ராகு கேது பெயர்ச்சி: டாப் கியரில் துலாம் ராசி.. இனி டாப் கிளாஸான மாற்றம்.. கொட்டும் அதிர்ஷ்டம்
ராகு கேது பெயர்ச்சி: ராகு கேது பெயர்ச்சி உலகம் முழுவதும் உற்று கவனிக்கப்படுகிறது. அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ராகு கேது பெயர்ச்சி இன்று நடைபெறுகிறது. ராகு கேது பெயர்ச்சி உலகளவில் என்ன மாதிரியான தாக்கத்தை ஏற்படுத்தும், இது துலாம் ராசியில் ஏற்படுத்தவுள்ள பலன்கள் ஆகியவற்றை இந்தக் கட்டுரையில் காணலாம்.
ராகு - கேது என்பதை சர்ப்ப கிரகங்கள். இதை நிழல் கிரகங்கள் என்றும் சொல்வார்கள். வாக்கிய பஞ்சாங்கப்படி 26.4.2025 தேதியும், திருக்கணிதப்படி இன்று (18.5.2025) ராகு கேது பெயர்ச்சி நடைபெறவுள்ளது. அதன்படி ராகு பகவான் மீன ராசியில் இருந்து கும்ப ராசிக்கும், கேது பகவான் கன்னி ராசியில் இருந்து சிம்ம ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார்கள்.

தாக்கம்
மற்ற கிரகங்கள் முன்னோக்கி நகரும். ராகு - கேது மட்டும் பின்னோக்கி நகரும். பொதுவாக ராகு -கேதுவுக்கு ஸ்தான பலம் இல்லை. கும்பம் என்பது சனி வீடு. தன்னுடைய சதய நட்சத்திர வீட்டில் ராகு பெயர்ச்சி ஆகிறார். அதனால் அங்கு ராகுவின் தாக்கம் அதிகமாக இருக்கும். அதேபோல கேது பகவான் தன்னுடைய மகம் நட்சத்திரம் உள்ள சிம்மம் வீட்டுக்கு பெயர்ச்சி ஆகிறார். இதுவும் முக்கியத்துவம் வாய்ந்தது.
போர்
போர் பதற்றம், இயற்கை சீற்றங்கள், பங்குச்சந்தை பின்னடைவு, தங்கம் விலை உயர்வு, அனைத்து வகையான வரிகளும் உயர்வு, ஆளும் அரசியல் தலைவர்களின் நிர்வாக சொதப்பல், கடன் சுமை என்று ராகு கேது கிரகங்களால் உலகில் நிறைய மாற்றங்கள் ஏற்படும். அதேபோல திடீர் பணக்கார யோகமும் ஏற்படும். இந்த ராகு கேது பெயர்ச்சி துலாம் ராசிக்கு கொடுக்கவுள்ள பலன்களை இந்தக் கட்டுரையில் காணலாம்.
துலாம்
துலாம் ராசிக்காரர்களுக்கு ராகு பகவான் ஐந்தாம் இடத்துக்கும், கேது பகவான் 11 ஆம் இடத்துக்கும் பெயர்ச்சி ஆகிறார். நீங்கள் மனதில் நினைக்கும் காரியங்கள் நிறைவேறும். கடந்த கால மன சஞ்சலங்கள் நீங்கும். மனதில் இருந்த துன்பங்கள் தூள் தூளாக உடைந்து, இன்பங்கள் அதிகரிக்கும். அதிர்ஷ்டங்கள் வீட்டு வாசக் கதவை தட்டும்.
புகழ்
இதற்கு முன்பு குரு பகவான் எட்டாம் இடத்தில் இருந்த காரணத்தால் ஊரே உங்களை ஏளனமான பார்த்து எள்ளி நகையாடியிருக்கும். தற்போது குரு பகவான் ஒன்பதாம் இடத்துக்கு வந்திருப்பதால் அந்த சூழ்நிலை மொத்தமாக மாறும். எதிர்ப்புகள் இருந்த இடத்தில் உங்கள் மீதான மதிப்பு, மரியாதை உயரும். சமூகத்தில் பெயர், புகழ் கிடைக்கும். உங்களின் வளர்ச்சியை ஆச்சர்யமாக பார்ப்பார்கள்.
வெற்றி
சனி பகவான் ஐந்தாம் இடத்தில் இருந்து குழப்பங்கள், குழந்தைகளின் ஆரோக்கியத்தில் பிரச்னை ஆகியவற்றை ஏற்படுத்தியிருப்பார். அவர் ஆறாம் இடத்துக்கு சென்றிருப்பதால் அந்தப் பிரச்னையும் இனி இல்லை. இறங்கிய காரியங்களில் எல்லாம் வெற்றி மேல் வெற்றி குவியும். வாழ்க்கையில் அடுத்தக்கட்டத்தை நோக்கி செல்லுமளவுக்கான வளர்ச்சி இருக்கும்.
வளர்ச்சி
உங்களின் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் காணப்படும். பொதுவாக ராகு அல்லது கேது ஐந்தாம் இடத்துக்கு வருவது மிகவும் சிறப்பான அமைப்பு. குரு, சனி, ராகு என்று அனைத்து கிரகங்களும் நல்ல நிலையில் உள்ளன. ஊரே உங்கள் வளர்ச்சியை பார்த்து வாழ்த்தும். கடந்த கால கஷ்டங்கள், போராட்டங்கள் அனைத்தும் நீங்கும். வெளிநாடு செல்வதற்கான முயற்சிகள் கைக்கூடும்.
உத்யோகத்தில் பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும். விலகி சென்ற உறவுகள் இணைவார்கள். குழந்தைகளுக்கு நல்ல மாற்றங்கள் கிடைக்கும். குழந்தைகள் கல்வியில் சிறப்பாக செயல்பட்டு பெயர், புகழ் வாங்குவார்கள். 11வது இடத்தில் உள்ள கேது பகவான் தொட்டத்தில் எல்லாம் லாபத்தை அள்ளி தருவார். மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும். நிம்மதி, ஓய்வு கிடைக்கும்.
பரிகாரம்
ராகு கேது பெயர்ச்சியை பொறுத்தவரை 12 ராசிகளில், அதிகளவு மாற்றங்களை சந்திக்க போகும் ராசி துலாம். குழந்தைகள் பாக்கியம் கிடைக்காதவர்களுக்கு குழந்தை பாக்கியம் உண்டாகும். வாழ்க்கை துணையுடன் மனக்கசப்பு நீங்கி அன்யோன்யம் அதிகரிக்கும். லட்சுமி நரசிம்மர் வழிபாடு, கால பைரவர் கோயிலில் விளக்கு ஏற்றி வழிபாடு செய்வது அற்புதமான பலன்களை கொடுக்கும்.
-
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை!












Click it and Unblock the Notifications