ராகு கேது பெயர்ச்சி 2023: கோடீஸ்வர யோகம் தரும் ராகு தசை.. யாருக்கு திடீர் ஜாக்பாட் அடிக்கும்?
சென்னை: ராகு நிழல் கிரகம். தனது தசாபுத்தி காலத்தில் அள்ளிக்கொடுப்பார். புக்தி என்பது தசையில் ஒரு பாகம். அதாவது ஒரு கிரஹ தசைக்குள் மற்றைய கிரஹங்கள் வரிசையாக வந்து ஆட்சி செலுத்தும் காலம் புக்தி. தசை எந்தக் கிரகத்தினுடையதோ, அதன் புக்தி முதலில் ஆரம்பமாகும்.
ஏதாவது தவறு நடந்தால் அவனுக்கு புத்தி சரியில்லை என்பார்கள். தசா நாதனும் புத்தி நாதனும் நன்றாக இருந்தால் வாழ்க்கை கோடீஸ்வர யோகம் தேடி வரும். ஜாதகத்தில் ராகுவின் அமர்வைப் பொருத்து அவருக்கு நன்மைகளும் தீமைகளும் நடைபெறும்.
ராகு திசை ராகுபுக்தி: ராகு திசையில் ராகுபுக்தி 2வருடம் 8மாதம் 12நாட்கள் நடைபெறும். ராகு பலம் பெற்று அதன் சுயபுக்தி காலங்களில் மனதில் நல்ல உற்சாகமும், எடுக்கும் காரியங்கள் யாவற்றிலும் வெற்றியும், அரசு வழியில் ஆதரவும், செய்யும் தொழில் உத்தியோகத்தில் உயர்வுகளும் உண்டாகும், குடும்பத்தில் சுப காரியங்கள் கைகூடும். வீடு வண்டி வாகனம் வாங்கலாம். ராகு பலமிழந்திருந்தால் மனநிலையில் பாதிப்பு, தீராத நோயினால் அவதிப்படும் நிலை ஏற்படும் பிறந்த ஊரை விட்டும் உற்றார் உறவினர்களை விட்டும். குடும்பத்தை விட்டும் அன்னியர் வீட்டில் வாழ வேண்டிய நிலை ஏற்படும்.

ராகுதசா குருபுக்தி: ராகுதிசையில் குரு புக்தியானது 2 வருடம் 4 மாதம் 24 நாட்கள் நடைபெறும். ஜாதகத்தில் குரு பகவான் பலம் பெற்று அமையப் பெற்றால் பணவரவும், சமுதாயத்தில் பெயர் புகழ்,செல்வம் செல்வாக்கு உயரும். சொந்த ஊரிலேயே வீடுமனை, வண்டி வாகன வசதிகளுடன் வாழக் கூடிய யோகம் அமையும். அரசு வழியில் உயர் பதவிகளும், பெரியவர்களின் ஆசியும் கிட்டும். குருபகவான் பலமிழந்து அமையப் பெற்றால் புத்திர பாக்கியம் தடை ஏற்படும். தொழில் உத்தியோகத்தில் அவப்பெயர் குடும்பத்திலுள்ளவர்களுக்கு நோய்கள் உண்டாகும்.
ராகுதசா சனிபுக்தி: ராகு திசையில் சனிபுக்தியானது 2 வருடம் 10 மாதம் 6 நாட்கள் நடைபெறும். சனிபகவான் பலம் பெற்றிருந்தால் சுகமான வாழ்க்கை, சுப நிகழ்ச்சிகள் கைகூடும். தன தான்ய அபிவிருத்தி, தொழில் வியாபார நிலையில் முன்னேற்றம் ஏற்படும். ஆற்றல், ஆடை ஆபரண சேர்க்கை, அசையா சொத்துக்கள் வாங்கலாம். சனிபகவான் பலமிழந்து புக்தி நடைபெற்றால் எடுக்கும் காரியங்களில் தடை ஏற்படும். புத்திரதோஷம், வீண் வம்பு வழக்குகள், கடன் தொல்லையால் அவமானம் போன்ற அனுகூலமற்ற பலன்கள் ஏற்படும்.
