ராகு பெயர்ச்சி 2025: 3 ராசிகளுக்கு அள்ளிக் கொடுக்கும் ராகு.. அதிர்ஷ்ட காத்து வீசப்போகுது
ராகு பெயர்ச்சி 2025: புத்தாண்டின் சிறப்பாக சனிப்பெயர்ச்சி, குருப்பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி ஆகிய மூன்று பெயர்ச்சிகள் நடைபெறவுள்ளன. ராகு பகவான் கும்ப ராசிக்கு செல்வதால் ஒரு சில ராசிகள் அதிர்ஷ்டத்தையும், யோகத்தையும் அனுபவிக்கவுள்ளனர். எந்தெந்த ராசிக்காரர்கள் நற்பலன்களை அடையப் போகின்றனர் என்பது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக காணலாம்.. (Rahu ketu peyarchi 2025)
இருள் கிரகம், நிழல் கிரகம் என்று அழைக்கப்படும் ராகு கேது பெயர்ச்சி 2025 ஆம் ஆண்டில் மே 18 ஆம் தேதி நடைபெறவுள்ளது. பாம்பு கிரகங்களான இந்த கிரகங்கள் பெரும்பாலும் மோசமான பலன்களைத் தரும். சில சமயங்களில் இந்த கிரகங்கள் அமரும் ராசியைப் பொருத்து நல்ல பலன்கள் கிடைக்கும் வாய்ப்பும் உள்ளது.

நவகிரகங்களில் ராகு பகவான் அசுப கிரகமாக விளங்குவதால் எப்போதுமே பின்னோக்கிய பயணத்திலேயே இருப்பார். ராகு ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சியாவது அனைத்து ராசிகளுக்கு பல்வேறு தாக்கங்களை உண்டு பண்ணும். ராகு மற்றும் கேது இணை பிரியாத கிரகங்களாகும். ராகு பகவான் 18 மாதங்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றுவார். சனி பகவானுக்கு பிறகும் மிகவும் மெதுவாக நகரக்கூடியது ராகு கிரகமாகும்.
2025 புத்தாண்டில் ராகு மீனத்தில் இருந்து கும்ப ராசிக்கும், கேது கன்னி ராசியில் இருந்து சிம்ம ராசிக்கும் பெயர்ச்சியாக உள்ளன. இது சனிபகவானின் சொந்தமான ராசியாகும். அந்த வகையில், ராகு பெயர்ச்சியால் எந்தெந்த ராசிகள் அற்புத பலன்களையும், யோகங்களையும் அனுபவிக்கவுள்ளனர் என்று பார்க்கலாம்..
மேஷ ராசி (Rahu peyarchi for mesham): மீனத்தில் இருந்து கும்ப ராசிக்கு இடம்பெயர்ச்சியாகும் ராகு பகவான் மேஷ ராசிக்காரர்களுக்கு பல்வேறு சாதகமான பலன்களை அள்ளிக் கொடுக்கப் போகிறார். பண வரவு அதிகரிக்கும். வருமானம் பெருகும். வியாபாரம், தொழிலில் நல்ல லாபத்தைக் காண்பீர்கள். இதுவரை கடன் பிரச்னையால் துன்பப்பட்டு வந்தவர்கள் அந்தப் பிரச்னைகளில் இருந்தெல்லாம் மீண்டு வருவீர்கள். வியாபாரம், தொழிலை விரிவுபடுத்தும் எண்ணம் ஏற்படும்.
புதிய முதலீடுகள் லாபகரமானதாக அமையும். ரியல் எஸ்டேட் போன்ற நிலம் தொடர்பான தொழில்கலில் முன்னேற்றத்தைக் காண்பீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கணவன், மனைவிக்கிடையே இணக்கமான சூழல் ஏற்படும். காதலிப்பவர்களுக்கு சிக்கல்கள் அனைத்தும் தீரும்.
மகர ராசி (Rahu peyarchi for magaram): ராகு பெயர்ச்சியால் நற்பலன்களைப் பெறப்போகும் ராசியில் மகர ராசிக்காரர்களும் ஒருவர். நிதி சார்ந்த ஆதாயங்கள் உங்களுக்கு கிடைக்கும். செலவுகள் குறையும். சேமிக்கத் தொடங்குவீர்கள். அனைத்து சுபகாரியங்களும் உண்டாகும். உங்களுடைய பேச்சு திறமையாலேயே அனைத்து விஷயங்களிலும் வெற்றியையும், முன்னேற்றத்தையும் காண்பீர்கள்.
குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும். கணவன் மனைவிக்கு இடையே நெருக்கம் அதிகரிக்கும். திருமண வாழ்வில் சிறப்பான மாற்றத்தைக் காண்பீர்கள். திருணத்தை எதிர்பார்த்துக் காத்திருந்தவர்களுக்கு திருமண யோகம் கைகூடி வரும். குடும்பத்தில் பொருளாதாரம் சார்ந்த முன்னேற்றம் இருக்கும். தொட்ட காரியங்கள் அனைத்தும் துலங்கும். எடுத்த வேலைகளை சரியாக செய்து முடித்து அதில் வெற்றி காண்பீர்கள். நண்பர்களால் ஆதாயம் உண்டாகும்.
ரிஷப ராசி (Rahu peyarchi for rishabam): ரிஷப ராசிக்காரர்களுக்கு ராகுவின் ஆசிர்வாதம் அமோகமாக இருக்கிறது. வெளியூர், வெளிநாட்டுப் பயணங்கள் நல்ல பலன்களை உண்டாக்கும். வியாபாரம் தொழிலில் முன்னேற்றத்தைக் காண்பீர்கள். புதிய தொழில்களைத் தொடங்குவீர்கள். சுற்றுலா, பயணம் செய்வதற்கான வாய்ப்புகள் ஏற்படும்.
புதிய வாகனம், வீடு வாங்கும் யோகம் உண்டாகும். பொருளாதாரத்தில் உங்களுக்கு நல்ல முன்னேற்றம் இருக்கும். கணவன் மனைவிக்கிடையே அந்நியோன்யம் அதிகரிக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமானதாக இருக்கும். தைரியம், தன்னம்பிக்கை உண்டாகும். காதல் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும். எடுத்த காரியங்களை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications