலருக்கு திருமண யோகம் கைகூடும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+