Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ராகு கேது பெயர்ச்சி பலன் 2024: மீன ராசி.. கன்னி கேது.. குரோதி ஆண்டில் கவனமாக இருக்க வேண்டியது யார்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: ராகு கொடுக்க நினைப்பதை யாராலும் தடுக்க முடியாது அந்த அளவிற்கு அள்ளிக்கொடுப்பார். ஒருவருக்கு மறைமுகமாக வரும் திடீர் அதிர்ஷ்டம் பணவரவு யோகங்கள் எல்லாமே ராகுவினால் ஏற்படக்கூடியதுதான். கேது ஆன்மீக வழியில் கொண்டு செல்வார். மீன ராசியில் பயணம் செய்யும் ராகுவும் கன்னி ராசியில் பயணம் செய்யும் கேதுவும் குரோதி ஆண்டில் எந்த ராசிக்காரர்களுக்கு அள்ளித்தரப்போகிறார்கள் என்று பார்க்கலாம்.

ராகு கேது: நவ கிரகங்களில் ராகுவும் கேதுவும் நிழல் கிரகங்கள் என்றாலும் மனிதர்களின் நல்லது கெட்டதுகளில் முக்கிய பங்கு வகிக்கின்றன. எந்த ஒரு நல்ல காரியம் செய்வதற்கு முன்பாக ராகு காலம் எமகண்டம் பார்த்துதான் செய்கின்றனர். ராகு ஆசைக்காரகன் அள்ளிக்கொடுப்பார். கேது ஞானத்தை கொடுப்பார். ராகுவும் கேதுவும் தந்தைக்காரகன் சூரியனுக்கும் தாய் காரகன் சந்திரனுக்கும் ஆகாத கிரகங்களாக இருக்கின்றன.

 Rahu Ketu Peyarchi palan 2024 : Rahu ketu travel Meenam and Kanni impact of 6 zodiac signs

கோடீஸ்வர யோகம்: ராகு கேது சாதகமாக இருந்தால் ஒருவருக்கு செல்வம் செல்வாக்கு எப்படி தேடி வருமோ அந்த அளவிற்கு ராகு கேது கிரகங்கள் சரியாக அமையாவிட்டால் செல்வம், செல்வாக்கு இழந்து அவமரியாதை ஏற்படும். ராகு கேது சாதகமாக இருப்பவர்களுக்குத்தான் லாட்டரியில் பணமும், திடீர் புதையலும் கிடைக்கும். ஒரு பிச்சைக்காரர்கூட திடீர் என கோடீஸ்வரராக மாறுவதும் கூட ராகுவினால்தான். கேது திடீர் ஞானத்தை கொடுத்து மோட்சத்திற்கு வழிகாட்டுவார்.
இந்த ராகு கேது பெயர்ச்சியால் எந்த ராசிக்காரர்களுக்கு என்ன பலன் என்ன பரிகாரம் செய்ய வேண்டும் என்று மின்னல் வேகத்தில் பார்க்கலாம்.


மேஷம்: ராகு விரைய ஸ்தானத்திலும் கேது ஆறாம் வீடான நோய் எதிரி சத்ரு ஸ்தானத்திலும் பயணம் செய்கின்றனர். குரோதி ஆண்டு முழுவதும் ராகு கேதுவின் பயணம் நிலையாக இருக்கிறது. சுபகாரியங்கள் திருமணம் சடங்கு கிரக பிரவேசம் போன்ற சுபகாரியங்கள் நடக்கும். சிலருக்கு வெளிநாட்டு பயணம்,தொழில் அமையும் வாய்ப்பை அமைத்துக்கொடுப்பார். சிலருக்கு புது வேலை வாய்ப்பு மற்றும் புது தொழில் அமையும். இதுநாள் வரை தொந்தரவு செய்த நோய்பிரச்சினை நீங்கும். போட்டி பொறாமை ஒழியும்.

