ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2020 சிம்மம்: சிம்மம் ராசிக்கான ராகு - கேது பெயர்ச்சி பலன்கள்
சிம்மம் ராசிக்காரர்களுக்கு ராகு கேது பெயர்ச்சி பதவி மாற்றத்தையும், வேலை மாற்றத்தையும் இடமாற்றத்தையும் தரப்போகிறார்.
சென்னை: சிம்மம் ராசிக்காரர்களுக்கு பத்தாம் வீட்டிற்கு ராகு வருகிறார். கேது நான்காம் வீட்டிலும் சஞ்சரிக்கிறார்கள். சுக ஸ்தானத்தில் கேது வருவதால் உங்களுக்கு செவ்வாய் போல செயல்படுவார். நல்ல யோகத்தை கொடுப்பார். இது சுகமான ராஜயோகத்தை தரக்கூடிய ராகு கேது பெயர்ச்சியாக அமைந்துள்ளது. இந்த 18 மாதங்களும் நீங்கள் புகழ் மழையில் நனையப்போகிறீர்கள். இந்த ராகு கேது பெயர்ச்சியால் என்னென்ன
நன்மைகள் கிடைக்கப் போகிறது என்று பார்க்கலாம்.
சிம்மம் ராசிக்காரர்களுக்கு இந்த 18 மாதங்களில் இடமாற்றம் நடைபெறும். வேலை மாற்றம் ஊர் மாற்றம் நடைபெறும். நல்லது நிறைய நடைபெறும். நிலையான வேலை வருமானம் கிடைக்கும். எடுத்த காரியங்களில் வெற்றி கிடைக்கும்.
பத்தாம் வீட்டிற்கு ராகு வருகிறார். ராகு உங்களுக்கு சுக்கிரனைப் போல அள்ளிக்கொடுப்பார். குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். உங்களின் பேச்சிற்கு மதிப்பு மரியாதை கூடும். உத்யோகத்தில் வேலை செய்பவர்களின் உதவி கிடைக்கும்.

நன்மைகள் அதிகரிக்கும்
உங்களின் லட்சியத்தை அடைவதற்கான நேரம் நெருங்கி விட்டது. தொழில் தொடங்கும் யோகம் வருகிறது. வீடு வாங்குவீர்கள். புதிய இடம் வாங்கும் யோகமும் வருகிறது. குடும்பத்தில் சந்தோஷம் நிம்மதி ஏற்படும். பத்தில் ஒரு பாவி வருவது நல்லது என்பார்கள். ராகு பத்தில் வருவது பலம்.

திருமணம் கைகூடும்
கணவன் மனைவி பிரச்சினை நீங்கும். வீட்டில் சண்டை சச்சரவாக இருந்தது இனி குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும். கணவன் மனைவி ஒற்றுமை ஏற்படும். விட்டுக்கொடுத்து செல்வீர்கள். காதல் செய்பவர்களுக்கு திருமணம் நடைபெறுவதில் இருந்த தடைகள் நீங்கும். புத்திரபாக்கியம் கை கூடி வரும். பணவருமானம் அதிகரிக்கும். பூர்வீக சொத்துக்களில் இருந்த தடைகள் நீங்கும்.

புகழ் வெளிச்சத்தில் நனைவீர்கள்
பட்டம் பதவிகள் தேடி வரும். சிலர் சொந்த தொழில் செய்யும் யோகம் வரும். எதிர்பார்க்காத நேரத்தில் அதிர்ஷ்டம் வரும். புகழ், செல்வாக்கு அதிகரிக்கும். உங்களின் வாழ்க்கைத்தரம் உயரும். மாணவர்களுக்கு கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். வண்டி வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் இருந்த சிக்கல்கள் நீங்கி லாபம் கிடைக்கும்.

எச்சரிக்கை தேவை
உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருங்க. கால்வலி பிரச்சினைகள் வரலாம். அடி வயிறு பிரச்சினை வரும். எதிரிகள் தொல்லைகள் வந்தாலும் அதை பொடிப்பொடியாக்குவீர்கள். தேவையில்லாமல் கடன் வாங்காதீங்க. பெரிய அளவில் கடன் வாங்கி முயற்சி செய்யாதீங்க. ராகுவின் பார்வை எட்டாம் வீட்டின் மீது விழுகிறது. வேலை செய்யும் இடத்தில் எச்சரிக்கையாக நல்லது. வண்டி வாகனங்களில் போகும் போது கவனமாக போங்க.

பதவிகள் தேடி வரும்
சகோதர சகோதரிகளின் உதவி கிடைக்கும். பெண்களுக்கு நல்ல பதவி கிடைக்கும். அதிகாரம் தூள் பறக்கும். பொன் பொருள் சேர்க்கை ஏற்படும். அலுவலகத்தில் உயர்வு பதவி தேடி வரும். ராகுவின் பார்வை உங்க ராசிக்கு 12ஆம் வீட்டின் மீது விழுவதால் சுப விரைய செலவுகளும் அதிகரிக்கும். கேதுவின் பார்வை ஆறாம் வீட்டில் விழுவதால் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை. வெற்றிகள் தேடி வரும்.

சூரிய நமஸ்காரம் நன்மை
சிலருக்கு வேளைப்பளு அதிகரிக்கும். அலைச்சலும் அதிகரிக்கும். வீண் விரைய செலவுகள் இனி நீங்கும். ஆன்மீக வழிபாடு நன்மையை தரும். சிலருக்கு வெளிநாட்டு யோகவும் கை கூடி வரும். அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருங்க. தினசரி சூரிய நமஸ்காரம் பண்ணுங்க. சூரியனார் கோவில் போய்விட்டு வாங்க. திருநாகேஸ்வரம் போய் நாகநாதஸ்வாமியை தரிசனம் பண்ணுங்க. மங்கள ராகுவை தரிசனம் செய்யுங்க
நன்மைகள் அதிகரிக்கும். விநாயகர் வழிபாடு வெற்றியை தரும்.
-
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது -
புதிய தலைமுறை சேனல் நீக்க விவகாரம்: ஜனநாயக குரல்வளையை நெறிக்காதீர்கள்..விஜய் அரசுக்கு அதிமுக கண்டனம்












Click it and Unblock the Notifications