மகர ராசிக்கு அதிர்ஷ்ட தேவதை அள்ளிக் கொடுக்கும்.. வாய்க்கு பூட்டுப் போடுவது ரொம்ப முக்கியம்

Subscribe to Oneindia Tamil

ராகு கேது பெயர்ச்சி: ராகு கேது பெயர்ச்சி வாக்கியத்தின்படி ஏப்ரல் 26 ஆம் தேதியும், திருக்கணிதத்தின்படி மே 18 ஆம் தேதியும் நடைபெறவுள்ளது. இந்த ராகு கேது பெயர்ச்சியில் மகர ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

ராகு கேது என்பது நிழல் கிரகம், சர்ப்ப கிரகம் என்று அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களுடைய இடங்களை மாற்றுவது வழக்கம். இந்த ஆண்டின் சிறப்பாக சனி குரு ராகு கேது கிரகங்களின் பெயர்ச்சி ஒரே ஆண்டில் நடைபெறுகிறது. ராகு மற்றும் கேது என்பது நிழல் கிரங்களாகும். சந்திரன் மற்றும் சூரியனால் கிரகணம் ஏற்படும் போது உருவாகும் நிழல் கிரகங்கள்தான் ராகு கேது.

rahu-ketu-peyarchi-palan-lets-learn-about-the-benefits-of-rahu-ketu-transit-for-magaram-rasi-peopl

திருக்கணிதத்தின்படி 2025 ஆம் ஆண்டு மே 18 ஆம் தேதி ராகு கேது பெயர்ச்சி நடக்கிறது. வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி ஏப்ரல் 26 ஆம் தேதி நடைபெறவுள்ளது. மீனம் ராசியில் இருந்து ராகு பகவான் கும்பத்துக்கும், கன்னியில் இருந்து கேது பகவான் சிம்மத்துக்கும் போகிறார்.

ராகு கேது பெயர்ச்சியால் சில ராசிக்காரர்களுக்கு நற்பலன்களும், சில ராசியினருக்கு கெடு பலன்களும் கிடைக்கப் போகின்றன. அந்த வகையில், இந்த ராகு கேது பெயர்ச்சியில் மகர ராசியினருக்கு கிடைக்கப் போகும் பலன்கள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.

மகரம்

மகர ராசிக்காரர்களுக்கு 2 இல் ராகு, 8 இல் கேது இருக்கிறார். வண்டி வாகனங்களில் செல்லும்போது கவனமாக இருக்க வேண்டும். நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சனை, ரத்த அழுத்தம், குறைந்த ரத்த அழுத்தம், முதுகு, தலைவலி சம்பந்தப்பட்ட விஷயங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். குருவாயூர் செல்வது நல்ல பலன்களைத் தரும். குருவாயூருக்கு துலாபாரத்தில் நீங்கள் விரும்பிய பொருள்களை கொடுத்து, அபிஷேக சந்தனம், கலாப சந்தானம், கோவண துண்டு ஆகியவற்றை வாங்கி வந்து பூஜையறையில் வைத்து விளக்கேற்றுவது அதீத நன்மையைத் தரும்.

பேச்சில் கவனம்

வாக்கு ஸ்தானத்தில் ராகு இருக்கிறார். பேசும் வார்த்தையில் கவனமாக இருக்க வேண்டும். கெட்ட வார்த்தை பேசுவதை தவிர்ப்பது நல்லது. பேச்சை கட்டுப்படுத்தி அமைதியாக இருப்பது நன்மையைத் தரும். 3 இல் சனி இருக்கும் நிலையில், ராகு கேது பெயர்ச்சி நடைபெறுவதால் தேக ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். தொழிலே இல்லை என்று புலம்பியவர்களுக்கு இனி தொழில் தொடங்கும் யோகம் உண்டாகும்.

தொழில் சூப்பர்

100 பேருக்கு வேலை கொடுக்கும் அளவுக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் காண்பீர்கள். தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு என அனைத்து விஷயங்களிலும் ஏற்றம் பெறுவீர்கள். ஜீவனஸ்தானம் வளம் பெறக்கூடிய அமைப்பு உண்டாகும். சுப விரைய பிராப்தம் உண்டாகும். அசையும் அசையா பொருள்கள் சேர்க்கை உண்டாகும். பெரிய அளவில் முதலீடுகள் கிடைக்கும்.

பண வரவு அதிகரிக்கும்

இரண்டாம் இடத்தில் ராகு அமருவதால் பணம் கொட்டும். அதிர்ஷ்டமான காலகட்டமாக இருக்கும். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றத்தையும், வளர்ச்சியையும் காண்பீர்கள். குடும்பத்தில் சண்டை போட்டாலும் உங்களுக்கு சாதகமான சூழல் ஏற்படும். குரு பார்வை இருப்பதால் குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும்.

நிறைய பேர் புது கண்ணாடி போடும் யோகம் உண்டாகும். இதனால் நல்ல மாற்றம் உண்டாகும். சிலர் பற்களை அழகுபடுத்திக் கொள்வார்கள். லென்ஸ் கரெக்ஷன், விட்டமின் குறைபாடுகள் நீங்கும். குடும்பத்தில் பணத்திற்குப் பஞ்சம் இருக்காது.

தொட்டது ஹிட்டு

தொட்டது துலங்கக்கூடிய காலகட்டமாக இருக்கும். கொடுத்த வாக்கை குடும்பத்திலும், சமுதாயத்திலும் காப்பாற்றுவீர்கள். 2 இல் ராகு 8 இல் கேது இருந்தாலும் திருமணத் தடைகளில் இருந்த தடைகள் அனைத்தும் நீங்கும். திருமணம், மறுமணம் நடக்கும் யோகம் உண்டாகும். கோளார் பதிகத்தை சொல்லி வர அற்புதமான அமைப்பு ராகு கேதுவில் உண்டாகும். காலசர்ப்ப தோஷம் நீங்கி யோகம் உண்டாகும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+