அடித்து ஆடும் துலாம் ராசியினர்.. இனிதான் ஆட்டம் ஆரம்பமே.. தொட்டதெல்லாம் பொன்னாகும்
ராகு கேது பெயர்ச்சி: ராகு கேது பெயர்ச்சி வாக்கியத்தின்படி ஏப்ரல் 26 ஆம் தேதியும், திருக்கணிதத்தின்படி மே 18 ஆம் தேதியும் நடைபெறவுள்ளது. இந்த ராகு கேது பெயர்ச்சியில் துலாம் ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.
ராகு கேது என்பது நிழல் கிரகம், சர்ப்ப கிரகம் என்று அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களுடைய இடங்களை மாற்றுவது வழக்கம். இந்த ஆண்டின் சிறப்பாக சனி குரு ராகு கேது கிரகங்களின் பெயர்ச்சி ஒரே ஆண்டில் நடைபெறுகிறது. ராகு மற்றும் கேது என்பது நிழல் கிரங்களாகும். சந்திரன் மற்றும் சூரியனால் கிரகணம் ஏற்படும் போது உருவாகும் நிழல் கிரகங்கள்தான் ராகு கேது.

திருக்கணிதத்தின்படி 2025 ஆம் ஆண்டு மே 18 ஆம் தேதி ராகு கேது பெயர்ச்சி நடக்கிறது. வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி ஏப்ரல் 26 ஆம் தேதி நடைபெறவுள்ளது. மீன ராசியில் இருந்து ராகு பகவான் கும்பத்துக்கும், கன்னியில் இருந்து கேது பகவான் சிம்மத்துக்கும் போகிறார்.
ராகு கேது பெயர்ச்சியால் சில ராசிக்காரர்களுக்கு நற்பலன்களும், சில ராசியினருக்கு கெடு பலன்களும் கிடைக்கப் போகின்றன. அந்த வகையில், இந்த ராகு கேது பெயர்ச்சியில் துலாம் ராசியினருக்கு கிடைக்கப் போகும் பலன்கள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு வயிறு, அலர்ஜி சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிகுந்த கவனம் தேவை. திருக்கடையூர் சென்று மார்க்கண்டேயர் சந்நிதானம், காலபைரவர் சந்நிதானத்தில் இருக்கக்கூடிய மகா மித்ருஞ்ஜெய் எந்திரத்தை தீபம் காட்டுவதை பார்ப்பது விசேஷமான அமைப்பை ஏற்படுத்தும். உங்கள் ராசிக்கு 5 இல் ராகு, 11 இல் கேது இருக்கிறார்.
உடற்பயிற்சி
அபிராமி அந்தாதியில் இருக்கும் 49, 50, 75 ஆவது பாடலை படிப்பது நல்லது. அல்லது கேட்பது அனுகூலத்தை தரும். எல்லா விஷயத்திலும் ஏற்றத்தைப் பெறுவீர்கள். முதுகு பயிற்சி மேற்கொள்வது நல்லது. முதுகு பிரச்சனையை தவிர்ப்பது நன்மையைத் தரும். மற்றவர்களுக்கு ஆதரவு கொடுப்பீர்கள். உங்களை தாழ்த்திக் கொள்ளாதீர்கள்.
நம்பிக்கை
உங்களுக்கு நீங்களே மன வருத்தத்தை ஏற்படுத்திக் கொள்ளாதீர்கள். எப்பேர்பட்ட விஷயங்கள் வந்தாலும் அதில் ஜெயித்து காட்டக்கூடியவர்களாக இருப்பீர்கள். இந்த ராகு கேது பெயர்ச்சியில் யோக பலம், நம்பிக்கை, சந்தோஷம், மகிழ்ச்சி, அனுகூலத்தை அதிகமாகப் பெறக் கூடியவர்களாக இருப்பீர்கள். பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் பிள்ளைகள் விஷயத்தில் இது நடந்து விடுமோ, அது நடந்து விடுவோமோ என அச்சப்படத் தேவையில்லை. நல்லது மட்டுமே நடக்கும்.
அதிர்ஷ்டம்
5 ஆம் இடத்தில் குரு பார்வை இருப்பதால் அமோகமான வளர்ச்சியைக் காண்பீர்கள். பிள்ளைகளின் உத்தியோகம், தொழில், படிப்பு, வியாபாரம் எல்லா விஷயங்களும் அடுத்தடுத்து நடக்கும். தொழில் ரீதியாக இருந்த பெரிய கஷ்டங்கள் நீங்கும். பிரச்சனைகள் தீரும். ஆச்சரியத்தக்க முன்னேற்றம் ஏற்படும். துலாம் ராசியினருக்கு உத்தியோகத்தில் அதி அற்புதம் ஏற்படும்.
யோகமான காலம்
உத்யோகத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். மனதுக்கு பிடித்தபடியான பணியிட மாற்றம் உண்டாகும். உங்கள் திறமைக்கான அங்கீகாரம் கிடைக்கும். தொழிலில் சிக்கல்கள் விலகும். உங்களின் எதிரிகள், போட்டியாளர்கள் பொட்டி பாம்பாய் அடங்குவார்கள். தொழிலில் சிறப்பான முன்னேற்றம் இருக்கும் அற்புதமான காலமாக இருக்கும்.
பண வரவு கொட்டும்
தொழிலில் நீங்களே எதிர்பாராத அளவுக்கான லாபம் நன்றாக இருக்கும். வருவாய் அதிகரிக்கும். சரியான முதலீடுகள் மூலம் சிறப்பான லாபம் இருக்கும். பொருளாதாரத்தில் மிகப்பெரிய ஏற்றம் உண்டு. ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும். உங்கள் மனதுக்கு பிடித்தபடி உயர்கல்வி வாய்ப்பு உருவாகும்.
சுபகாரியங்கள்
சுப காரியத்தில் இருந்து வந்த தடைகள் அனைத்தும் நீங்கும். தைரியம் உண்டாகும். நம்பிக்கை ஏற்படும். குடும்பத்தில் புதிய வரவுகள் உண்டாகும். அடுத்தடுத்து நல்ல விஷயங்கள் நடக்கும். வீடு, நிலம், மனை விற்பனை செய்யும் யோகம் உண்டாகும். அதன் மூலம் நல்ல லாபத்தைக் காண்பீர்கள்.












Click it and Unblock the Notifications