தனுசு ராசிக்கு இனி அரசு வளர்ச்சி.. தங்கத்தை குவிக்கும் யோகம்.. 3 கிரகங்களால் வேற லெவல் அதிர்ஷ்டம்

Subscribe to Oneindia Tamil

ராகு கேது பெயர்ச்சி: ராகு கேது பெயர்ச்சி வாக்கியத்தின்படி ஏப்ரல் 26 ஆம் தேதியும், திருக்கணிதத்தின்படி மே 18 ஆம் தேதியும் நடைபெறவுள்ளது. இந்த ராகு கேது பெயர்ச்சியில் தனுசு ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

ராகு கேது என்பது நிழல் கிரகம், சர்ப்ப கிரகம் என்று அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களுடைய இடங்களை மாற்றுவது வழக்கம். இந்த ஆண்டின் சிறப்பாக சனி குரு ராகு கேது கிரகங்களின் பெயர்ச்சி ஒரே ஆண்டில் நடைபெறுகிறது. ராகு மற்றும் கேது என்பது நிழல் கிரங்களாகும். சந்திரன் மற்றும் சூரியனால் கிரகணம் ஏற்படும் போது உருவாகும் நிழல் கிரகங்கள்தான் ராகு கேது.

rahu-ketu-peyarchi-palan-lets-learn-about-the-benefits-of-rahu-ketu-transit-for-dhanusu-rasi-peopl

திருக்கணிதத்தின்படி 2025 ஆம் ஆண்டு மே 18 ஆம் தேதி ராகு கேது பெயர்ச்சி நடக்கிறது. வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி ஏப்ரல் 26 ஆம் தேதி நடைபெறவுள்ளது. மீனம் ராசியில் இருந்து ராகு பகவான் கும்பத்துக்கும், கன்னியில் இருந்து கேது பகவான் சிம்மத்துக்கும் போகிறார்.

ராகு கேது பெயர்ச்சியால் சில ராசிக்காரர்களுக்கு நற்பலன்களும், சில ராசியினருக்கு கெடு பலன்களும் கிடைக்கப் போகின்றன. அந்த வகையில், இந்த ராகு கேது பெயர்ச்சியில் தனுசு ராசியினருக்கு கிடைக்கப் போகும் பலன்கள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு 3 இல் ராகுவும், 9 இல் கேதுவும் இருக்கிறார். பெற்றோர், பெரியோர்களின் தேக ஆரோக்கியத்தில் மிகுந்த எச்சரிக்கையாக இருக்க வேண்டும். குலதெய்வத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து வழிபாடு செய்து வருவது நல்லது. நாமக்கல்லில் உள்ள ஆஞ்சநேயர் கோவில் மற்றும் நரசிம்மர் கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்வது விசேஷமான பலனைத் தரும். நரசிம்மருக்கு பானகத்துக்கு உண்டான வெல்லம், ஏலக்காய், சுக்கு வாங்கி மடப்பள்ளியில் தருவது அதிர்ஷ்டத்தை தரும்.

அசுர பலம்

3 இல் ராகு வந்தால் எல்லாவற்றிலும் ஜெயம் உண்டாகும். அசுர பலத்தைக் கொடுக்கும். 4 ஆம் இடத்தில் இருக்கக்கூடிய சனியை ஓரம்கட்டி 3 ஆம் இடத்தில் இருக்கும் ராகு அர்த்தாஷ்டம சனியில் சந்தோஷத்தை கொடுப்பார். நிறைய பயணங்கள் மேற்கொள்வீர்கள். தேக ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். வயிறு, அலர்ஜி சம்பந்தப்பட்ட விஷயத்தில் அதீத கவனம் தேவை.

உடற்பயிற்சி

தினந்தோறும் உடற்பயிற்சி மேற்கொள்வது நல்லது. மூம்ல, பூராடம் நட்சத்திரக்காரர்கள் தங்களை அழகுபடுத்திக் கொள்வது, உடலை திடப்படுத்திக் கொள்வது நல்லது. சுப காரியத்தில் இருந்து வந்த தடைகள் அனைத்தும் நிவர்த்தியாகும். எல்லாவிதத்திலும் அனுகூலம் உண்டாகும். அசையும் அசையா பொருள்கள் சேர்க்கை உண்டாகும்.

தங்கம் வாங்கும் யோகம்

லாபம் அதிகரிக்கும். நகைகளை வாங்கிக் குவிக்கும் யோகம் உண்டாகும். தைரியத்துடன் முன்னோக்கிச் செல்லக்கூடிய காலகட்டமாக இருக்கும். சமுதாயத்திலும், குடும்பத்திலும் கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். திடீர் அதிர்ஷ்டங்கள் உண்டாகும். திடீர் திருமண யோகம், புத்திர சந்தானம் உண்டாகும். மனதுக்குப் பிடித்த விஷயங்களை செய்வீர்கள், பிள்ளைகள் அனுகூலத்துடன் பெரிய படிப்புகளுக்குச் செல்வார்கள்.

இரட்டிப்பு வருமானம்

இரண்டு, மூன்று வருமானம் வரும் வகையில் உங்களுடைய வருமானம் அதிகரிக்கும். குரு பார்வை ராசி, லக்னத்தில் இருப்பதால் ஆரோக்கியத்தில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும். சனி பார்வையும் வந்துள்ளதால் வேலை விஷயம் இனி நிரந்தரமாக இருக்கும் என்ற தைரியம் ஏற்படும். நீங்கள் செய்யும் காரியங்களில் எல்லாம் ஒரு வலிமை உண்டாகும்.

தடை நீங்கும்

மனதில் இருந்து வந்த பயங்கள் நீங்கும். 3 ஆம் இடத்தில் அசுர கிரகங்கள் இருப்பது நல்லது. அந்த வகையில் ராகு உங்களுக்கு 3 ஆம் இடத்துக்கு வந்துள்ளதால் நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பிள்ளைகளின் திருமணத் தடைகள் நீங்கும். உத்தியோக பிராப்தம் உண்டாகும்.

பேச்சில் கவனம்

குடும்பத்தில் துணையுடன் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தினரிடம் துணையை விட்டுக் கொடுக்காமல் இருப்பது நல்லது. விளையாட்டுக்காக பேசுவது கூட தேவையில்லாத பிரச்சனைகளை உண்டாக்கும். இந்த ராகு கேதுவில் பேச்சில் மட்டும் கவனமாக இருக்க வேண்டும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+