ராகு கேது பெயர்ச்சி 2023: பாம்பு கிரகங்களின் அதிரடி ஆட்டம்..வேலையில் புரமோசன் யாருக்கு கிடைக்கும்?
சென்னை: நவ கிரகங்களில் நிழல் கிரகங்களான ராகு கேது மனிதர்கள் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்துபவை. திருக்கணிதப்பஞ்சாங்கப்படி ஐப்பசி மாதம் 13ஆம் தேதி அக்டோபர் 30,2023 நாள் ராகு மீனம் ராசிக்கும், கேது கன்னி ராசிக்கும் இடப்பெயர்ச்சி அடைகின்றன. இந்த கிரகங்களின் இடப் பெயர்ச்சியால் சிலருக்கு அசுர வளர்ச்சியும் அற்புத யோகமும் அக்டோபர் மாதத்தில் சில ராசிக்காரர்களுக்கு கிடைக்கப்போகிறது. விருச்சிகம் ராசியில் பிறந்தவர்களுக்கு ராகு கேது பெயர்ச்சியால் என்னென்ன மாற்றங்கள் ஏற்படப்போகிறது என்று பார்க்கலாம்.
நவக்கிரகங்களில் புதனை விட செவ்வாயும், செவ்வாயை விட சனியும், சனியை விட குருவும், குருவை விட சுக்கிரனும், சுக்கிரனை விட சந்திரனும் சந்திரனை விட சூரியனும் சூரியனை விட ராகுவும் ராகுவை விட கேதுவும்,பலம் பெற்றவர்கள். ஜனன ஜாதகத்தில் ராகு கேது 3, 6, 11 ஆகிய இடங்களில் நல்ல பலனை தரக்கூடியவை. ராகு கேதுவுக்கு 3, 7, 11, பார்வைகள் விசேசமானது.

ராகுவைப் போல கொடுப்பாரும் இல்லை கேதுவைப் போல கெடுப்பாடும் இல்லை என்பார்கள். யோகாதிபதி ராகுவும், மோட்சகாரகன் கேதுவும் நிழல் கிரகங்கள். ராகுபகவான் அள்ளிக்கொடுப்பார். கேது பகவான் கெடுக்க நினைப்பவர்களை கெடுப்பார். ராகு ஆசைக்கு காரகர், கேது மோட்சத்திற்கு காரகர் இவர்களுக்கு ராசி மண்டலத்தில் சொந்த ஆட்சி வீடு கிடையாது இவர்கள் யாருடைய வீட்டில் இருக்கின்றனரோ யாருடைய சாரத்தில் இருக்கிறார்களோ அதனுடைய பலனை செய்வார்கள். 18 மாதங்கள் ராகுவும் கேதுவும் மீனம் மற்றும் கன்னி ராசிகளில் பயணம் செய்கின்றனர். அக்டோபர் மாதம் முதல் புதனை போல கேதுவும் குருவை போல ராகுவும் செயல்பட உள்ளதால் விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு என்ன பலன் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.
அர்த்தாஷ்டம சனி காலமாக இருந்தாலும் இந்த ராகு கேது பெயர்ச்சி பல அற்புத பலன்களைத் தரப்போகிறது. குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் குழப்பங்கள் நீங்கி நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்கப்போகிறது. கணவன் மனைவி இடையேயான பிரச்சனைகள் நீங்கும். தடைபட்ட காரியங்கள் நீங்கி வெற்றி உண்டாகும். கர்ப்பிணிப் பெண்கள் கவனமாக இருக்க வேண்டிய காலம் நீண்ட கால பயணங்களைத் தவிர்க்கவும்.
ராகு பகவான் பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் பயணம் செய்வதால் எதிர்பாராத இடத்தில் இருந்து பண வருமானம் அதிகரிக்கும். சிறு உல்லாச பயணங்கள் அதிகரிக்கும். வேலை விசயமாக வெளியூர் செல்லும் பயணங்கள் அதிகரிக்கும். விஐபிக்கள் அறிமுகமாவார்கள். பொன் நகை சேர்க்கை அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும் பூர்வீக சொத்து மூலம் லாபம் வரும். வேலையில் புரமோசனும் நீண்ட நாட்களாக வர வேண்டிய சம்பள உயர்வு வரும். வாழ்க்கைத்துணையின் உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டவும்.
கேது பகவான் லாப ஸ்தானத்தில் பயணம் செய்யப்போவதால் திடீர் யோகம் தேடி வரும். பங்குச்சந்தை முதலீடுகளில் இருந்து லாபம் கிடைக்கும். இதன்மூலம் உங்களின் பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்கும். அக்டோபர் மாதத்திற்குப் பிறகு புகழின் உச்சத்தை அடையப்போகிறீர்கள். திருமண தடைகள் நீங்கும். சுபகாரியம் நடைபெறும். வீடு கட்டும் யோகம் கைகூடி வரப்போகிறது. பேச்சில் தெளிவு இருக்கும். சமூகத்தில் உங்களின் பேச்சிற்கு மதிப்பு மரியாதை அதிகரிக்கும்.
தடைபட்ட வேலைகள் தடைகள் நீங்கி மளமளவென நடைபெறும் என்றாலும் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டிய காலகட்டமாகும். வாழ்க்கைத்துணையின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. அறுவை சிகிச்சை செய்ய வாய்ப்பு உள்ளது. படிப்படியாக நோய் பற்றி அச்சம் நீங்கும் ஆரோக்கியம் அதிகரிக்கும். உயர்கல்விக்காக சிலர் வெளிநாடு செல்ல வேண்டியிருக்கும்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications