விருச்சிக ராசியின் ஆட்டம் ஆரம்பம்.. திடீர் அதிர்ஷ்டத்தால் சொல்ல முடியாத மகிழ்ச்சி.. பணம் கொட்டும்

Subscribe to Oneindia Tamil

ராகு கேது பெயர்ச்சி: ராகு கேது பெயர்ச்சி வாக்கியத்தின்படி ஏப்ரல் 26 ஆம் தேதியும், திருக்கணிதத்தின்படி மே 18 ஆம் தேதியும் நடைபெறவுள்ளது. இந்த ராகு கேது பெயர்ச்சியில் விருச்சிக ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

ராகு கேது என்பது நிழல் கிரகம், சர்ப்ப கிரகம் என்று அழைக்கப்படுகிறது. ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களுடைய இடங்களை மாற்றுவது வழக்கம். இந்த ஆண்டின் சிறப்பாக சனி குரு ராகு கேது கிரகங்களின் பெயர்ச்சி ஒரே ஆண்டில் நடைபெறுகிறது. ராகு மற்றும் கேது என்பது நிழல் கிரகங்களாகும். சந்திரன் மற்றும் சூரியனால் கிரகணம் ஏற்படும் போது உருவாகும் நிழல் கிரகங்கள்தான் ராகு கேது.

rahu-ketu-peyarchi-palan-lets-learn-about-the-benefits-of-rahu-ketu-transit-for-viruchigam-rasi-pe

திருக்கணிதத்தின்படி 2025 ஆம் ஆண்டு மே 18 ஆம் தேதி ராகு கேது பெயர்ச்சி நடக்கிறது. வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி ஏப்ரல் 26 ஆம் தேதி நடைபெறவுள்ளது. மீனம் ராசியில் இருந்து ராகு பகவான் கும்பத்துக்கும், கன்னியில் இருந்து கேது பகவான் சிம்மத்துக்கும் போகிறார்.

ராகு கேது பெயர்ச்சியால் சில ராசிக்காரர்களுக்கு நற்பலன்களும், சில ராசியினருக்கு கெடு பலன்களும் கிடைக்கப் போகின்றன. அந்த வகையில், இந்த ராகு கேது பெயர்ச்சியில் விருச்சிக ராசியினருக்கு கிடைக்கப் போகும் பலன்கள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.

விருச்சிகம்

விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு 4 இல் ராகு, 10 இல் கேது இருக்கிறார். வைத்தீஸ்வரன் கோயிலுக்குச் செல்வது, அங்கு கோயிலில் சிறப்பு பூஜைகளில் கலந்துகொள்வது நல்ல பலன்களைத் தரும். ரத்தத்தில் பரவக்கூடிய தொற்று நோய்கள், பரம்பரையாக இருக்கக்கூடிய நோய்கள், சர்க்கரை, ரத்த அழுத்தம், கொழுப்பு, குடல் பிரச்சனை, கிட்னியில் பிரச்சனை இருப்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும். இதய பாதிப்பிற்காக மருந்து மாத்திரைகள் எடுத்துக் கொள்பவர்கள் ஆவசேப்படுதைத் தவிர்ப்பது நல்லது.

தொழில்

தொழில் 10 இல் இருந்தாலும், கேது 10 இல் இருந்தாலும் தொழில் சாரத்தில் இருந்து வந்த அனைத்து பிரச்சனைகளும் நிவர்த்தியாகும். சக ஊழியர்கள், தோழர்கள், ரத்த பந்த உறவுகள், உடனிருப்பவர்களிடம் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. தாய் வழி, தந்தை வழி உறவில் கவனமாக இருக்க வேண்டும். அபிராமி அந்தாதியில் இருக்கும் 40, 59, 75 ஆவது பாடலை படிப்பதோ, கேட்பதோ அற்புதமான பலன்களைத் தரும்.

அதிர்ஷ்டம்

திடீர் அதிர்ஷ்டம் உண்டாகும். சமுதாயத்தில், குடும்பத்தில் உங்களுடைய வார்த்தைக்கு மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். சுப விரைய பிராப்தம் உண்டாகும். நிலம், வீடு, மனை, முதலீடுகள், தொழில் சம்பந்தப்பட்ட விஷயங்களில் ஏற்றம் உண்டாகும். முன்னேற்றம், வளர்ச்சி மிகுந்த காலகட்டமாக இருக்கும். நீண்ட நாட்களாக இருந்த தடைகள் எல்லாம் தவிடு பொடியாக்கும். இனி அதிர்ஷ்டங்கள் உண்டாகும்.

யோகம்

தென்மேற்கு மூளையில் பீரோ வைத்துக் கொள்வது, அதில் பணத்தை சேமித்து வைப்பது நல்ல பலன்களைத் தரும். அடுத்த ஒரு வருடத்துக்கு பணம் அதிகளவில் வரும். சுக ஸ்தானம் என்பது வீடு மட்டுமல்ல காளை மாடு, பசு மாடு வாங்குவது, சோப செட், நல்ல மெத்தைகள் வாங்கும் யோகம் உண்டாகும். எந்த துறையில் இருந்தாலும் அருமையான காலகட்டமாக இருக்கும்.

பண வரவு அதிகரிக்கும்

குரு பார்ப்பதால் நிறைய பணம் காசுகள் வந்து சேரும். பொருளாதாரத்தில் இதுவரை இருந்து வந்த நிலை எல்லாம் மாறும். யோகமான காலகட்டமாக இருக்கும். மார்புப் பகுதி பிரச்சனைகள் சரியாகும். மற்றபடி எந்த பாதிப்புகளும் இருக்காது. அமோகமான காலகட்டமாக இருக்கும். நினைத்தது நடக்கும். தொட்டதெல்லாம் பொன்னாகும் காலமாக இருக்கும்.

தியானம்

மன வருத்தம் தேவையில்லை. 4 இல் ராகு, 10 இல் கேது இருப்பதால் குழப்பம் வேண்டாம். தியானம் மேற்கொள்வது நல்லது. சந்திரன் நீச்சமாக இருப்பதால் திடீர் திடீரென மனம் வேறுவிதமாக சிந்திக்கும். யாருடைய பேச்சையும் நம்பாமல், கோபப்படாமல் மன நிலையை ஒருநிலைப்படுத்துவது நல்லது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+