ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2020 விருச்சிகம்: விருச்சிகம் ராசிக்கான ராகு - கேது பெயர்ச்சி பலன்கள்
விருச்சிகம் ராசிக்காரர்களே இதுநாள் வரைக்கும் ஒருவித நெருக்கடிகளில் இருந்து வந்தீர்கள் இனி உங்களுக்கு இருந்த நெருக்கடிகள் நீங்கி மன நிம்மதி கிடைக்கும்.
சென்னை: விருச்சிகம் ராசிக்காரர்களுக்கு இந்த ராகு கேது பெயர்ச்சியால் மன குழப்பமும் நெருக்கடிகளும் நீங்கி நிம்மதியும் சந்தோஷமும் கிடைக்கப் போகிறது. ஏழரை சனி, ஜென்ம குரு, விரைய குரு, விரைய கேது என கடந்த கால கட்டங்களில் விருச்சிக ராசிக்காரர்கள் மிகப்பெரிய நெருக்கடிகளை சந்தித்து இருக்கிறீர்கள். நிறைய சோதனைகளை சந்தித்து நொந்து போயிருப்பீர்கள் இனி உங்களுக்கு இருந்த நெருக்கடிகள் நீங்கும் காலம் வந்து
விட்டது.
தொழில், வியாபாரம் வருமானம், உறவுகள் என அனைத்தையும் இழந்து இழப்பதற்கு இனி எதுவும் இல்லை என்ற நிலையில் வாழ்ந்த உங்களுக்கு இந்த ராகு கேது பெயர்ச்சி இனி மன நிம்மதியை தரப்போகிறது.
கடந்த காலங்களில் உங்களின் முயற்சிகளில் தடை தாமதங்கள் வந்து கொண்டு இருந்தது. சண்டை சச்சரவுகள் இருந்தது. நண்பர்கள் உறவினர்கள் கூட உங்களுக்கு எதிராக இருந்தனர். இதன் மூலம் உங்களுக்கு நல்ல படிப்பினை கிடைத்தது. இனி இனி உங்க வாழ்க்கையில் தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

குடும்பத்தில் ஒற்றுமை
திருமணம் நடைபெறுவதில் இருந்த தடைகள் நீங்கும். விவாகரத்து கேட்டு கோர்ட் படியேறியவர்கள் இனி மனம் திருந்தி ஒன்று சேருவார்கள். கணவன் மனைவி இடையே ஒற்றுமை அதிகரிக்கும். குழந்தைகளுக்காக தவம் இருப்பவர்களுக்கு புத்திரபாக்கியம் தேடி வரும். ராகு ஏழாம் வீட்டில் இருந்தாலும் அவர் நீசமடைந்திருப்பதால் உங்களுக்கு நல்ல யோகம்தான். கடந்த கால கட்டத்தில் கவலையோடு இருந்தீர்கள். காரணம் ஏழரை சனி உங்களை படாத பாடு எடுத்தி விட்டது. இனி வரும் காலங்களில் உங்களுக்கு நிறைய திருப்புமுனைகள் ஏற்படும். இனி வெற்றிகளை மட்டுமே ருசிக்கப் போகிறீர்கள்.

பதவி உயர்வு தேடி வரும்
பூர்வீக சொத்துக்கள் மூலம் லாபம் கிடைக்கும். அரசு வேலை, அரசியல்வாதிகளுக்கு இதுநாள் வரை இருந்த நெருக்கடிகள் நீங்கும். பேர் புகழ் கிடைக்கும். தனியார் துறையில் வேலை செய்பவர்களுக்கு புரமோசன் கிடைக்கும். எதிர்பார்க்காத பண வரவு வரும். கடன் சுமைகள் நீங்கும். நீங்க கொடுத்து நீண்ட நாட்களாக வராமல் இருந்த பணம் வரும்.

நெருக்கடிகள் நீங்கும்
கேது உங்க ராசியில் வந்து உச்சம் பெற்று அமர்ந்திருக்கிறார். இனி நெருக்கடிகள் நீங்கும். உங்க வாழ்க்கை உச்சமடையப்போகிறது. கேது உங்க ராசிநாதன் போல உங்களுக்கு வெற்றிகளை தருவார். மனதில் சந்தோஷத்தையும் சிந்தனையில் தெளிவையும் தருவார் ஞானகாரகன் கேது.

பரிகாரம் என்ன
இதுநாள் வரை விரைய ஸ்தானத்தில் சனி, கேது, குரு என சேர்ந்து உங்களுக்கு பல நெருக்கடிகளை கொடுத்து வந்தனர். இனி அந்த நெருக்கடிகள் எல்லாம் தீரப்போகிறது. இனி மன அழுத்தம் நீங்கும். உடல் ஆரோக்கியம் அற்புதமாக இருக்கும். திருச்செந்தூர் முருகனை செவ்வரளி மாலை சாற்றி வணங்கி வரலாம். கீழப்பெரும்பள்ளம் சென்று கேது பகவானை வணங்கி வரலாம். வாலாஜாபேட்டை தன்வந்திரி பீடத்தில் அருள்பாலிக்கும் ராகு கேது
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications