Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ராகு கேது பெயர்ச்சி பலன்கள் 2023 : அள்ளித்தரப்போகும் ராகு..அக்டோபருக்குப் பின் திடீர் லக் யாருக்கு?

Subscribe to Oneindia Tamil

சென்னை: நவ கிரகங்களில் சர்ப்ப கிரகங்களான ராகு கேது கிரகங்கள் ஒன்றரை ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைகின்றன. திருக்கணிதப்பஞ்சாங்கப்படி ராகு கேது கிரகங்கள் மேஷ ராசியில் இருந்து மீன ராசிக்கும் துலாம் ராசியில் இருந்து கன்னி ராசியிலும் இடப்பெயர்ச்சி அடையப்போகின்றன. அக்டோபர் மாதத்தில் தீபாவளிக்குப் பிறகு இந்த ராகு கேது பெயர்ச்சி நிகழப்போகிறது. இந்த கிரகப்பெயர்ச்சியால் மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு என்ன பலன் கிடைக்கப்போகிறது என்று பார்க்கலாம்.

ராகுவைப் போல கொடுப்பாரும் இல்லை கேதுவைப் போல கெடுப்பாரும் இல்லை என்பார்கள். யோகாதிபதி ராகுவும், மோட்சகாரகன் கேதுவும் நிழல் கிரகங்கள். ராகுபகவான் அள்ளிக்கொடுப்பார். கேது பகவான் கெடுக்க நினைப்பவர்களை கெடுப்பார். ராகு ஆசைக்கு காரகர், கேது மோட்சத்திற்கு காரகர் இவர்களுக்கு ராசி மண்டலத்தில் சொந்த ஆட்சி வீடு கிடையாது இவர்கள் யாருடைய வீட்டில் இருக்கின்றனரோ யாருடைய சாரத்தில் இருக்கிறார்களோ அதனுடைய பலனை செய்வார்கள். கன்னி ராசி அதிபதி புதன், கேது பகவான் புதன் பகவான் போல செயல்படுவார். தனுசு குருவின் வீட்டின் அதிபதி என்பதால் ராகு குரு பகவான் போல ஆன்மிகத்தையும் அளிப்பார்.

Rahu Ketu Peyarchi Rasipalangal 2019 Mesham Rasi Palangal and Parikarangal

"ஆமேடம் எருது சுறா நண்டு கன்னி ஐந்திடத்தில்
கருநாகம் அமர்ந்து நிற்கில்
பூமேடை தனில் துயிலும் ராஜயோகம் போற்றிடுவர்
வேறு இன்னும் புகலக் கேளாய்
ஏமாறாதே நான்கு கேந்திரத்தும்
இடைவிடாமற் கிரகம் இருந்தாகில்
தேமேவு பர்வதமா யோகமாகும்
சீமான் ஆகுவான் ராஜயோகஞ் செப்பே..." என்று தமிழ் ஜோதிட நூல்களில் மிகவும் சிறப்பு வாய்ந்த 'ஜாதக அலங்காரம்' ராகுவைப் பற்றி குறிப்பிடுகிறது.

மேஷ ராசிக்காரர்களே..இது வரை ராகு ஜென்ம ராசியிலும், கேது களத்திர பாவமான 7ம் வீட்டிலும் சஞ்சாரம் செய்தார்கள்.இப்பொழுது இடம் மாறி 12ம் இடத்தில் ராகுவும் 6ம் இடத்தில் கேதுவும் இடப்பெயர்ச்சி அடையப்போகின்றனர். "கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜ யோகம்" என்பதன் அடிப்படையில் இப்பொழுது கெட்ட இடத்திற்கு ராகு கேது வருவது நல்லது தான். சுபகாரியங்கள் திருமணம் சடங்கு கிரக பிரவேசம் போன்ற சுபகாரியங்கள் கை கூடி வரும். குழந்தைகளின் வாழ்க்கையிலும் திருமண யோகங்கள் வரப்போகிறது.

Rahu Ketu Peyarchi Rasipalangal 2019 Mesham Rasi Palangal and Parikarangal

மேஷ ராசிக்காரர்களே..உங்களுக்கு சனிப்பெயர்ச்சி, குரு பெயர்ச்சி என ராஜ கிரகங்களின் இடப்பெயர்ச்சி அற்புதமாக இருக்கும் இந்த சூழ்நிலையில் ராகு கேது பெயர்ச்சியும் அருமையாக அமையப்போகிறது. ஜென்ம ராசியில் அமர்ந்து அறிவாளியை முட்டாளாக்கி உட்கார வைத்த ராகு 12 ம் இடத்திற்கு வரப்போவதால் உங்களுக்கு வெளிநாட்டு பயணம்,தொழில் அமையும் வாய்ப்பை கொடுப்பார். வர்த்தக தொடர்பு ஏற்படும். சிலருக்கு வீடு மாற்றம் ஊர் மாற்றம் ஏற்படும்.

கேது ஆறாம் வீட்டிற்கு வரப்போகிறார். இதனால் புது வேலை வாய்ப்பு மற்றும் தொழிலை பெருக்கி லாபம் சம்பாதித்து சுகபோகங்களை பெருக்கி கொள்ளலாம். புதிய கடன்களை வாங்கினாலும் அது சுப விரயமாக மாற்றி பழைய கடன்களை அடைக்கலாம். நோய் நொடிகள் நீங்கும். வேலையில் ஏற்பட்ட போட்டி பொறாமை ஒழியும். வீண் விரைய வைத்திய செலவுகள் குறையும். உங்களுக்கு குடைச்சல் கொடுத்த எதிரிகள் பலவீனமடைவார்கள். வழக்குகள் சாதகமாகும்.

கடந்த காலங்களில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள் எல்லாம் முடிவுக்கு வரப்போகிறது. பிரபலங்களின் நட்பு கிடைக்கும். இழுபறியான பணிகள் முழுமையடையும். காரிய வெற்றிகள் கைகூடி வரப்போகிறது. ராகு கேது பெயர்ச்சி முன்னேற்றத்தையும் மாற்றத்தையும் தரும். மலைபோல வரும் துன்பம் எல்லாம் பனிபோல விலகி குடும்பத்தில் அமைதி ஆனந்தம் கிடைக்கும் காலம் வந்து விட்டது. வெள்ளிக்கிழமைகளில் புற்றுள்ள அம்மன் கோவிலுக்கு சென்று விளக்கேற்றி வழிபடுங்கள். ராகு கேது பெயர்ச்சி கோடீஸ்வர யோகத்தை தேடி தரப்போகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+