ராகு கேது பெயர்ச்சி: லக்கி பாஸ்கராக மாறும் கும்ப ராசியினர்.. குரு சண்டாள யோகத்தால் பண மழை கொட்டும்
ராகு கேது பெயர்ச்சி: 2025 ஆம் ஆண்டு ராகு கேது பெயர்ச்சி மே 19 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த ராகு கேது பெயர்ச்சியில் கும்பம் ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் நல்ல பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகத் தெரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களுடைய இடங்களை மாற்றுவது வழக்கம். இந்த ஆண்டின் சிறப்பாக சனி, குரு, ராகு கேது கிரகங்களின் பெயர்ச்சி ஒரே ஆண்டில் நடைபெறுகிறது. ராகு மற்றும் கேது என்பது நிழல் கிரகங்களாகும். சந்திரன் மற்றும் சூரியனால் கிரகணம் ஏற்படும் போது உருவாகும் நிழல் கிரகங்கள்தான் ராகு கேது. இவை பெரும்பாலும் தீங்கு மட்டுமே விளைவிக்கும் தன்மையுடையதாகும். (Rahu ketu peyarchi palan)

இந்த ராகு கேது பெயர்ச்சியால் சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தினாலும், சில ராசிக்காரர்களுக்கு நற்பலன்களையும் அள்ளிக் கொடுக்கும். ராகு கேது என்றாலே பாதிப்புதான் என்று மக்கள் நினைக்கின்றனர். அப்படி நிச்சயமாக இல்லை. நல்லதும், தீமையும் சேர்ந்த கலவைதான் ராகு கேது பெயர்ச்சி.
2025 ஆம் ஆண்டு மே 19 ஆம் தேதி ராகு கேது பெயர்ச்சி நடக்கிறது. மீன ராசியில் இருந்து ராகு கும்பத்துக்கும், கன்னியில் இருந்து கேது சிம்மத்துக்குப் போகிறார். பெரிய பிரச்சனைகளை சந்தித்து, மோசமான நிலைகளில் தள்ளப்பட்ட மீன ராசி மற்றும் கன்னி ராசியினருக்கு அதிர்ஷ்ட பலன்கள் கிடைக்கும். மிகப்பெரிய சந்தோஷம் கிடைக்கும். அந்த வகையில், இந்த ராகு கேது பெயர்ச்சியில் கும்பம் ராசியினருக்கு கிடைக்கப் போகும் பலன்கள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.
கும்பம்: கும்பம் ராசிக்காரர்கள் தான் ஸ்டார். கும்ப ராசியினருக்கு உள்ளதுபோல வேறு எந்த ராசியினருக்கும் இல்லை. ஜென்மசனியில் இருந்து விடுதலை அடைகின்றனர். ஜென்மத்தில் சனி இருக்கும்போது எந்த விஷயங்களையும் பாதி தான் செய்ய முடியும். எதாவது ஒரு பாதிப்பு இருந்து கொண்டே இருக்கும். தடைகளை சந்தித்து வந்திருப்பீர்கள். ஜென்ம சனி 2 ஆம் இடத்துக்குப் போவதால் நல்ல காலமாக இருக்கும்.
ஆனாலும், தற்போது ராகு வந்து அமர்ந்துள்ளார். சனியைவிட மோசமானது ராகு. ஆனால் குரு பார்வை ராகு மீது உள்ளதால் குரு சண்டாள யோகம் கும்ப ராசிக்காரர்களுக்கு உண்டாகப் போகிறது. உங்களுடைய சிந்தனைகள் பெரிதாக இருக்கும். எந்த ஒரு காரியத்தையும் பெரிதாக செய்வீர்கள். எண்ணங்கள் நன்றாக மாறும். மொத்தமாக மாறுவீர்கள். உங்களைப் பார்த்தாலே மற்றவர்களுக்கு வந்து பேச வேண்டும் என்று தோன்றும்.
புதிய தொழில் நிறுவனம் தொடங்குவதற்கான யோகம் உண்டாகும். பிரிந்த தம்பதிகள் ஒன்று சேருவார்கள். விவகாரத்தை நோக்கி போய்க் கொண்டிருப்பவர்களுக்கு பிரச்சனை சரியாகும். மறுமணம் நடக்கும் யோகம் உண்டு, குழந்தை பாக்கியம் உண்டாகும். மாணவ, மாணவிகள் தங்களுடைய அரியர்ஸ்களை கிளியர் செய்வார்கள்.
பஞ்சம ஸ்தானத்தில் இருக்கும் குரு உங்களுக்கு நல்ல பெரிய உதவிகளைச் செய்வார். இதுவரை இருள் சூழ்ந்த இடத்தில் வாழ்ந்து வந்திருப்பீர்கள். இனி உங்கள் மீது வெளிச்சம் பாயும். அற்புதமான வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். அதனை சரியாகப் பயன்படுத்திக் கொண்டால் உங்களுடைய வாழ்க்கையே முற்றிலும் மாறும். எதுவாக இருந்தாலும் கொஞ்சம் கடினமாக இருப்பது போலத் தோன்றும். ஆனாலும் அதனை முடித்துக் கொள்வீர்கள்.
ராகு என்றாலே வில்லங்கம் தான். வில்லங்கமான சொத்துகளை நீதிமன்றத்தின் ஒப்புதல் பெற்றும் வாங்கும் யோகம் உண்டாகும். 7 ஆம் இடத்தில் இருக்கும் கேதுவால் வாழ்க்கை துணையிடம் சிறு சிறு மன வருத்தங்களைக் கொடுக்கும். 2 ஆம் குழந்தையுடைய ஆரோக்கியத்தில் கொஞ்சம் கவனமாக இருப்பது நல்லது. மாற்று மதம், வேறு ஜாதியினர் மூலமாக பிரச்சனை ஏற்படுவதற்கான வாய்ப்புள்ளது. குட்டையாக இருப்பவர்கள், முகத்தில் தழும்பு இருப்பவர்களால் பிரச்சனை ஏற்படும்.
கூட்டுத் தொழிலில் பார்ட்னர்களுடன் பிரச்சனை ஏற்படும் வாய்ப்புள்ளது. ஆனால், அது உங்களுக்கு பாசிட்டிவாக மாறும். முழு தொழிலையும் நீங்கள் எடுத்து செய்யும் வாய்ப்பு உண்டாகும். நிறைய நல்ல விஷயங்கள் நடக்கும் காலகட்டமாக இருக்கும். ராகுவின் அருளால் பண வரவு அதிகமாகும். கையில் பண இருப்பு இருந்து கொண்டே இருக்கும். வரும் ராகு கேது பெயர்ச்சி உங்களுக்கு அமோகமான காலகட்டமாக இருக்கும்.
வழிபட வேண்டிய தெய்வம் - நாகராஜரை வழிபாடு உங்களுக்கு பெரிய மாற்றத்தை தரும். பாம்பு இருக்கக்கூடிய எந்த கோவிலாக இருந்தாலும் வழிபடலாம். நல்ல மாற்றத்தை தரும். ராஜ என்கிற பெயர் கொண்டவரால் நல்ல மாற்றம் ஏற்படும்.












Click it and Unblock the Notifications