ராகுதசா புதன் புக்தி: ராகுதிசையில் புதன் புக்தியானது 2 வருடம் 6 மாதம் 18 நாட்கள் நடைபெறும். புதன் பகவான் பலம் பெற்று அமைந்திருந்தால் நல்ல வித்தைகளிலும் கல்வி நிலையிலும் உயர்வு ஏற்படும். மனைவி பிள்ளைகளால் சிறப்பு புதுவீடு கட்டி குடி புகும் பாக்கியம் உண்டாகும். புதன் பலமிழந்திருந்தால் குடும்பத்திலுள்ளவர்களுக்கு ஆரோக்கியத்தில் பாதிப்பு, அரசு வழியில் பிரச்சனை, பகைவர்களால் தொல்லை ஏற்படும்.
ராகுதிசை கேது புக்தி: ராகுதிசையில் கேதுபுக்தியானது 1 வருடம் 18 நாள் நடைபெறும். கேது பலம் பெற்று நின்ற வீட்டதிபதியும் நல்ல நிலையில் அமையப்பெற்றால் வண்டி வாகனம் ஆடை ஆபரண சேரும். ஆன்மீக காரியங்களில் ஈடுபாடு தெய்வ தரிசனங்களுக்காக பயணங்கள் செல்லக் கூடிய வாய்ப்பு உண்டாகும் கேது சரியில்லாத நிலையில் இருந்தால் கணவன் மனைவியிடையே பிரச்சனை, பூமி மனை வண்டி வாகனங்களால் நஷ்டம், விஷத்தால் கண்டம் ஏற்படும்.
ராகுதிசை சுக்கிர புக்தி: ராகுதிசையில் சுக்கிரபுக்தி 3 வருடங்கள் நடைபெறும். சுக்கிரன் பலம் பெற்றிருந்தால் அரசு வழியில் உயர் பதவிகள், உத்தியோக நிலையில் உயர்வு, புகழ் பெருமை உண்டாகும். ஆடை ஆபரண சேர்க்கை வண்டி வாகன யோகம் திருமண சுபகாரியம் நடைபெறும் வாய்ப்பு கலை துறையில் சாதனை புரிந்து வெற்றி பெற கூடிய ஆற்றல் உண்டாகும். சுக்கிரன் பலமிழந்திருந்தால் பெண்களால் அவமானம், சர்க்கரை வியாதி, திருமணத் தடை, நினைத்த காரியங்களில் தோல்வி, பணநஷ்டம், இல்லற வாழ்வில் பாதிப்பு ஏற்படும்.
ராகுதிசையில் சூரிய புக்தி: ராகுதிசையில் சூரிய புக்தி 10 மாதம் 24 நாட்கள் நடைபெறும். சூரியன் பலம் பெற்றிருந்தால் அரசு வழியில் உயர் பதவிகள் கிடைக்கும். நல்ல தைரியம் துணிவு தந்தை வழி உறவுகளால் மேன்மை, செய்யும் தொழில் வியாபாரத்தில் மேன்மை ஏற்படும். சூரியன் பலமிழந்திருந்தால் தலைவலி, இருதய கோளாறு தொழில் வியாபாரத்தில் நஷ்டம். குடும்பத்தில் நிம்மதியற்ற நிலை ஏற்படும்.
ராகு திசையில் சந்திர புக்தி: ராகுதிசையில் சந்திர புக்தி 1 வருடம் 6 மாதம் நடைபெறும். சந்திரன் பலம் பெற்றிருந்தால் எடுக்கும் காரியங்களில் வெற்றி, நல்ல மன உறுதி ஏற்படும் வண்டி வாகன யோகம் அமையும். கடல் கடந்து அந்நிய நாட்டிற்கு சென்று சம்பாதிக்கும் வாய்ப்பு ஏற்படும். தாய் வழியில் மேன்மை உண்டாகும். பொருளாதாரமும் உயரும். சந்திரன் பலமிழந்திருந்தால் தாய்க்கு கண்டம் தாய் வழி உறவுகளிடம் பகை ஏற்படும். நீரினால் கண்டம் கடல் கடந்து செய்யும் பயணங்களால் அலைச்சல் வரும்.
ராகுதிசையில் செவ்வாய் புக்தி: ஜாதகத்தில் செவ்வாய் பலம் பெற்றிருந்தால் பூமி, மனை, வீடு, வண்டி வாகன யோகம் அமையும். தன தான்ய சேர்க்கைகள் அதிகரிக்கும். நல்ல உடல் ஆரோக்கியம் உயர் பதவிகள் கிடைக்கும். உடன் பிறந்த சகோதரர்களால் நன்மை ஏற்படும். செவ்வாய் பலமிழந்திருந்தால் உடல் நலத்தில் பாதிப்பு, எதிர்பாராத விபத்து ஏற்படும். சகோதர்களிடையே பகை ஏற்படும். தொழில் உத்தியோத்தில் விண் பிரச்சினை வரும்.
