ராகு கேது பெயர்ச்சி பலன் 2024: கோடி கோடியாக தரும் கேது.. குரோதி ஆண்டில் அதிரடி மாற்றம் யாருக்கு?
சென்னை: நவ கிரகங்களில் ராகுவும் கேதுவும் சாயா கிரகங்கள் என்றாலும் மனிதர்களின் நல்லது கெட்டதுகளில் முக்கிய பங்கு வகிக்கின்றன. ராகு அள்ளிக்கொடுப்பார். கேது ஞானத்தை கொடுப்பார். ராகு மீன ராசியிலும் கேது கன்னி ராசியிலும் பயணம் செய்கின்றனர். குரோதி ஆண்டில் சனியின் நட்சத்திரமான உத்திரட்டாதியில் பயணம் செய்யப்போகும் ராகுவினாலும் செவ்வாய் பகவானின் அஸ்தம் நட்சத்திரத்தில் பயணம் செய்யும் கேதுவினாலும் எந்த ராசிக்காரர்களுக்கு என்ன பலன் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.
மேஷம்: ராகு பகவான் வரும் ஜூன் மாதம் முதல் சனியின் நட்சத்திரமான உத்திரட்டாதி நட்சத்திரத்திற்கு இடம் மாறப்போகிறார். வரும் ஜூன் 15 முதல் 2025ஆம் ஆண்டு பிப்ரவரி வரையிலான கால கட்டத்தில் சின்னச் சின்னக் குழப்பங்கள் வந்து நீங்கும். அனைத்து செயல்களிலும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். பார்க்கும் வேலைகளில் நிதானம் தேவை. கேட்ட இடங்களில் அதிகமாக கடன் கிடைக்கிறதே என்று வாங்கி குவிக்க வேண்டாம். சிலருக்கு புது வேலை வாய்ப்பு மற்றும் தொழிலைஅமையும். போட்டி பொறாமை ஒழியும். இதுநாள் வரை தொந்தரவு செய்த நோய்பிரச்சினை நீங்கும்.

ரிஷபம்: உங்கள் ராசிக்கு சாதகமான இடத்திற்கு ராகு கேது வந்திருக்கிறார்கள். லாப ஸ்தானத்தில் உள்ள ராகு சனியின் நட்சத்திரத்திற்கு மாறினாலும் எதிர்பாராத யோகத்தையும் திடீர் பண வரவையும் கொடுப்பார். மோட்ச காரகன் கேது பூர்வ பூண்ணிய ஸ்தமான 5ஆம் வீட்டில் செவ்வாயின் நட்சத்திரத்தில் பயணம் செய்யப்போவதும் யோகம் தான். குரோதி ஆண்டில் சுப காரியங்கள் சந்தோஷமாக நடைபெறும். சமூகத்தில் அந்தஸ்து உயரும் மதிப்பு மரியாதை கூடும்.
மிதுனம்: குரோதி ஆண்டில் நீங்கள் எடுக்கும் ஓவ்வொரு முயற்சியும் காரியமும் வெற்றியை கொடுக்கும். தொழிலாளியாக இருந்த நீங்கள் முதலாளி ஆகும் யோகம் வரும். கணவன் மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். சொந்த வீடு வாங்கும் யோகம் வரும், சுப காரியங்கள் நல்லமுறையில் கைகூடி வரும். கடன் சுமை குறையும். இந்த ராகு கேது பெயர்ச்சி மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் தரும்.
கடகம்: கடந்த காலங்களில் பல பிரச்சினைகளை சந்தித்த உங்களுக்கு குரோதி ஆண்டில் பாக்ய ஸ்தானத்தில் பயணம் செய்யும் ராகுவினால் செய்யும் தொழிலில் பார்க்கும் வேலைகளில் இடையூறு நீங்கும்.மறைமுக எதிர்ப்புகள் விலகும். கேது மூன்றாம் வீட்டில் பயணம் செய்வதால் பிள்ளைகளுக்கு திருமணம் கைகூடி வரும். திருமணமான தம்பதியினருக்கு நல்ல செய்தி தேடி வரும். நிர்வாக பொறுப்புகள் தேடி வரும். நினைத்த காரியம் கைகூடி வரும்.
சிம்மம்: குரோதி ஆண்டில் ராகுவும் கேதுவும் யோகத்தையும் பெருமை புகழையும் தரப்போகிறது. ராகு பகவான் எதிர்ப்பாராத பணம் பொன் பொருள் சேர்க்கை வீடு வாசல் போன்ற வசதிகளை தருவார். கடன் பிரச்சினைகள் நீங்கும். 2 ஆம் வீட்டில் பயணம் செய்யும் கேது பகவானால் சொல்லும் செயலும் வெற்றி பெறும். உங்க முயற்சி தன்னம்பிக்கை மூலம் தான் வாழ்க்கையில் முன்னேற்றம் வரும்.
சிலருக்கு இடமாற்றம்,ஊர்மாற்றம் நேரலாம். சிலர் வீட்டுக்கு மேல் வீடு கட்டும் வாய்ப்பு வரும்.
கன்னி: உங்கள் ராசியில் கேதுவும் 7 ஆம் இடத்தில் ராகுவும் பயணம் செய்கின்றனர். களத்திரம் கூட்டு தொழில் ஸ்தானம் நண்பர்கள் ஸ்தானத்தில் ராகு பயணம் செய்வதால் கணவன் மனைவி இடையே இருந்த பிரச்சினைகள் நீங்கி ஓன்று சேரலாம். கௌரவம் புகழ் கீர்த்தி அந்தஸ்து அதிகரிக்கும். வேலை இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு புரமோசன் கிடைக்கும் வருமானம் அதிகரிக்கும். உங்களின் தேவைகள் பூர்த்தியாகும். குரோதி ஆண்டில் குபேர யோகம் தேடி வரப்போகிறது.












Click it and Unblock the Notifications