ராகு கேது பெயர்ச்சி: சிம்மம் ராசிக்கு சுற்றி சுற்றி ஆபத்து.. தலைக்கு மேல் சுத்தும் கத்தி
ராகு கேது பெயர்ச்சி: ராகு கேது பெயர்ச்சி உலகம் முழுவதும் உற்று கவனிக்கப்படுகிறது. அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ராகு கேது பெயர்ச்சி நாளை நடைபெறவுள்ளது. ராகு கேது பெயர்ச்சி உலகளவில் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும், இது சிம்மம் ராசியில் ஏற்படுத்தவுள்ள பலன்கள் ஆகியவற்றை இந்தக் கட்டுரையில் காணலாம்.
ராகு - கேது என்பதை சர்ப்ப கிரகங்கள். இதை நிழல் கிரகங்கள் என்றும் சொல்வார்கள். வாக்கிய பஞ்சாங்கப்படி 26.4.2025 தேதியும், திருக்கணிதப்படி நாளை (18.5.2025) ராகு கேது பெயர்ச்சி நடைபெறவுள்ளது. அதன்படி ராகு பகவான் மீனம் ராசியில் இருந்து கும்பம் ராசிக்கும், கேது பகவான் கன்னி ராசியில் இருந்து சிம்மம் ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார்கள்.

தாக்கம்
மற்ற கிரகங்கள் முன்னோக்கி நகரும். ராகு - கேது மட்டும் பின்னோக்கி நகரும். பொதுவாக ராகு -கேதுவுக்கு ஸ்தான பலம் இல்லை. கும்பம் என்பது சனி வீடு. தன்னுடைய சதய நட்சத்திர வீட்டில் ராகு பெயர்ச்சி ஆகிறார். அதனால் அங்கு ராகுவின் தாக்கம் அதிகமாக இருக்கும். அதேபோல கேது பகவான் தன்னுடைய மகம் நட்சத்திரம் உள்ள சிம்மம் வீட்டுக்கு பெயர்ச்சி ஆகிறார். இதுவும் முக்கியத்துவம் வாய்ந்தது.
போர்
போர் பதற்றம், இயற்கை சீற்றங்கள், பங்குச்சந்தை பின்னடைவு, தங்கம் விலை உயர்வு, அனைத்து வகையான வரிகளும் உயர்வு, ஆளும் அரசியல் தலைவர்களின் நிர்வாக சொதப்பல், கடன் சுமை என்று ராகு கேது கிரகங்களால் உலகில் நிறைய மாற்றங்கள் ஏற்படும். அதேபோல திடீர் பணக்கார யோகமும் ஏற்படும். இந்த ராகு கேது பெயர்ச்சி சிம்மம் ராசிக்கு கொடுக்கவுள்ள பலன்களை இந்தக் கட்டுரையில் காணலாம்.
சிம்மம்
சிம்மம் ராசிக்காரர்களுக்கு ராகு பகவான் ஏழாம் இடத்துக்கும், கேது பகவான் உங்கள் ஜென்ம ராசியிலும் பெயர்ச்சி ஆகிறார். ஏற்கனவே அஷ்டம சனி நிலவும் நிலையில், இது நல்ல அமைப்பு கிடையாது. ஆனாலும் குரு 11 ஆம் இடத்தில் இருந்து உங்களை பாதிப்புகளில் இருந்து பாதுகாப்பார்.
சுப காரியம்
குழந்தைகளின் உத்யோகம், கல்வி சம்பந்தப்பட்ட விஷயங்களில் நல்ல தகவல்கள் கிடைக்கும். வாழ்க்கை துணையுடன் இருந்த பிரச்னைகள் நீங்கி அன்யோன்யம் அதிகரிக்கும். ஆன்மிகத்தில் நாட்டம் ஏற்படும். குல தெய்வத்தின் ஆசி இருக்கும். சுப காரியங்களில் இருந்த தடைகள் விலகும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடைபெறும்.
வெளிநாடு
குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். கல்வி, உத்யோகம், தொழில் தொடர்பாக வெளிநாடு பயணம் முயற்சி செய்வோருக்கு வெற்றி கிடைக்கும். உத்யோகம், தொழில் தொடர்பான இடமாற்றங்கள் நல்லபடியாக அமையும். பூர்விக சொத்தில் இருந்த பிரச்னைகள் நீங்கும்.
