அடுத்த 108 நாட்களில் ஏற்பட போகும் மாற்றம் – டபுள் புரோமோஷன் பெறும் 6 ராசிகள்
ராசி பலன்: குருவின் பூரட்டாதி நட்சத்திரத்தில் சனி பகவான் அக்டோபர் 8 முதல் 108 நாட்களுக்கு சஞ்சாரம் செய்கிறார். குரு, சனி ஆகிய இரண்டு முக்கிய கிரகங்களிலும் மாற்றம் நிகழ்கிறது. இது 12 ராசிகளிலும் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த 108 நாட்களில் அதிர்ஷ்டம் பெற போகும் 6 ராசிகள் குறித்து இந்த ஜோதிட கட்டுரையில் பார்க்கலாம்.
குரு பூசம் நட்சத்திரத்தில் சஞ்சாரம் செய்யுக்கூடிய உன்னதமான குருபுஷ்ய யோகம் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ளது. அதற்கு முன்பாக அக்டோபர் 8 ஆம் தேதி முதல் சனி குருவின் பூரட்டாதி நட்சத்திரத்தில் 108 நாட்களுக்கு சஞ்சாரம் செய்கிறார். நவம்பர் 25 ஆம் தேதி வரை சனி வக்கிரமாகியும், அதற்கு பின்னர் வக்கிர நிவர்த்தியாகியும் சஞ்சாரம் ஆகிறார்.

நவம்பர் 25 வரை சனி வக்கிரம் என்பதால் ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம் அல்லது மீனம் ராசியில் உங்களுக்கு வக்கிரமான கிரகம் இருந்தால் அதிர்ஷ்டத்தை கண்டிப்பாக கொட்டிக் கிடக்கும். வக்கிரமாக கிரகம் இல்லையென்றால் பயப்பட வேண்டிய அவசியம் இல்லை. நவம்பர் 25 ஆம் தேதிக்குப் பின்னர் சனி வக்கிர நிவர்த்தி ஆன பிறகு அதே பூரட்டாதி நட்சத்திரத்தில் உத்திரட்டாதியை நோக்கிச் செல்லும். அதற்குப் பிறகு கிரகங்கள் வக்கிரமாக இல்லாத ராசியினருக்கு அற்புதமான யோகங்கள் கிடைக்கும்.
பொதுவாக குருவின் நட்சத்திரத்தில் பயணக்கும் சனி வக்கிரம், சனி வக்கிர நிவர்த்தி ஆகியவை அற்புதமான காலகட்டமாக இருக்கும். ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம், தனுசு, மீனம் ஆகிய ஆறு ராசிகளுக்கு உத்யோகம், தொழிலில் அற்புதமான மாற்றங்கள் நிகழும். உத்யோகத்தில் தடைபட்ட பலன்கள் நிவர்த்தியாகி பதவி உயர்வு, சம்பள உயர்வு உள்ளிட்ட நல்ல பலன்கள் தேடி வரும். இந்த ராசிகளுக்கு எல்லாவற்றிலும் வெற்றி கிடைக்கும்.
ரிஷபம்: உத்யோகம், தொழிலில் கடந்த காலங்களில் விட்டுப் போன வாய்ப்பு எல்லாம் தேடி வரும். உத்யோகம், தொழிலில் பெரிய மாற்றங்கள் உண்டு. நண்பர்களால் ஆதாயம் பெறுவீர்கள். பூர்வீக சொத்தில் இருந்த பிரச்சனைகள் தீரும். முயற்சிகள் அனைத்திலும் சிறப்பான வெற்றி கிடைக்கும்.
கடகம்: பூர்விக சொத்தில் இருந்த பிரச்சனைகள் தீரும். வெளிநாடு செல்வதற்கான முயற்சியில் வெற்றி கிடைக்கும். வேற்று மொழி மனிதர்களால் அதிக லாபம் பெறுவீர்கள். உத்யோகம், தொழிலில் திடீர் அதிர்ஷ்டம் உண்டாகும். அரசு உத்யோகத்திற்கு முயற்சி செய்வோருக்கு நல்ல செய்தி தேடி வரும்.
கன்னி: உங்களின் வாழ்க்கை துணையால் நல்ல அதிர்ஷ்டம் கிடைக்கும். தொழிலில் புதிய கூட்டாளிகளால் ஏற்றம் உண்டு. நீங்கள் எடுக்கின்ற முயற்சிகள் அனைத்திலும் வெற்றிகள் குவியும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் உண்டு. கடன் சுமை குறையும். உத்யோகம், தொழிலில் எதிர்பார்த்த மாற்றங்கள் நடக்கும்.
விருச்சிகம்: தடைபட்ட சுப காரியங்கள் நிறைவேறும். நீங்கள் எதிர்பார்த்தபடியான வரன்கூடி திருமண யோகம் உண்டாகும். ஆண் வாரிசு பிறப்பதற்கான வாய்ப்பு உள்ளது. ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும். அதனுடன் நிலம், வீடு, வண்டி, வாகனம் போன்ற அசையும், அசையா சொத்து சேர்க்கையும் உண்டு.
தனுசு: சொந்த வீடு கனவு நனவாக போகிறது. நிலத்தில் அதிக முதலீடு செய்வீர்கள். முதலீடுகளில் லாபம் கூடும். தோட்டம் வாங்குவீர்கள். குழந்தைகளின் கல்வியில் முன்னேற்றம் காணப்படும். கல்வி நிறுவனங்களில் உத்யோகம் கிடைக்கும். பிரிந்த உறவுகள், நண்பர்கள் ஒன்றிணைவார்கள். ஆரோக்கியத்தில் முன்னேற்றம் காணப்படும்.
மீனம்: மிகப்பெரிய காரியத்தை கூட எளிதாக செய்து முடிப்பீர்கள். ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சனைகள் சரியாகும். சுப காரிய தடைகள் நீங்கும். குழந்தை பாக்கியம் உண்டாகும். உத்யோகத்தில் மாற்றம், தொழிலில் ஏற்றம், புதிய முயற்சிகள் என்று நீங்கள் தொட்டதெல்லாம் வெற்றியாக மாறும்.
-
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக












Click it and Unblock the Notifications