கன்னி ராசியினருக்கு தொட்டதெல்லாம் துலங்கும்.. அதிர்ஷ்ட தேவதை கதவை தட்டும்.. பண மழைதான்

Subscribe to Oneindia Tamil

ராகு கேது பெயர்ச்சி: ராகு கேது பெயர்ச்சி வாக்கியத்தின்படி ஏப்ரல் 26 ஆம் தேதியும், திருக்கணிதத்தின்படி மே 18 ஆம் தேதியும் நடைபெறவுள்ளது. இந்த ராகு கேது பெயர்ச்சியில் சிம்ம ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

ராகு கேது என்பது நிழல் கிரகம், சர்ப்ப கிரகம் என்று அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களுடைய இடங்களை மாற்றுவது வழக்கம். இந்த ஆண்டின் சிறப்பாக சனி குரு ராகு கேது கிரகங்களின் பெயர்ச்சி ஒரே ஆண்டில் நடைபெறுகிறது. ராகு மற்றும் கேது என்பது நிழல் கிரங்களாகும். சந்திரன் மற்றும் சூரியனால் கிரகணம் ஏற்படும் போது உருவாகும் நிழல் கிரகங்கள்தான் ராகு கேது.

Rahu ketu peyarchi Kanni Astrology

திருக்கணிதத்தின்படி 2025 ஆம் ஆண்டு மே 18 ஆம் தேதி ராகு கேது பெயர்ச்சி நடக்கிறது. வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி ஏப்ரல் 26 ஆம் தேதி நடைபெறவுள்ளது. மீன ராசியில் இருந்து ராகு பகவான் கும்பத்துக்கும், கன்னியில் இருந்து கேது பகவான் சிம்மத்துக்கும் போகிறார்.

ராகு கேது பெயர்ச்சியால் சில ராசிக்காரர்களுக்கு நற்பலன்களும், சில ராசியினருக்கு கெடு பலன்களும் கிடைக்கப் போகின்றன. அந்த வகையில், இந்த ராகு கேது பெயர்ச்சியில் சிம்ம ராசியினருக்கு கிடைக்கப் போகும் பலன்கள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு 6 இல் ராகு இருக்கிறார். ஜென்மத்தில் இருந்து கேது விலகி 12 இல் போகிறார். அருமையான காலகட்டமாக இருக்கும். எல்லா விஷயத்திலும் ஏற்றம் காணும் யோகம் உண்டாகும். முதுகுத் தண்டுவடம், கழுத்துப் பகுதி, காது மூக்கு, தொண்டை பிரச்சனைகள் ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. அதில் மட்டும் அதிகமான எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

எடுத்த காரியம் சக்சஸ்

திருச்செந்தூருக்குச் சென்று முருகனை வழிபடுவது நல்ல பலன்களைத் தரும். கோபுர தரிசனமாவது செய்வது நல்லது. குடும்பத்தில் கோப தாபங்களைத் தவிர்ப்பது நல்லது. உள்ளூர் பயணம், வெளியூர் பயணம், கடல் கடந்த பயணம் மேற்கொள்வீர்கள். கடல் கடந்த வியாபாரம், தொழில், டிரேடிங், பிரான்சைஸ் எடுப்பது போன்றவற்றுக்கு நல்லதொரு காலகட்டமாக இருக்கும்.

மாற்றம், முன்னேற்றம்

தொழில் மாற்றம், கல்வி மாற்றம், வியாபார மாற்றம், உத்தியோக மாற்றம் என அனைத்து மாற்றங்களையும் செய்யலாம். எந்தவொரு மாற்றங்களைச் செய்தாலும் அதில் வெற்றி காண்பீர்கள். தொட்டதெல்லாம் துலங்கக் கூடிய காலகட்டமாக இருக்கும். காதல் அமைப்பில் மற்றவர்களை நம்பினால் ஏமாறுவது நிச்சயம். அடுத்தவர் தலையீட்டை தவிர்ப்பது மிகவும் நல்லது. குடும்பத்தில் துணையின் தேக ஆரோக்கியத்தை கவனமாக பார்த்துக் கொள்ள வேண்டும்.

அனுகூலம், அதிர்ஷ்டம்

குடும்பத்தில் சில பாதிப்புகளைச் சந்திக்கும் காலகட்டமாக இருக்கும். ஆனாலும், அதிர்ஷ்டத்துக்கும், அனுகூலத்துக்கும் குறைவிருக்காது. அரசுத் துறையினர், அரசியல்வாதிகள், சினிமா துறையினர், கலைத் துறையினர், படைப்பாளிகளுக்கு அனுகூலம் உண்டாகும். எடுத்த காரியங்கள் அனைத்திலும் வெற்றியைக் காண்பீர்கள். பண வரவுக்குப் பஞ்சம் இருக்காது. தொழில், வியாபாரம் என அனைத்திலும் வெற்றியைக் காண்பீர்கள். உங்கள் குடும்பத்தில் பிறரின் தலையீடு, மற்றவர்கள் குடும்பத்தில் உங்கள் தலையீட்டைத் தவிர்ப்பது நல்லது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+