ஜூலை முதல் பாதி ராசி பலன்: கும்பம், மீனம் ராசியினருக்கு காத்திருக்கும் அதிர்ஷ்ட திருப்பம்!

Subscribe to Oneindia Tamil

ஜூலை மாத பலன்கள்: ஜூன் மாதம் நிறைவடைந்து நாளை முதல் ஜூலை மாதம் பிறக்கவுள்ளது. அந்த வகையில், ஜூலை 1 முதல் 15 ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் கும்பம் மற்றும் மீனம் ராசியினருக்கு கிடைக்கும் பலன்கள் குறித்து பார்க்கலாம்.

கும்பம் ராசி பலன்

கும்ப ராசியினருக்கு யோகம் கொட்டும் காலகட்டம். பிள்ளைகள் விஷயத்தில் தேவையில்லாத ஆராய்ச்சிகளைத் தவிர்ப்பது நல்லது. வயிறு, கழிவுப் பாதை, ஜீரண தொந்தரவுகளில் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும். 60 வயதைக் கடந்தவர்கள் ஆரோக்கியத்தில் விஷயத்திலும், எதிரிகள் விஷயத்திலும் கவனமாக இருக்க வேண்டும். எதிரிகளை சாதாரணமாக எடை போடுவதை தவிர்ப்பது நல்லது.

rasi-palan-the-miracle-awaiting-kumbam-meenam-rasi-people-in-the-next-15-days-full-predictions-f

ஏற்றம்

தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு ஏற்றத்தை ஏற்படுத்தும். இழுபறியாக இருந்த அமைப்புகள் நீங்கும். தொழில் ரீதியாக நிறைய நன்மைகளும், ஆனந்தமும் ஏற்படுத்திக் கொடுக்கும். 60 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு தொழில், உத்தியோகம், வியாபாரம், படிப்பு சம்பந்தப்பட்ட விஷயத்தில் நீங்கள் நினைத்தது நடக்கும்.

வழிபாடு

பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். அசையும், அசையா பொருள்கள் சேர்க்கை உண்டாகும். படிப்புத் தடை, உத்தியோகத் தடை, வியாபாரத் தடை பரிபூரண நிவர்த்தியாகும். ஆரோக்கியத்திலும், வாகனத்திலும் கவனம் தேவை. சர்பேஸ்வரரை தொடர்ந்து வழிபாடு செய்து வருவது ஏற்றத்தைக் கொடுக்கும். கோளார் பதிகத்தை தொடர்ந்து சொல்வது நன்மை.

மீனம் ராசி பலன்

மீன ராசியினருக்கு உறவுகள் தொடர்பான விஷயத்தில் ஏற்றம் உண்டாகும். சளி, ரத்தத்தில் பரவும் தொற்று நோய்கள், அலர்ஜி போன்ற விஷயங்களில் கவனம் தேவை. இடமாற்றம், தொழில் மாற்றம், உத்தியோக மாற்றம், வியாபார மாற்றங்கள் என நல்ல மாற்றங்கள் ஏற்படும் காலகட்டம். இழுபறியாக இருந்த விஷயங்களில் பரிபூரண நிவர்த்தியாகும்.

சிக்கல் தீரும்

தொழிலில் இருந்து வந்த சிக்கல்கள் தீரும். லாபம் காணப்படும். குடும்பத்தில் சந்தோஷம் ஏற்படும். வயிறு, கழிவுப்பாதை தொடர்பான விஷயத்தில் கவனம் தேவை. புரோபயோட்டிக் உணவுகளை சேர்த்துக் கொள்வது நன்மை பயக்கும். தினந்தோறும் 40 நிமிடம் உடற்பயிற்சி செய்வது நன்மை பயக்கும். உறவு, தொழில், உத்தியோகம், வியாபாரத்தில் ஏற்றம் ஏற்படும்.

வழிபாடு

தனிப்பட்ட முறையில் நன்மை ஏற்படும். குலதெய்வ வழிபாடு ஏற்றத்தைத் தரும். திருப்பதி பெருமாள் வழிபாடு செய்வது, கோவிந்த நாமங்களை உச்சரிப்பது நன்மையைத் தரும். பிள்ளைகளின் படிப்பு உத்தியோகம், வியாபாரம், படிப்பில் அதீத கவனம் தேவை.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+