மேஷம் முதல் மீனம் ராசிகளுக்கான பலன்கள்.. இன்றைய நாள் உங்களுக்கு எப்படி இருக்கும்?
சென்னை: மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான இன்றைய (ஜனவரி 26) பலன்கள் குறித்து விரிவாகப் பார்க்கலாம்...
மேஷம்: பிரச்னைகள் விலகும் நாளாக இருக்கும். வியாபாரத்தில் வராமல் இருந்து வந்த பணம் வந்து சேரும். வீட்டில் விருந்தினர் வருகைக்கான வாய்ப்பு உண்டு. உத்தியோகத்தில் இருப்பவர்கள் வெளியூர் பயணம் செய்வதற்கான சூழல் உண்டாகும்.

ரிஷபம்: கணவன், மனைவிக்குள் விட்டுக் கொடுத்து போவது நல்லது. வாகனத்தில் இருந்து வந்த பழுதுகள் அனைத்தும் நீங்கும். வியாபாரம், தொழிலில் ஏற்றம் ஏற்படும். அலுவலகத்தில் சக ஊழியர்களுடனும், மேலதிகாரிகளிடமும் இணக்கமாக இருப்பது நல்ல பலன்களைத் தரும்.
மிதுனம்: வியாபாரத்தில் புதிய பங்குதாரர் கிடைப்பதற்கான வாய்ப்பு உருவாகும். வேலை, வியாபாரம், தொழிலில் உங்களுடைய பொறுப்புகள் ஒருபடி கூடும். பழைய பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பீர்கள். வழக்கு தொடர்பான விஷயங்கள் உங்களுக்கு சாதகமாக இருக்கும்.
கடகம்: உத்தியோகத்தில் சிறப்பாக விளங்குவீர்கள். நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். எதிர்பார்த்த நபர்களிடம் இருந்து உதவிகள் வந்து சேரும். நிர்வாகத் திறனை வெளிப்படுத்தும் சூழல் உருவாகும். குழந்தைகளின் திறமைகளைக் கண்டறிவீர்கள். வியாபாரத்தில் பங்குதாரர்களால் ஆதாயம் ஏற்படும்.
சிம்மம்: ஆன்மிகம் தொடர்பான விஷயங்கள், திருவிழாக்களை முன்னின்று நடத்துவதற்கான வாய்ப்பு உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே அன்பு பெருகும். பண வரவு அதிகரிக்கும். உடல்நலனில் முன்னேற்றம் ஏற்படும். வேலை செய்யும் இடத்தில் வீண் வாதங்களை தவிர்ப்பது நல்லது. வியாபாரம், தொழிலில் நல்ல லாபம் உண்டாகும்.
கன்னி: குடும்பத்தில் இருந்து வந்த குழப்பங்கள் விலகும். கணவன், மனைவிக்குள் அன்பு பெருகும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். நீண்ட நாள்களாக தேடி வந்த முக்கிய ஆவணம் கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல லாபத்தைக் காண்பீர்கள்.
துலாம்: குடும்ப உறவுகளுடைய ஒத்துழைப்பு கிடைக்கும். நல்ல மாற்றங்கள், திருப்பங்கள் உண்டாகும். பண வரவு அதிகரிக்கும். கோபம் குறையும். அலுவலகத்தில் உங்களுடைய மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். வியாபாரத்தில் ஆதரவான சூழல் உண்டாகும். பங்குதாரர்கள் அனுசரித்துச் செல்வார்கள்.
விருச்சிகம்: வெளியூர் பயணங்களால் அலைச்சல் ஏற்படுவதற்கான வாய்ப்புண்டு. ஆனால், மன நிறைவடைவீர்கள். பழைய பாக்கிகள் வசூலாகும், சக ஊழியர்களுடன் அனுசரித்துச் செல்வது நல்லது. இணக்கமான போக்கையே கடைபிடியுங்கள். உயர் அதிகாரிகளின் பாராட்டைப் பெறுவீர்கள்.
தனுசு: பணிச் சுமை அதிகரிக்கும். வேலையை முடிப்பதில் சற்று குழப்பமடைவீர்கள். குடும்பத்தில் உறவுகளிடையே சிறிய குழப்பங்கள் வரும். குழந்தைகளால் செலவு அதிகரிக்கும். விவாதம் செய்வதை தவிர்ப்பது நல்லது. வியாபாரம், தொழிலில் கவனமாக இருப்பது நல்லது.
மகரம்: உங்களுக்கு எதிரான விஷயங்களை எல்லாம் முறியடித்து வெற்றி அடைவீர்கள். பண வரவு அதிகரிக்கும். சகோதரர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். தொழிலில் போட்டி குறையும் ஆதாயம் உண்டாகும். அலுவலக ரீதியாக முக்கியப் பிரமுகர்களை சந்திக்கும் வாய்ப்பு ஏற்படும்.
கும்பம்: கடினமான வேலைகளையும் எளிமையாக செய்து முடிப்பீர்கள். குடும்ப உறவுகள் உங்களுடைய பேச்சுக்கு மரியாதை கொடுப்பார்கள். வெளியூர் பயணம் மேற்கொள்வதற்கான வாய்ப்பு ஏற்படும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றத்தை காண்பீர்கள்.
மீனம்: கணவன், மனைவிக்கிடையே இருந்து வந்த மனக் கசப்புகள் நீங்கி மகிழ்ச்சி அதிகரிக்கும், பண வரவு திருப்திகரமாக இருக்கும். பிள்ளைகளின் எண்ணத்தை கேட்டறிந்து அவர்களுக்கு வேண்டியதை செய்வீர்கள். வியாபாரம், உத்தியோகம் சிறப்பாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி பெருகும்.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications