ராகு கேது பெயர்ச்சி பலன் 2024: லோக்சபா தேர்தலில் வெற்றிக்கனியை ருசிக்கும் ராசிக்காரர்கள் யார்?
சென்னை: ராகு பகவான் மீன ராசியில் ரேவதி நட்சத்திரத்தில் பயணம் செய்கிறார். ஜூலை மாதம் வரைக்கும் ரேவதி நட்சத்திரத்தில் பயணம் செய்யும் ராகு சில அரசியல்வாதிகளின் வாழ்க்கையில் அதிரடி மாற்றங்களை ஏற்படுத்தப்போகிறது. ராகுவின் பயணம் 2024ஆம் ஆண்டு லோக்சபா தேர்தலில் போட்டியிட யாருக்கு சீட் பெற்றுக்கொடுப்பார். வெற்றிக்கனியை ருசிக்கப்போவது யார் என்று பார்க்கலாம்.
துலாம்: ராகுவும் கேதுவும் விபரீத ராஜயோகத்தை தரப்போகின்றனர். உங்களின் மன உறுதி அதிகரிக்கும் வெற்றிகோட்டையை எட்டிப்பிடிக்கப்போகிறீர்கள். பொருளாதாரரீதியாக பலம் பெறுவீர்கள். புதிய பொறுப்புகளும் பதவிகளும் தேடி வரப்போகிறது. கடமையை கண்ணாக செய்தாலே மக்கள் செல்வாக்குடன் அதிகார பலமும் தேடி வரும். அரசியல்வாதிகளுக்கு தலைமையின் ஆதரவு கிடைக்கும். பல முயற்சிகளுக்குப் பிறகு வெற்றிகளை ருசிப்பீர்கள்.

விருச்சிகம்: பூர்வ புண்ணிய ஸ்தானமான 5ஆம் வீட்டில் ராகு பகவான் பயணம் செய்கிறார். அரசியல்வாதிகள் மக்களிடமும் பொது இடங்களிலும் பேசும் வார்த்தைகளில் கவனமாகவும் நிதானமாகவும் இருப்பது நல்லது. பண விவகாரங்களில் கவனம் தேவை. மரியாதைக்கு பங்கம் வரலாம் கவனம் தேவை. கட்சித்தலைமையிடம் மனம் விட்டு பேசுவது நல்லது. கருத்து வேற்றுமை ஏற்படாமல் தடுக்கும். இந்த தேர்தலில் உங்களின் திறமை பளிச்சிடும். அரசியலில் உள்ளவர்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும். பொது மேடைகளில் எச்சரிக்கையாக பேசுவது நல்லது.
தனுசு: குரு பகவானை ராசி நாதனாகக் கொண்ட தனுசு ராசிக்காரர்களுக்கு உங்கள் ராசிநாதன் அருள் பார்வை உங்களுக்கு கிடைக்கிறது. நான்காம் வீடான சுக ஸ்தானத்தில் ராகு பயணம் செய்வதால் உங்களுடைய வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்படப்போகிறது. அரசியல்வாதிகளின் வாக்கு வன்மை அதிகரிக்கும். சொன்ன சொல்லை காப்பாற்றுவார்கள். மக்கள் செல்வாக்கு அதிகரிக்கும். தேவையற்ற வீண் பேச்சுக்களை தவிர்த்தால் வெற்றிகளை வசமாக்கலாம். இல்லாவிட்டால் பெயருக்கும் புகழுக்கும் களங்கம் உண்டாகும். கட்சித்தலைமையின் ஆதரவினால் உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். வெற்றிகளை ருசிப்பீர்கள்.
மகரம்: ராகு கேது பெயர்ச்சி உங்களுடைய முயற்சிகளில் வெற்றியை தேடித்தரப்போகிறது. கேது பகவான் உங்கள் ராசிக்கு பாக்ய ஸ்தானத்திற்கு மாறுவதால் நிறைய நன்மைகள் நடைபெறப்போகிறது. ஆன்மீக பயணங்கள் அதிகரிக்கும். தொட்டதெல்லாம் பொன்னாகும். பல வழிகளில் இருந்தும் பணம் வரும். தேர்தல் காலம் நெருங்குவதால் வேலைப்பளு அதிகரிக்கும். நெருக்கடிகளை எளிதில் சமாளிக்கும் தெம்பும் தைரியமும் கிடைக்கும். ராகு பகவானும் குருபகவானும் உங்களுக்கு வெற்றிகளை தேடித்தரப்போகிறார்கள்.
கும்பம்: சனி பகவானை ராசி நாதனாகக் கொண்ட கும்ப ராசிக்காரர்களுக்கு ராகுபகவானை மிகப்பெரிய முன்னேற்றத்தை தரப்போகிறார். போட்டிகளை எளிதில் சமாளிப்பீர்கள். எதிரிகளை தூசு தட்டுவீர்கள். அரசியலில் ஆழம் பார்த்தவர்கள் நீங்கள் எதையும் அனுசரித்து சென்று வெற்றிகளை குவிப்பீர்கள். பண விவகாரங்களில் விழிப்புணர்வுடன் இருப்பது நல்லது. சுறுசுறுப்பாகவும் விறுவிறுப்பாகவும் பணிகளை செய்து கட்சி தலைமையிடம் நல்ல பெயர் எடுப்பீர்கள். எதிர்பார்த்த பதவிகளை அடைவீர்கள். வீண் விவகாரங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது.
மீனம்: குரு பகவானை ராசி நாதனாகக் கொண்ட மீன ராசிக்காரர்களுக்கு உங்கள் ராசியில் ஜென்ம ராகுவாகவும், ஏழாம் வீட்டில் களத்திர கேதுவாகவும் பயணம் செய்வதால் எடுத்த முயற்சிகள் கைகூடும். கட்சி தலைமையிடம் நீங்கள் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பல வழிகளில் இருந்தும் பண வருமானம் வரும். பதவி உயர்வு தேடி வரும் கௌரவ பதவிகள் உங்களுக்கு கிடைக்கும். நெருக்கடிகளை முறியடிப்பீர்கள். காரியங்களில் வெற்றி காண்பீர்கள். துணிச்சலும் தைரியமும் அதிகரிக்கும். கட்சித்தலைமையிடம் நற்பெயர் சம்பாதிப்பீர்கள். மக்கள் செல்வாக்கு அதிகரிக்கும். லோக்சபா தேர்தலில் வெற்றிகளை கைவசப்படுத்தலாம்.












Click it and Unblock the Notifications