ராகு எந்த ராசிக்காரர்களுக்கு நன்மை செய்யும்: நல்லவன் கெட்டவன் என்று ராகு பார்ப்பதில்லை. பூர்வ புண்ணியத்தை இந்த ஜென்மத்தில் எந்த வயதில் அனுபவிக்கப் போகிறீர்கள் என்று உணர்த்துபவர் ராகுதான். பணம் கூரையை பிய்த்துக் கொண்டு வரும் என்று சொல்வது அவருக்கு சரியாக இருக்கும். ராகு திசை நடந்தால் கடல்கடந்து வெளியே செல்லுதல். வெளிநாடு செல்லும் யோகத்தை தருவார். வெளிமாநிலம் போய் பொருள் தேட வைப்பார். புத்திசாலித்தனமான தன லாபத்தை தருவார். உங்களுக்கு வருமானத்தை கொட்டுவார். ராகு திசை காலத்தில் தொழில் முன்னேற்றம் ஏற்படும். பஞ்சனையில் படுக்கும் வாய்ப்பை ராகு தருவார். புகழ் வெளிச்சம் பரவும். ராகுவினால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க ராகு காலத்தில் துர்க்கை அம்மனுக்கு எலுமிச்சை பழத்தில் விளக்கேற்றி வழிபடலாம். நவகிரகங்களில் ராகுவுக்கு அர்ச்சனை செய்வது, தேங்காய், உளுந்து போன்றவற்றை தானம் செய்யலாம். புற்றுள்ள அம்மன் கோவிலுக்கு சென்று பால் ஊற்றி வணங்கலாம்.
-
பாஜகவுடன் கூட்டணி அமைக்கலாமா? 98 தவெக மாவட்டச் செயலாளர்கள் ஆதரவு.. விஜய் எடுக்கப்போகும் முடிவு! -
சீனா அரண்டு நிற்குது.. மொத்த டிராகனுக்கும் சவால் விடும் தமிழ்நாட்டின் குட்டி சிட்டி.. ரியல் இன்ஜின்! -
வந்தாச்சு நீண்ட காலம் காத்திருந்த நல்ல செய்தி.. H-1b விசா கட்டுப்பாடுகள் நீக்கம்? புதிய மசோதா தாக்கல் -
இந்திய கப்பலுக்கு மட்டும் வழிவிட்ட ஈரான்.. ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து மும்பை வந்தடைந்த கப்பல் -
இந்திய வரலாற்றில் முதல்முறை.. தலைமைத் தேர்தல் ஆணையரை நீக்கக் கோரி நாடாளுமன்றத்தில் நோட்டீஸ்! -
கையில் இவ்வளவு பெரிய.. ஆயுதத்தை வைத்துக்கொண்டுதான்.. ஈரான் இவ்வளவு நாள் சைலண்ட்டா இருந்ததா.. மாஸ் -
இந்திய கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தியை கடக்க அனுமதியா? ஈரான் மறுப்பு.. ஆனாலும் நடந்த ட்விஸ்ட் -
அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்.. வெயிட்டான பதவியை கொடுக்கும் எடப்பாடி -
ஏப்ரல் 20க்கு பின் தமிழக சட்டசபைத் தேர்தல்.. மே மாதத்தில் வாக்கு எண்ணிக்கை? டெல்லியில் இன்று ஆலோசனை -
ஜனநாயகன் ஓடிடி உரிமை ரத்து? விஜய்யால் மேலும் 120 கோடி ரூபாய் நஷ்டம்? கலக்கத்தில் கேவிஎன் நிறுவனம்! -
அம்பானி கொடுத்த பெரிய ஆஃபர்! சிஎஸ்கே கடைசியாக தான் சீனில் வந்தது.. சஞ்சு சாம்சன் தந்தை சொன்ன மேட்டர் -
Gas bill: சென்னை பெருங்குடி ஹோட்டலில்! இட்லி, வடையுடன் கேஸ் சிலிண்டருக்கும் கட்டண வசூலா? உண்மை என்ன?












Click it and Unblock the Notifications