ரிஷபம்: ராகு லாப ஸ்தானத்தில் பயணம் செய்வதால் எதிர்பாராத யோகத்தையும் திடீர் பண வரவையும் கொடுப்பார். போட்டி பொறாமைகளை ஒழிப்பார். எடுத்த காரியத்தை முடிக்கும் வரை ஓயமாட்டீர்கள். அடுத்தவர்களின் சூழ்ச்சியால் உங்களுக்கு வந்த பிரச்சனைகள் இனி தானாகவே மறைந்து விடும். மோட்ச காரகன் கேது பூர்வ பூண்ணிய ஸ்தமான 5ஆம் வீட்டில் பயணம் செய்வது யோகம் தான். காரிய வெற்றி உண்டாகும். புதிய முயற்சிகள் கை கூடும். சுப காரியங்கள் சந்தோஷமாக நடக்கும். இது வரை உங்களை தரக்குறைவாக நடத்தியவர்கள் எல்லாம் இனி உங்களை கண்டு மதிப்பு மரியாதை கொடுப்பார்கள். புதன்கிழமை ராகு காலத்தில் விளக்கேற்றி வழிபடுங்கள் நன்மைகள் அதிகரிக்கும்.

மிதுனம்: நீங்கள் எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும் காரியமும் வெற்றியை கொடுக்கும். தொழிலாளியாக இருந்த நீங்கள் முதலாளி ஆகும் யோகம் வரும். நினைத்த மாதிரி நல்ல வேலை வாய்ப்பு அமையலாம் சம்பள உயர்வும் வசதி வாய்ப்புகளும் தேடி வரும். சொந்த வீடு வாங்கும் யோகம் வரும், சுப காரியங்கள் நல்லமுறையில் கைகூடி வரும். கணவன் மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். கடன் பட்டு கலங்கி போனவர்களுக்கு இனி சிறிது சிறிதாக கடன் சுமை குறையும். இந்த ராகு கேது பெயர்ச்சி மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் தரும். திங்கட்கிழமை ராகு காலத்தில் துர்க்கைக்கு விளக்கேற்றி வழிபடுங்கள் நன்மைகள் நடைபெறும்.

கடகம்: ராகு 9ஆம் வீட்டில் பயணம் செய்வதால் வருமானம் திருப்தி தரும். செய்யும் தொழிலில் பார்க்கும் வேலைகளில் இடையூறு நீங்கும். மறைமுக எதிர்ப்புகள் விலகும். கேது மூன்றாம் வீட்டில் பயணம் செய்வதால் பிள்ளைகளுக்கு திருமணம் கைகூடி வரும், புத்திர பாக்கியத்திற்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி தேடி வரும். நிர்வாக பொறுப்புகள் தேடி வரும். நினைத்த காரியம் கைகூடி வரும். ஞாயிறு மாலை ராகு காலத்தில் கால பைரவரை வணங்குங்கள் நன்மைகள் நடைபெறும். பாதிப்புகள் குறையும்.

சிம்மம்: ராகு எதிர்ப்பாராத யோகத்தை கொடுப்பார். விபரீத ராஜயோகம் கிடைக்கும். பணம் பொன் பொருள் சேர்க்கை வீடு வாசல் போன்ற வசதிகளை தருவார். திருமணம் சுபகாரியம் நடைபெறும். சிலருக்கு இடமாற்றம், ஊர்மாற்றம் நேரலாம். சிலர் பிள்ளைகள் படிப்புக்கு ஊரை மாற்ற வேண்டியிருக்கும். 2ஆம் வீட்டில் கேது பயணம் செய்வதால் சொல்லும் செயலும் வெற்றி பெறும். வாழ்க்கையில் முன்னேற்றம் வரும். இந்த ராகு கேது பெயர்ச்சி மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் கொடுக்கும்.

கன்னி: உங்கள் ராசியில் கேது பயணம் செய்வதால் கௌரவம் புகழ் கீர்த்தி அந்தஸ்து கிடைக்கும். வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். புரமோசனும் சம்பள உயர்வும் தேடி வரும். வருமானம் திருப்தி தரும். உங்களின் தேவைகள் பூர்த்தியாகும். குடும்பத்தில் பிள்ளைகள் படிப்புக்கு செலவு செய்வீர்கள். களத்திரம் கூட்டு தொழில் ஸ்தானம் நண்பர்கள் ஸ்தானத்தில் ராகு பயணம் செய்வதால் கஷ்டங்கள் நீங்கி இனி தலை நிமிரலாம். கணவன் மனைவி இடையே இருந்த பிரச்சினைகள் நீங்கி ஒற்றுமை அதிகரிக்கும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+