ராகு கேது பெயர்ச்சி: மிதுனத்துக்கு அடிச்சான் பாரு அப்பாயிண்மென்ட் ஆர்டரு..ஃபாரினுக்கு சும்மா பறப்பீங்க
ராகு கேது பெயர்ச்சி: 2025 ஆம் ஆண்டு ராகு கேது பெயர்ச்சி மே 19 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இந்த ராகு கேது பெயர்ச்சியில் மிதுன ராசிக்காரர்களுக்கு கிடைக்கும் நல்ல பலன்கள், பரிகாரங்கள், வழிபட வேண்டிய தெய்வங்கள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் விரிவாகத் தெரிந்து கொள்ளலாம்.
ஒவ்வொரு கிரகங்களும் குறிப்பிட்ட கால இடைவெளியில் தங்களுடைய இடங்களை மாற்றுவது வழக்கம். இந்த ஆண்டின் சிறப்பாக சனி, குரு, ராகு கேது கிரகங்களின் பெயர்ச்சி ஒரே ஆண்டில் நடைபெறுகிறது. ராகு மற்றும் கேது என்பது நிழல் கிரங்களாகும். சந்திரன் மற்றும் சூரியனால் கிரகணம் ஏற்படும் போது உருவாகும் நிழல் கிரகங்கள்தான் ராகு கேது. இவை பெரும்பாலும் தீங்கு மட்டுமே விளைவிக்கும் தன்மையுடையதாகும். (Rahu ketu peyarchi palan)

இந்த ராகு கேது பெயர்ச்சியால் சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தினாலும், சில ராசிக்காரர்களுக்கு நற்பலன்களையும் அள்ளிக் கொடுக்கும். ராகு கேது என்றாலே பாதிப்புதான் என்று மக்கள் நினைக்கின்றனர். அப்படி நிச்சயமாக இல்லை. நல்லதும், தீமையும் சேர்ந்த கலவைதான் ராகு கேது பெயர்ச்சி.
2025 ஆம் ஆண்டு மே 19 ஆம் தேதி ராகு கேது பெயர்ச்சி நடக்கிறது. மீன ராசியில் இருந்து ராகு கும்பத்துக்கும், கன்னியில் இருந்து கேது சிம்மத்துக்குப் போகிறார். பெரிய பிரச்சனைகளை சந்தித்து, மோசமான நிலைகளில் தள்ளப்பட்ட மீன ராசி மற்றும் கன்னி ராசியினருக்கு அதிர்ஷ்ட பலன்கள் கிடைக்கும். மிகப்பெரிய சந்தோஷம் கிடைக்கும். அந்த வகையில், இந்த ராகு கேது பெயர்ச்சியில் மிதுன ராசியினருக்கு கிடைக்கப் போகும் பலன்கள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.
மிதுனம்: 9 ஆம் இடம் பாக்கிய ஸ்தானத்தில் ராகு வந்து குரு பார்வை கிடைக்கும் போது கும்பாபிஷேகம் கும்பகோணத்தில் நடக்கும். மிதுன ராசிக்காரர்கள், மிதுன ராசியினர் உள்ள குடும்பத்தினர் முன் நின்று இந்த நிகழ்ச்சியை நடத்தி வைக்கும் புண்ணியம் கிடைக்கும். இதன் மூலம் உங்களுடைய வம்சமே நன்றாக இருக்கும். குழந்தைகளுக்கு பெரிய வெற்றியைக் கொடுக்கும்.
நல்ல படிப்பு, அருமையான வாழ்வு, குழந்தைகளுடன் வெளிநாட்டில் செட்டில் ஆகும் யோகம் உண்டாகும். அரபு நாடு, இத்தாலி நாடுகளில் வேலைகள் கிடைப்பதற்கான வாய்ப்புள்ளது. அயல்நாட்டு வாசம் நிச்சயமாக மிதுனத்துக்கு உண்டு. மகான்கள் வழிபாடு அதாவது ராகவேந்திரர் வழிபாடு உங்களுக்கு நல்ல மாற்றத்தையும் முன்னேற்றத்தையும் தரும்.
ஜீவசமாதி அடைந்திருக்கும் சித்தர்கள், ஞானிகள் வழிபாடு அனைத்துவிதமான பிரச்சனைகளையும் தடுக்கும். பிள்ளைகளுக்கு நல்ல காரியங்கள் நடக்கும். திருமணம், குழந்தை பாக்கியம் உண்டாகும். வேலை நிமித்தமாக அலைச்சல் இருந்தாலும் பெரிய அங்கீகாரம், ராஜமரியாதை கிடைக்கும். அனைவராலும் புகழ்ந்து பாராட்டப்படுவீர்கள். பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும்.
3 ஆம் இடத்துக்கு வரக்கூடிய கேது ஆன்மிக நாட்டத்தைக் கொடுப்பார். யோகா, தியானத்தில் நாட்டம் அதிகரிக்கும். உடம்பை வளைக்கக்கூடிய நடனம் போன்ற யோகாக்களை மேற்கொள்வார்கள். வெளியில் நிறைய பேச மாட்டார்கள். மனதுக்குள் வைத்துக் கொள்வார்கள். சில பேருக்கு கழுத்து நரம்பில் பிரச்சனை ஏற்படும். இளைய சகோதரன் சகோதரி வழியாக சிறிய சிறிய பாதிப்புகள் ஏற்படும். மற்றபடி பெரிய பாதிப்புகள் ஏற்படாது.
மற்றபடி மிதுன ராசிக்காரர்களுக்கு பெரிய பாதிப்பு எதுவும் இல்லை. அருமையான, சிறப்பான காலகட்டமாக உங்களுக்கு இருக்கும். முழுமையாக தெய்வ அனுக்கிரகம், மகான்கள் அனுக்கிரகம் உள்ள ராசி என்றால் மிதுனம் தான். அந்த அளவுக்கு ராகு கேது பெயர்ச்சி மிதுனத்து அதிர்ஷ்டத்தை கொடுக்கும். புண்ணியத்தை கொடுக்கும் காலகட்டம்.
கவனமாக இருக்க வேண்டிய விஷயங்கள்: நரம்பு பிரச்சனை, சகோதர சகோதரிகளால் ஏற்படும் பிரச்சனைகளில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.
பரிகாரங்கள்: கட்டப்படக்கூடிய கோயில்களுக்கு சிறிய செங்கல் வாங்கிக் கொடுத்தால் கூட உங்களுக்கு யோகமான காலகட்டமாக இருக்கும்.
-
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
கஜானாவை நிரப்ப விஜய் அதிரடி நடவடிக்கை.. டாஸ்மாக் விதித்த கூடுதல் கட்டணம்.. மதுபான விலை உயர்வு? -
ராகுலுக்கு ஷாக் கொடுத்த திமுக! INDIA கூட்டணி தலைவர்களுடன் இடம்பெற்ற பேனர்.. காங். இதை எதிர்பார்க்கல!












Click it and Unblock the Notifications