நன்மை
பிரிந்த தம்பதிகள் ஒன்றிணைவார்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி உருவாகும். குழந்தைகள் விஷயத்தில் ஏற்றம் ஏற்படும். எதிர்பாராத நல்லதுகள் நடைபெறும். ஆன்மிகம், ஆராய்ச்சி தொடர்பான பயணங்கள் ஏற்படும். பயணங்களால் ஆதாயம் உள்ளது. வாழ்க்கையில் பல நல்ல அனுபவங்கள் கிடைக்கும். பொருளாதாரம் நன்றாக இருக்கும்.
கவனம்
அஷ்டம சனியின் தாக்கம் இருக்கத்தான் செய்யும். மனதில் குழப்பம் ஏற்படும். நிம்மதி பாதிக்கும். அவசரப்பட்டு எடுக்கும் முடிவுகள் வாழ்க்கையை தலைகீழாக புரட்டி போட்டு விடும். பொறுமையாக, சிந்தித்து செயல்பட வேண்டும். வாழ்க்கை துணையின் ஆரோக்கியத்தில் கவனமாக இருக்க வேண்டும். குழந்தைகள் விஷயத்தில் எச்சரிக்கை அவசியம். உங்களின் ஆரோக்கியத்திலும் கவனம் தேவை.
பரிகாரம்
தடுமாற்றங்கள் இருக்கும். தூக்கம் பாதிக்கப்படும். பணம் கொடுக்கல், வாங்கலில் கவனம் வேண்டும். அவமானம் ஏற்படும். வார்த்தைகளில் கவனம் தேவை. எதிலும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். அரசு, அரசியல் இருப்போர் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். பிரித்யங்கார, வாரகி, நரசிம்மர் வழிபாடு மூலம் பிரச்னைகள் குறையும்.
-
லுலு மால் கோயம்புத்தூர்..நூல் நூலாக தொங்கிய சிக்கன் லாலிபாப்.. அடுத்து கோவையில் நடந்த பெரிய ட்விஸ்ட் -
சிவி சண்முகம் சர்ச்சை பேச்சு.. இன்ஸ்டா போஸ்டில் நயன்தாரா பதிலடி.. இப்படி சொல்லிட்டாரே! குவியும் கமெண்ட்ஸ்! -
மொத்த பவரையும் காட்டிய இந்தியா.. கச்சா எண்ணெயுடன் குஜராத் வந்தது இந்திய டேங்கர் கப்பல்! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஷாக்! அதிரடியாக தூக்கப்பட்ட ரேஷன் கார்டுகள்! 41.41 லட்சம் குளோஸ்! -
அன்று 10 ஆயிரம் போட்டிருந்தால் இன்று ஒரு கோடி.. ஆச்சரியமாக வளர்ந்த பிரபல நிறுவனம் -
திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கண்ட காட்சி.. ஆடிப்போன பொதுமக்கள்.. அதிர வைத்த ஊழியர்கள் -
கடன் சுமை.. வீட்டை ஜப்தி செய்த அதிகாரிகள்.. தெருவோரம் தூங்கிய சீரியல் நடிகை.. நெகிழ வைத்த மாற்றம்! -
29 தொகுதிகள்.. காங்கிரஸை விட 1 கூடுதலாக.. நாளை மறுநாள் அதிமுக - பாஜக ஒப்பந்தம் கையெழுத்து? -
”90 சீட், 2.5 வருடம் முதல்வர்” பேரம் பேசுனாங்க.. விஜய் சொன்ன ஒரே வார்த்தை! போட்டு உடைத்த ஆதவ் அர்ஜுனா -
சீனாவுக்குச் சென்ற ரஷ்ய கப்பல்கள் திடீரென இந்தியா நோக்கி யூ-டர்ன்! Oil வருது -
சிறகடிக்க ஆசை: மீனா கண்ட காட்சி.. மீண்டும் ஜெயித்த ரோகிணி.. விஜயா வீட்டில் கொண்டாட்டம்! கடுப்பில் மனோஜ் -
ரெடியாகும் முக்கோண சாலை.. கோவை - திருச்சி - கரூர்.. தமிழ்நாட்டின் மிக முக்கிய பசுமை வழிச்சாலை!












Click it and Unblock the Notifications