Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ராகு கேது பெயர்ச்சி பலன் 2024: அள்ளித்தரப்போகும் ராகு.. குரோதி ஆண்டு கோடீஸ்வரன் ஆவது யார்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: ராகு மீன ராசியிலும் கேது கன்னி ராசியிலும் பயணம் செய்கின்றனர். குரோதி ஆண்டில் சனியின் நட்சத்திரமான உத்திரட்டாதியில் பயணம் செய்யப்போகும் ராகுவினாலும் செவ்வாய் பகவானின் அஸ்தம் நட்சத்திரத்தில் பயணம் செய்யும் கேதுவினாலும் எந்த ராசிக்காரர்களுக்கு என்ன பலன் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம். நவ கிரகங்களில் ராகுவும் கேதுவும் சாயா கிரகங்கள் என்றாலும் மனிதர்களின் நல்லது கெட்டதுகளில் முக்கிய பங்கு வகிக்கின்றன. நட்சத்திர பெயர்ச்சியால் துலாம், விருச்சிகம், தனுசு, மகரம், கும்பம்,மீனம் ஆகிய ராசிகளில் பிறந்தவர்களுக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்று பார்க்கலாம்.

துலாம்: உங்கள் ராசிக்கு விரைய ஸ்தானமான 12 ஆம் பாவத்தில் கேது 6ஆம் பாவத்தில் ராகு பயணம் செய்கின்றனர். உங்களை வாட்டி வதைத்த பிரச்சினைகள் நீங்கும். இனி பிரச்சினைகள் தீரப்போகிறது. எதிரி போட்டி பொறாமை கடன் வைத்தியசெலவு,ஆகிய ஸ்தானத்தில் ராகு வருவதால் கடன்கள் அடைப்படும் தீராத நோய் தீரும். தொழில் முயற்சிகள் கை கூடும்.படித்து முடித்து வேலை தேடுபவர்களுக்கு நல்ல வேலை அமையும். திருமணம் கை கூடி வரும் திருமணமானவர்களுக்கு புத்திர பாக்கியம் கை கூடி வரும். செவ்வாய்கிழமை ராகு காலத்தில் விளக்கேற்றி வழிபடுங்கள். நீண்ட நாள் பட்ட கடன்களும் அடைபடும்.

Rahu ketu peyarchi palan 2024 Tamil: Krodhi Tamil New year Thulam to Meenam

விருச்சிகம்: ராகு 5ஆம் வீட்டிலும் கேது 11 ஆம் வீட்டிலும் பயணம் செய்கின்றனர். குரோதி ஆண்டு முழுவதும் உங்களுக்கு நிம்மதியும் சந்தோஷமும் அதிகரிக்கும். கேது லாப ஸ்தானத்தில் பயணம் செய்வதால் தொட்டது துலங்கும். தேவையற்ற செலவுகள் குறையும். அசையா சொத்துகள் வாங்கலாம் வீடு மனை வாங்கும் யோகம் தேடி வரும். 18 வருஷத்துக்கு பிறகு 5ம் இடத்தில் பயணம் செய்யும் ராகுவினால் முன்னோர் வகையில் உள்ள தோஷம் நீங்கி சுகம் பெறலாம். வியாழக்கிழமை ராகுகாலத்தில் விளக்கேற்றி வழிபட நன்மைகள் நடைபெறும்.

தனுசு: குரு பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட தனுசு ராசிக்காரர்களே நான்காம் வீட்டில் பயணம் செய்யும் ராகுவின் இட மாற்றத்தினால் தடைப்பட்ட சுப காரியங்கள் குரோதி ஆண்டில் வெற்றிகரமாக நிறைவேறும். பூமி வீடு வாகனம் வாங்கும் யோகம் கிடைக்கும். பழைய கடன்கள் அடைப்படும். வரவுகள் அதிகரிக்கும் சேமிப்பும் உயரும். தொழில் வியாபாரம் முன்னேற்றம் உண்டாகும். புதிய வேலை வாய்ப்புகள் தேடி வரும். பதவியில் இருப்பவர்களுக்கு புரமோசன் கிடைக்கும்.

மகரம்: சனி பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மகர ராசிக்காரர்களே குரோதி ஆண்டு முழுவதும் ராகு உங்களுக்கு யோகத்தை வாரி வழங்க போகிறார். தைரியத்துடனும் புது தெம்புடனும் வாழ்க்கையை எதிர்கொள்வீர்கள். செல்வ செழிப்பான வாழ்க்கை அமையும். புது முயற்சிகள் யாவும் வெற்றி பெறும்.தேவைகள் பூர்த்தியாகும். குடும்பத்தில் நீண்ட நாட்களாக இருந்த பிரச்சனைகள் தீரும். கும்பிட போன தெய்வம் குறுக்கே வந்த மாதிரி பெரியவர்கள் தானாக நாடி வந்து உதவி செய்வார்கள். வீட்டில் மகிழ்ச்சியும் நிம்மதியும் அதிகரிக்கும்.

கும்பம்: குரோதி ஆண்டில் உங்களுக்கு திடீர் பணவருமானம் வரும் திடீர் அதிர்ஷ்டங்கள் தேடி வரும். அதே நேரத்தில் சேமிக்க முடியவில்லையே என்ற வருத்தம் ஏற்படும் அளவிற்கு செலவுகளும் வரும். காரணம் ஜென்ம சனிதான். ராகு இரண்டாம் வீட்டில் பயணம் செய்வதால் வாக்கு கொடுக்காதீர்கள். ஜூன் மாதம் முதல் வீட்டிலும் வெளியிலும் காரசார விவாதங்களை தவிர்த்து விடுங்கள்.

மீனம்: ஜென்ம ராகு, ஏழாம் வீட்டில் கேது 2025ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரைக்கும் உங்க ராசியில் சஞ்சரிப்பார்கள். திடீர் பணவருமானம் வரும் செல்வம் செல்வாக்கு அதிகரிக்கும். வேலையில் திடீர் இடமாற்றம் வரலாம். திடீர் செலவுகள் வரும். சிலருக்கு கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை வரும். மாணவர்களுக்கு உயர்கல்வி யோகம் தேடி வரும். எந்த வேலையிலும் கவனமாகவும் விழிப்புணர்வோடும் இருப்பது நல்லது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+